நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, டிசம்பர் 27, 2019

மார்கழி தரிசனம் 11

தமிழமுதம்

அல்லவைதேய அறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.. (096)
***
அருளமுதம்

ஸ்ரீ சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 11


கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம்புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்!..
***

ஆழ்வார் அமுதம்

ஸ்ரீ பரிமள ரங்கநாதர் - திரு இந்தளூர் - மயிலாடுதுறை நகர்  
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்..(2182) 
-: பூதத்தாழ்வார் :- 


ஓம் ஹரி ஓம்  
* * *

சிவ தரிசனம்
திருமயிலாடுதுறை



உரவெங் கரியின் உரி போர்த்த
பரமன் உறையும் பதி என்பார்
குரவஞ்சுர புன்னையும் வன்னி
மருவும் மயிலாடு துறையே..(1/38)
-: திருஞானசம்பந்தர் :-

திருவாசகத் தேன்
ஸ்ரீ மயூரநாதர்
கயிலாய தரிசனம் 
அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை
ஆனந்த மாய்க்கசிந் துருக
என்பரம் அல்லா இன்னருள் தந்தாய்
யானிதற் கிலன்ஓர் கைம்மாறு
முன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப் பரந்த
முத்தனே முடிவிலா முதலே
தென்பெருந் துறையாய் சிவபெருமானே
சீருடைச் சிவபுரத்தரசே..
-: மாணிக்கவாசகர் :-
* * *

தேவி தரிசனம்
ஸ்ரீ அபயாம்பிகை - மயிலாடுதுறை
வாள்நுதற் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை பேதைநெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை காணும்அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே!.. (040) 
-: அபிராமிபட்டர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
* * *

13 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. மிக சிறப்பு....

    ஆண்டாள் திருவடிகளே சரணம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆண்டாள் திருவடிகள் போற்றி...

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. சிறப்பான பகிர்வு.
    படங்களும், பாடல்களும் அருமை.
    அபயாம்பிகை தரிசனம் மனதுக்கு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அபயாம்பிகை தரிசனம் மனதுக்கு மகிழ்ச்சி...

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அபயாம்பாள் அழகோ அழகு! கோயிலில் நிதானமாகப் பார்க்கவிடவில்லை. :( பரிமளரங்கனையும் பார்த்தது குறித்து எழுதவே இல்லை. எல்லாம் காலையில் அருமையான தரிசனம். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
      பரிமளரங்கன் தரிசனம் பற்றி எழுதுங்கள்.

      மகிழ்ச்சி.. நன்றியக்கா...

      நீக்கு
  5. தமிழமுதத்தையும் பூதத்தாழ்வாரின் ' அன்பே தகளியாய்' பாடலையும் படிக்க மனதிற்கு நிறைவாயிருந்தது. சிறப்பான பதிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி....

      நீக்கு
  6. சிறப்பான பாடல்கள். திருவாசகத் தேன் - திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயம் தான்...

    தொடரட்டும் தேனான பதிவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் - உண்மை...

      அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..