நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூலை 15, 2019

நின் புகழ் வாழ்க..

இன்று பெருந்தலைவர் பிறந்த நாள்..

15.7.1903 < > 2.10.1975
நீரற்றுப் போனாலும் நிலத்தில் - தங்கள் 
நினைவற்றுப் போகுமோ மனத்தில்!..
நன்றி - VHNSN College., Viruthunagar.. 
நன்றி - VHNSN College., Viruthunagar.. 
நன்றி - VHNSN College., Viruthunagar.. 
நன்றி - VHNSN College., Viruthunagar.. 
நன்றி - விருதுநகர் இந்து நாடார் செந்திகுமார நாடார் கல்லூரி இணையதளம்.. 
10.11.1957 
ஒரே நாளில்
தமிழகத்தில் இரண்டு அணைக்கட்டுகளைத்
திறந்து வைத்த மகராஜன்...


அன்று
அன்னைத் தமிழ் நாட்டுக்கென
அணைக் கட்டுகளுடன் பழகிக் கிடந்தனை!..

இன்று
நீ வாழ்ந்த மண்ணிலன்றோ
அரசியல் வியாதிகளும் அரசாங்க ஊழியமும்
பணக் கட்டுகளுடன் புரண்டு கிடக்கின்றன!..

நல்லவேளை.. நின்றன் பாதத்தூளியை
கண்ணில் ஒற்றிக் கொண்டேன்.
நீ வாழ்ந்த காலத்திலேயே!...


மகராசன்.. நீங்க மறுபடி ஒருக்க வந்து பொறக்க மாட்டியளா!... 
அறம் சார்ந்த ஆட்சியை 
அரசியலை நடத்தியவர் - பெருந்தலைவர்.. 

அனைவரையும் படிக்க வைத்தார்..
படித்தவர்களுக்கு வாழ்வு கொடுத்தார்..

அவரால் முன்னுக்கு வந்த
லட்சோபலட்சம் பேர்களுள் எளியேனும் ஒருவன்..

ஐயாவின் பிறந்த நாளாகிய இன்று
அவருடைய திருவடிகளை நினைத்து
வணங்கி எழுகின்றேன்..

இது கூட எங்கள் ஐயாவுக்குப் பிடிக்காது தான்!..
ஆனாலும், என் பிறவி கடைத்தேற வேண்டுமே!..

பெருந்தலைவரின் புகழ் 
என்றென்றும் வாழ்க!.. 
* * *

22 கருத்துகள்:

  1. நல்லாச் சொன்னீங்க... அவர்போல வருமா? தன் நன்மை நினைக்காது ஊர் நன்மை நினைத்த பெருந்தகை. பெருந்தலைவர் என்கிற வார்த்தைக்கு ஒரே பொருத்தம்.

    குட்மார்னிங்.

    பதிலளிநீக்கு
  2. தஞ்சை ராஜா ரெஸ்ட் ஹவுஸில் தங்கியிருந்த அவரை ஒருமுறை அப்பா சந்திக்கச் சென்று பார்த்து வந்தபோது நானும் உடன் சென்று வந்திருக்கிறேன் என்று அப்பா, அண்ணண் சொல்லக்கேள்வி. என் நினைவில் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...

      பெருந்தலைவர் அவர்களை பத்தாம் வகுப்பு படிக்கும் போதும் அதன் பிறகுமாக இரண்டு தடவை பார்த்திருக்கிறேன்...

      கும்பகோணத்தில் மகாமகக்குளத்தின் மேல் கரையில் அப்போது இருந்த தங்கும் விடுதியில் 10/15 பேர் மாணவப் பருவத்தினராக சென்று பார்த்தோம்..

      வாசலில் அமர்ந்திருந்தார்கள்..
      அப்போது தான் அருகில் சென்று தொட்டுக் கும்பிட்டது...

      என்னடே.. இங்கே சுத்திக்கிட்டு இருக்கீய.. - என்று கேட்டதாக நினைவு..

