நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், பிப்ரவரி 07, 2018

இப்படியும் சில...

நீதி தேவன் வாளேந்தி வரும் நாள் எந்நாள்?..


அந்தக் கேள்விக்கு விடை காண்பதற்கு முன் -
இன்றைய பதிவின் காணொளிகளைக் காணுங்கள்..

ஆப்பிள் திருடன்


ஆரஞ்சுத் திருடன்


வெங்காயத் திருடன்


அரிசித் திருடன்


கைகளும் கால்களும் நன்றாக இருக்கின்றன - 
மேலே கண்ட களவாணிகளுக்கு..

இப்படி -
அடுத்தவர் உழைப்பை சுரண்டும் கையினால்
எப்படி சோறு சாப்பிட முடிகின்றது?..

இதற்குப் பதிலாக
கழிவுகளைத் தின்று பிழைக்கலாம்..

இந்தப் பதிவில் உள்ள காணொளிகள் அனைத்தும்
Fb ல் வந்தவை...

நாட்டு நடப்பின் ஒரு சில காட்சிகளே இவை...
நமக்குத் தெரியாதவை இன்னும் எத்தனை எத்தனையோ!..

படித்ததாகச் சொல்லிக் கொண்டு உயர் பதவியில் இருப்பவனே
லஞ்சப் பணத்திற்காகக் கை நீட்டும் கலி காலம் இது...

இப்படி அடுத்தவரை ஏமாற்றி வயிறு வளர்க்கும் வீணர்களைப் பற்றி
ஒன்றும் சொல்வதற்கில்லை...

இனி கீழுள்ள காணொளியையும் காணுங்கள்..


ஊரார் உழைப்பில் உயிர் பிழைக்கும் 
ஈனர்கள் அத்தனை பேரும் 
இந்த உழைப்பாளியின் ஒற்றைக் கால் தூசிக்கு 
ஈடு ஆவார்களா?...
சொல்லுங்கள்!..

விடை ஏதும் இல்லாத 
அந்தக் கேள்வி மீண்டும்..


நீதி தேவனே!... 
நீ வாளேந்தி வரும் நாள் எந்நாள்?..
***

16 கருத்துகள்:

  1. அரிசித்திருடன் என்ன செய்தான் என்று சரியாகப் புரியவில்லை. மற்ற காணொளிகள் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன். இவர்களை எல்லாம் ஒன்றுமே செய்ய முடியாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரிசித் திருடன் பாத்திரத்துக் கீழே எடைக் கல்லை வைத்து நிறை கட்டுகிறான்...

      தங்கள் வருகைக்கு நன்றி..

      நீக்கு
  2. இது என்ன அக்கிரமம்!!! கண் முன்னே நடக்கிறதே! பாவம் வாங்குபவர்கள் எங்கேயோ கவனமாக இருக்கையில் எப்படி மாற்றுகிறான்! உழைப்பாளிகளின் முன் ஆமாம் உங்கள் வரிகள் மிகவும் உண்மை...
    கீதா: அந்த உழைப்பாளியின் காணொளி வேலை செய்யவில்லையே..ஓ மீண்டும் நெட் போய்விட்டது....திருடன்ககள் காணோளி வரை.
    நீதி என்று ஒன்று இருக்கிறதா துரை அண்ணா? வீட்டிலும் இல்லை நாட்டிலும் இல்லை....நல்ல பதிவு...என்னவோ போங்க,,,சிலதை நினைக்கும் போது கோபம் வரும் தான். ஆனால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாத இயலாமை...ஏனென்றால் இங்கு சட்டம் அப்படி..நீங்கள் இருக்கும் ஊரில் நீதி வேறல்லவா...இல்லையா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்...

      நீதி இன்னும் இருக்கிறது.. ஆனாலும் நாம் அதை நடைமுறைப்படுத்துவதில்லை - ஒதுங்கி விடுகின்றோம்....

      நமது ஊரின் சட்ட திட்டங்கள் அப்படி..

      இங்கெல்லாம் இப்படி செய்தால் அவன் கடைசி காலம் வரைக்கும் கடை வைத்துப் பிழைக்க முடியாது...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. உழைப்பாளிக் காணொளி மனம் கலங்க வைக்கிறது....ம்ம்ம் என்ன சொல்ல....அவர்கள் எல்லோரும் நல்லபடியாக வாழ்ந்திடட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..

      எவ்வளவு தன்னம்பிக்கையுடன் அவர் இயங்குகின்றார்..
      மற்றவர்க்கு அவர் ஒரு பாடம்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அரிசித் திருடனைத் தவிர மற்றவற்றை முன்னமேயே கண்டிருக்கிறேன்.

    ஏழைகள், ஆப்பிள் வியாபாரம் போன்றவற்றைச் செய்யும்போது, அவர்களுக்குத் தேவையான கூலியை முதலாளிகள் தருவதில்லை (ஆப்பிள் கடைக்காரனுடையது அவனுடைய சொந்தப் பணத்தில் வாங்கிய ஆப்பிள்கள் அல்ல). அதனால் வேறு வழியில்லாமல் வயிற்றுப்பாட்டுக்குத்தான் அவன் திருடுகிறான் என்று நினைக்கிறேன். (நாமும் கூட ஒண்ணு போடுப்பா என்று ஏமாற்றவும் செய்கிறோம் அல்லவா?)

    ஆரஞ்சுக் கடையில் அவன் செய்வது திருட்டுத்தனம். இந்தப் பிழைப்புக்கு அவன் பிச்சையெடுக்கலாம்.

