நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மே 13, 2017

சப்த ஸ்தானம் - 1

கடந்த பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தன்று - திருமழபாடியில்,
ஸ்ரீ நந்திகேசர் - ஸ்ரீ சுயம்பிரகாஷினி தேவிக்கும் சிறப்பாக திருமணம் நடந்தேறியது..

அதன்பின்,
மணமக்களை வரவேற்று உபசரிப்பதற்கு என்று

திருப்பழனம், திருச்சோற்றுத்துறை
திருவேதிக்குடி, திருக்கண்டியூர்,
திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம்

- எனும் ஆறு திருவூர் மக்களும் அழைப்பு விடுத்து நின்றனர்..

ஸ்ரீ நந்திகேசர் - ஸ்ரீ சுயம்பிரகாஷினி
அதுகேட்டு மகிழ்ந்த திருஐயாறு அகலாத செம்பொற்சோதியாகிய
ஐயாறப்பரும் அறம் வளர்த்த நாயகியும் - தாமே மணமக்களை
சித்திரை விசாகத்தன்று அழைத்து வருவதாக அருள்புரிந்தனர்..

இப்படியான ஐதீகத்தின்படி திருஐயாறில் சித்திரைப்பெருவிழா நிறைவெய்தியதும்

சித்திரை விசாக நன்னாளின் (11/5) காலைப்பொழுதில் பல்லக்குகளில் ஆரோகணித்து அன்பின் மக்களைச் சந்திப்பதற்குப் புறபட்டனர்..

வழிநெடுக மக்களின் அன்பான வரவேற்பினையும் ஆராதனைகளையும் ஏற்றுக் கொண்டு -

திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர்,
திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் - ஆகிய ஆறு ஊர்களையும் கடந்து வந்தனர்..

சப்த ஸ்தானம் எனப்படும்
ஏழூர் திருவிழாவின் நிகழ்வுகள் 
இன்றைய பதிவில்!..   

ஸ்ரீ ஐயாறப்பர் - ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி
ஸ்ரீ நந்திகேசர் - ஸ்ரீ சுயம்பிரகாஷினி






அனைத்து ஊர்களில் இருந்தும் பல்லக்குகளில் இறைவனும் அம்பிகையும் புறப்பட்டு மணமக்களுடன் இணைந்து வந்தருளினர்..

நேற்று மாலைப் பொழுதில் திருஐயாறை வந்தடைந்த அனைத்து பல்லக்குகளுக்கும் சிறப்பாக வரவேற்பளிக்கப்பட்டது..

திருக்கோயிலின் தேரடி நிலையில் பொம்மை பூப்போட்டு மாலை சூட்டும் வைபவம் உற்சாகமாக நடத்தப்பட்டது..

மகா தீப ஆராதனைக்குப் பின்
பண்டரங்கக் கூத்துடன் ஐயாறப்பர் திருக்கோயிலினுள் ஏகினார்..



மேற்குறித்த ஆறு ஊர்களில் இருந்தும் புறப்பட்டு வந்த 
இறைவனும் அம்பிகையும் அவரவர் திருத்தலங்களுக்குத் திரும்பினர்..

அந்த அளவில் -
சப்த ஸ்தானப் பெருவிழா கோலாகலமாக நிகழ்ந்தேறியது...

வழிநெடுக - அந்தந்த ஊர் மக்கள் நீர்மோர், பானகம், அன்னதானம் என சிறப்பாக செய்திருந்தனர்..

திருச்சோற்றுத்துறையில் - பல்லக்கு ஊர்வலத்துடன் வந்த அடியார்களுக்கு மகத்தான முறையில் உணவு வழங்கி மகிழ்ந்தனர்..

ஆயிரம் ஆண்டு பாரம்பர்யத்தை உடையது திருவையாற்றின் சப்த ஸ்தானப் பெருவிழா..

ராஜராஜ சோழனின் பட்டத்தரசியான உலகமாதேவியார் - இந்த விழாவினைத் தொடங்கி வைத்ததாக நம்பப்படுகின்றது...

சோழ நாட்டில் வருடந்தோறும் நிகழ்வுறும் விழாக்களில் சிறப்பானது..

இந்த ஆண்டின் சப்தஸ்தானப் பெருவிழா நிகழ்வுகளை
Fb ல் சிறப்புடன் வழங்கியோர் - திருவையாறு சிவ சேவா சங்கத்தினர்..

அவர் தமக்கு மனமார்ந்த நன்றி..


கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்ப்பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தர் ஐயன் ஐயாறனாரே!..(4/38)  
-: திருநாவுக்கரசர் :- 

ஓம் நம சிவாய சிவாய நம  
***

6 கருத்துகள்:

  1. திருக்கல்யாணம் கண்டேன் ஜி

    பதிலளிநீக்கு
  2. சப்தஸ்தானம் திருவிழாவை நேறில் பார்த்த உணர்வு.
    அருமையான அழகான படங்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. படங்களுடன் இறுதியில் எடுத்துக்காட்டிய தேவாரப் பாடலே எனக்கு மிகுந்த பக்தியுணர்வை ஊட்டியது என்றால் மிகையில்லை. தமிழும் பக்தியும் இரண்டறக் கலந்த பதிவுகள் தங்களுடையவை.

    -இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)

    பதிலளிநீக்கு
  4. இந்த ஏழூர்த் திருவிழாபற்றி முன்பே படித்திருந்தாலும் எதுவுமே நினைவில் நிற்கவில்லை

    பதிலளிநீக்கு
  5. ஸ்ப்தஸ்தானம் என்பதை அறிந்தோம் படங்கள் அருமை ரசித்தோம் ஐயா!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..