நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 22, 2018

இடராழி நீங்குக 2


இன்று புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை...

புண்ணியங்கள் சேர்கின்ற நாள்... 
சேர்த்துக் கொள்வதற்குமான நாள்!...

அதற்கான வழிகள் ஆயிரம் .. ஆயிரம்!...

அவரவர்க்கு இயன்ற வழிகளில் தேடிக் கொள்வோமாக!..



இன்றைய பதிவில் -
திருமலையில் நடந்த பிரம்மோத்சவத்தின் சில காட்சிகள்..

வழங்கியோர் - திருமலை திருப்பதி தேவஸ்தானம்..
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

இந்நாளில் 
ஸ்ரீ பூதத்தாழ்வார் அருளிச் செய்த திருப்பாசுரங்கள்...


அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச்சுடர் விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.. (2182)

பழிபாவம் கையகற்றிப் பல்காலும் நின்னை
வழிவாழ்வார் வாழ்வாராம் மாதோ - வழுவின்றி
நாரணன்தன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்
காரணங்கள் தாமுடையார் தாம்.. (2201)




அரிய தெளிதாகும் ஆற்றலால் மாற்றி
பெருக முயல்வாரைப் பெற்றால் - கரியதோர்
வெண்கோட்டு மால்யானை வென்றுமுடித் தன்றே
தண்கோட்டு மாமலரால் தாழ்ந்து.. (2203)

தாழ்ந்துவரங் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் - தாழ்ந்த
விளங்கனிக்குக் கன்றெறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக்கீழ்க் கொண்ட அவன்.. (2204)



அவன் கண்டாய் நன்னெஞ்சே ஆரருளும் கேடும்
அவன் கண்டாய் ஐம்புலனாய் நின்றான் - அவன்கண்டாய்
காற்றுத்தீ நீர்வான் கருவ ரைமண் காரோத
சீற்றத்தீ யாவானும் சென்று.. (2205)


மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான் மற்றும்
நினைப்பரிய நீளரங்கத்துள்ளான் - எனைப்பலரும்
தேவாதிதேவ னெனப்படுவான் முன்னொருனாள்
மாவாய்ப் பிளந்த மகன்.. (2209)



பிரானென்று நாளும் பெரும்புலரி என்றும்
குராநல் செழும்போது கொண்டு - வராகத்
தணியுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்
மணியுருவம் காண்பார் மகிழ்ந்து.. (2212)



துணிந்தது சிந்தை துழாயலங்கல் அங்கம்
அணிந்தவன்பே ருள்ளத்துப் பல்கால் - பணிந்ததுவும்
வேய்பிறங்கு சாரல் விறல்வேங் கடவனையே
வாய்திறங்கள் சொல்லும் வகை.. (2214)
* * *
வேங்கடவன் பொற்பாதம்
போற்றி.. போற்றி..

ஹரி ஓம்
நமோ நாராயணாய..
ஃஃஃ

13 கருத்துகள்:

  1. அன்பின் ஜி வேங்கடவனை தரிசித்தேன் வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  2. பூதத்தாழ்வார் பாசுரங்களைப் படித்துள்ளேன். இன்று உங்கள் பதிவு மூலமாக மறுபடியும் படிக்கும் வாய்ப்பு. நன்றி.

    பதிலளிநீக்கு
  3. பதிவும் படங்களும் அருமை.

    எவ்வளவு பாசுரங்கள் நீங்க போட்டாலும், இன்னும் இதைப் போட்டிருக்கலாமே என்றுதான் தோன்றுகிறது.

    பக்தி செய்த ஆழ்வார்கள், நாயன்மார்கள் எப்படிப்பட்ட தமிழ்ப் புலமை பெற்றிருந்திருக்கிறார்கள் என்று வியப்பு ஏற்படுகிறது. புலமை, பக்தியோடு சேர்ந்து வையத்தில் வாழ்வாங்கு வாழும் வாய்ப்பை அவர்களுக்கு நல்கியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. இன்னொன்று துரை செல்வராஜு சார்... சுவாமிகளின் நகை அலங்காரங்கள் (அந்த அந்த விழாக்களுக்கு ஏற்றவாறு இருப்பதில் எடுக்கவேண்டும், அதாவது இந்த நாளுக்கு இந்த ஆபரணங்கள்தான் என்று உண்டு, அவற்றை மிக பத்திரமாகப் பாதுகாத்து மீண்டும் கருவூலத்தில் சேர்க்கவேண்டும், பக்தி என்ற பெயரில் யாரும் எடுத்துவிடக்கூடாது), பிறகு அவற்றை நிர்மால்யம் செய்து அடுத்த நாள் பூசைக்குத் தயார் செய்தல் என்று இது பெரிய கடினமான வேலை.

    நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இந்த பின்னணி இண்டஸ்டிரி தெரியாமலே போய்விடுகிறது. கோவில் ஊழியர்களின் பணி மகத்தானது.

    பதிலளிநீக்கு
  5. திவ்ய தரிசனம்! எஸ்சிவி தயவில் பிரம்மோத்சவம் பார்க்கக் கொடுத்து வைச்சது! இங்கேயும் கிடைத்தது. மிக்க நன்றி அருமையான பாசுரங்களுடன் கூடிய பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. புரட்டாசி சனிக்கிழமைக்கு சிறந்த பெருமாள் தரிசனம். நன்றி. இன்று சனிப்பிரதோஷம் ரொம்ப சிறப்பு என்றார்கள்.

    பதிலளிநீக்கு
  7. வெங்கடாஜலபதியின் தரிசனமும் பாடல்களும் அழகு மற்றும் அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
  8. மிக அருமையான படங்கள்.. அழகிய தரிசம் கிடைத்தது எனக்கு இங்கு வந்ததனால்... அது என்ன பொன் முலாம் பூசிய தேரோ...

    பதிலளிநீக்கு
  9. அழகான படங்கள். பாசுரங்களும் அருமை. சிறப்பு தரிசனம். ஆனால் லேட்டு!!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. அண்ணா ஆனால் நான் லேட்டு என்று வரணும் நான் என்பது விடுபட்டுடுச்சு ஸாரி அண்ணா..

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..