      நீக்கு
  3. நல்லதொரு மனிதர். அவர் போன்ற நிறைய பேர் இப்போதைய தேவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அருமையான பதிவு.தினம் வசந்த் தொலைக்காட்சியில் இவர் பாடலை கேட்கிறேன், பார்க்கிறேன்.

    பெருந்தலைவர் பற்றி அவர் செய்த நல்லவைகளை நினைத்து மகிழ்ச்சியும் மற்றவர்கள் இப்படி இல்லையே! என்ற ஆதங்கமும் பட வேண்டி இருக்கிறது.
    பெருந்தலைவர் அவர்களுக்கு வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      தன்னலமில்லா தலவர்கள் பிறப்பார் ஆயிரத்தில் ஒருநாளே.. என்பார் கவியரசர்..

      இன்னும் எத்தனை காலம் ஆகுமோ..

      அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. ஒரு மாமனிதரைப்பற்றி இன்னும் எவ்வளவோ சொல்லலாம்.

    அவர் போட்ட கோதுமை களி சாப்பிட்டவர்களில் நானும் ஒருவன்.

    வாழ்க அவர்தம் புகழ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...

      நானும் பள்ளியில் மதிய உணவாக சோள உப்புமா சாப்பிட்டவன் தான்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. 67 தேர்தலின் போது திரு காமராஜ், பக்தவத்சலம், டிடிகே அனைவரையும் ஒருங்கே சந்தித்தேன். காமராஜ் நான் என்ன பண்ணுகிறேன் எனக் கேட்டுவிட்டு படிக்கிற பொண்ணு, உனக்கு இதெல்லாம் தேவை இல்லை. நல்லாப் படி. அதிலும் பாப்பாரப் பொண்ணு. படிப்பு தான் முக்கியம் என்றார். பக்தவத்சலம் பேசவே இல்லை. டிடிகே விசாரித்துவிட்டுக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும்
      கூடுதல் செய்தியும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. எத்தகைய மேன்மை பொருந்திய தலைவர் ....

    நாட்டிற்கு நலம் நினைத்த நல்லவர்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபிரேம்..
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. நீங்க காமராஜர் படத்தில் இளையராஜா இசையமைத்திருந்த 'நாடு பார்த்ததுண்டா' பாடல் மனதில் ரீங்காரமிட்டது.

    வாயால் வடை சுடுபவர்கள் மத்தியில், ஏழைகளுக்கான தலைவர் அவர். அவரையும் தேர்தல் அரசியலில் தோற்கடித்த சிவகாசி மக்கள் தமிழர்களின் சாபத்துக்கு உரியவர்கள்.

    பாருங்க...குழந்தைகள் உணவு சாப்பிடும் இடத்துக்கு வெறும் காலுடன் காமராசர் நடந்துவருவதை..

    அவருக்குப் பின் வந்த அரசுகளுக்கு அணைக்கட்டு என்றாலே என்னவென்று தெரியுமான்னு தெரியலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை...

      அதுதான் பணக்கட்டு என்று சொல்லியாயிற்றே...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. நல்லதொரு மனிதரைப் பற்றி அருமையானதொரு பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. நல்ல பதிவு துரை அண்ணா. அதுவும் அவர் திறந்து வைத்த அணைகள் இன்று சரியான மழை சேகரிப்பின்றி மழையும் இன்றி வறண்டு வருவது...வேதனை.

    என்ன அருமையான தலைவர்! மாமனிதருக்கு வணக்கங்கள். அவர் இப்போது நேரில் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா..

      இன்றைய பதிவின் ஆதார சுருதியே பெருந்தலைவர் அமைத்த நீர்த் தேக்கங்கள் தான்...

      இன்று மீண்டும் பெருந்தலைவர் வந்தாலும்
      இன்றைய அரசியல் அமைப்பு அவரை நிம்மதியாக இருக்க விடாது..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..