    ரேஷன் கடையில் வருவதே சரியான அளவில் அல்ல. இடையில் களவாண்டதுபோக மிகுதி வருகிறது. அவனுக்கு எடையைக் குறைத்துத்தான் சரி பண்ணணும். அரசாங்கம் ஓசிலதானே குடுக்குதுன்னு அவன் ஏழைகளை ஏமாற்றுகிறான்.

    இந்தத் திருடங்களை என்ன செய்ய? வேணும்னா, அரிசியைக் குறைத்துத் தந்தவனுக்கு குழந்தை குறை மாசத்தில் பிறந்து, அல்லது உறுப்பு குறைவா பிறந்து அவன் காலம் பூராவும் கஷ்டப்பட்டான் என்றுவேணும்னா நம்ம திருப்திக்கு கதை எழுதலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த..

      இதை எல்லாம் நான் இப்போது தான் காண்கின்றேன்..

      >>> அரசாங்கம் ஓசிலதானே கொடுக்குதுன்னு அவன் ஏழைகளை ஏமாற்றுகிறான்..<<<

      ஏழைகளின் பார்வையில் இருந்து இந்தக் களவாணிகள் தப்பித்துக் கொண்டாலும் இறைவனின் பார்வையில் இருந்து தப்பிக்க முடியாது..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. எனக்கு வேறு ஒன்றும் தோன்றியது. திருடக் கூடாதுதான்...தவறுதான். ஆனால் ரேஷனை விடுங்கள் மற்ற பழ வியாபாரிகள் அன்றாடங்காய்ச்சிகள். பசி கொடுமை...என்று கூடச் சொல்லலாம்..ஆனால் நவநாகரீகமான கார்களில் பவனி வந்து, கொலைகளும் செய்து நம்மிடம் கொள்ளையும் அடித்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளைப் பார்க்கும் போதும், பெரும் கடைக்காரகள் துணிக்கடை, நகைக்கடை, உணவுப் பொருட்கள், ஏன் தனியார் தொலைபேசிகள் என்று எத்தனை பெரிய ஏமாற்று வேலைகள் நம்மிடம் காட்டுகிறார்கள் ஆனால் நாம் அதை எல்லாம் கேள்வியா கேட்கிறோம் அண்ணா? அது பதவிசான நாகரீகமான ஹைடெக் திருட்டு...போலீஸிடம் மாட்டுவதும் என்னவோ இந்த அன்றாடங்காய்ச்சிகள் தான்...

      கீதா

      நீக்கு
  5. 'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது 'என்ற பாடல் நினைவுக்கு வருது.
    எத்தனை விதமான திருட்டு!

    ஊனமுற்றவர் உழைத்து சாப்பிடுகிறார்.

    இறைவன் இருக்கின்றானா ? மனிதன் கேட்கிறான் பாடலும் நினைவுக்கு வருது.

    தெய்வம் ,எப்போது வந்து கேட்கும் இவர்களை?

    நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  6. அன்பின் ஜி
    தனி மனித ஒழுக்கம் பேணப்படாதவரை இந்த நாடு மட்டுமல்ல, உலகமே உயர்வடைய வழியில்லை.

    ரிக்ஷாக்காரரைப்போல நல்ல உள்ளங்களால்தான் இவ் வையகம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. மீசைக்கார நண்பரின் கருத்தை வழிமொழிகின்றேன் ஐயா

    பதிலளிநீக்கு
  8. அச்சச்சோ எனக்கு வீடியோக்களைப் பார்க்க நெஞ்சடைத்து மூச்செடுக்க முடியாமல் வருது.. இப்படியான வியாபாரிகளைப் பார்த்து நான் எப்பவும் இரக்கப்படுவேன், பாவமே கஸ்டப்படுகிறார்களே.. காசு கணக்கு பார்க்காமல் கூடக் குடுக்கோணும் என... ஆனா இன்று இதைப் பார்த்ததும் என்ன பண்ணுவதென்றே தெரியவில்லை.

    அதிலும் அந்த அரிசி விற்பது கோப்ரெட்டி ஷொப் போல இருக்கே.. அங்கு இப்படி மிச்சம் பிடிச்சு மிஞ்சும் அரிசியை வீட்டுக்கு எடுத்துப் போவார்களோ... அநியாயாம்.. வீட்டிலிருப்போருக்கு இது தெரிய நியாயம் இலையே...:(.

    பதிலளிநீக்கு
  9. அரிசித் திருடனைத் தவிர மற்றவை பார்த்திருக்கேன். ஆனாலும் நாம் கவனமாக இருந்தாலும் எப்படியோ ஏமாற்றுகிறார்கள். என்ன செய்ய முடியும்! :( கையாலாகாமல் புலம்புவதைத் தவிர!

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் ஐயா!

    திருட்டுத்தன வீடியோக்கள் அதிர வைத்தது! ச்... சே... இப்படியுமா மனிதர்கள்னு வெறுக்கவைத்தது.

    அந்த ஒரு கையும் காலும் இல்லாதவர் சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுவதும் அவர் தன்னாலான முயற்சியில் முன்னேறி வாழ்வதையும் பார்த்து அழுகையே வருகிறது.
    அப்படியும் பலர்!... இப்படியும் சிலர்!

    எல்லாம் காலத்தின் கோலம்!

    வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  11. திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.... என்ன சொல்ல.

    உழைப்பாளிக்கு ஒரு ராயல் சல்யூட்....

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..