நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மே 15, 2017

சப்த ஸ்தானம் - 2

திருஐயாற்றில் நிகழ்ந்த சப்த ஸ்தானப் பெருவிழாவின் திருக்காட்சிகள் இப்பதிவிலும் தொடர்கின்றன..

திருவையாற்றில் தொடங்கி
திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி,
திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் வழியாக திருவையாற்றில் நிறைவடையும் மாபெரும் பல்லக்கு ஊர்வலம்
ஆயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்து கொண்டிருப்பதாக அறிகின்றோம்...

இதற்கு அடுத்தபடியாகத்தான் -
கும்பகோணம், மயிலாடுதுறை, சக்ராப்பள்ளி - முதலான சப்த ஸ்தானங்கள்...

தஞ்சையில் நிகழ்ந்த கரந்தை வசிஷ்டேஸ்வரர் சப்த ஸ்தானம் முற்றாகவே நின்று போயிற்று...

ஸ்ரீ ஐயாறப்பர் - அறம்வளர்த்த நாயகி
ஸ்ரீநந்தியம்பெருமான் - ஸ்ரீ சுயம்பிரகாஷிணி தேவியரின் திருக்கல்யாண வரவேற்பு நிகழ்வாகவே திருஐயாற்று சப்த ஸ்தானம் நடைபெறுகின்றது

மாப்பிள்ளையும் பெண்ணும்
திருவையாறு சப்த ஸ்தானத்திலுள்ள
திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி,
திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம்
ஆகிய திருத்தலங்கள் அனைத்தும் திருப்பதிகம் பெற்ற சிறப்புடையவை..

திருஐயாறு, திருச்சோற்றுத்துறை ஆகிய தலங்கள்
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோராலும்

திருப்பழனம், திருவேதிகுடி, 
திருக்கண்டியூர், திருநெய்த்தானம் ஆகிய தலங்கள்
திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர் ஆகியோராலும்

திருப்பூந்துருத்தி - திருநாவுக்கரசர். பெருமானாலும்
திருப்பதிகம் பெற்றுள்ளன..


திருஐயாறு, திருப்பழனம், திருநெய்த்தானம்
ஆகிய மூன்று தலங்களும் 
காவிரிக்கு வடகரைத் தலங்களாகத் திகழ்வன..


திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி,
திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி
ஆகிய நான்கு தலங்களும்
காவிரிக்குத் தென்கரைத் தலங்களாக விளங்குவன.

ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி
பூத வாகனத்தில் ஐயனும் அம்பிகையும்
குதிரை வாகனத்தில் இறைவனும் அம்பிகையும்
வேந்தாகி விண்ணவர்க்கு மண்ணவர்க்கு நெறிகாட்டும் விகிர்தனாகிப்
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த புண்ணியனார் நண்ணுங்கோயில்
காந்தாரம் இசையமைத்துக் காரிகையார் பண்பாடக் கவினார்வீதித்
தேந்தாம் என்றரங்கேறிச் சேயிழையார் நடமாடுந் திருஐயாறே!.. (1/130)
-: திருஞானசம்பந்தர் :- 

கிராமங்களைக் கடந்து வருகின்றன..
திருச்சோற்றுத்துறை பல்லக்கு
ஸ்ரீ சோற்றுத்துறை நாதன்
ஸ்ரீ சோற்றுத்துறை நாயகி
மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே
முறைமையால் எல்லாம் படைக்கின் றானே
ஏத்தவனாய் ஏழுலகும் ஆயி னானே
இன்பனாய்த் துன்பங் களைகின் றானே
காத்தவனாய் எல்லாந்தான் காண்கின் றானே
கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத்
தீர்த்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனே உன்அபயம் நானே!..(6/44)
-: திருநாவுக்கரசர் :-கண்டியூரில் இளைப்பாறும் பல்லக்குகள்
வெளியூர் மக்கள் ஆயிரக்கணக்கில் ஆவலுடன் கூடியுள்ளனர்..

செல்லும் வழியெங்கும் சிறப்பான முறையில் ஆராதிக்கப்பட்டதுடன் - 
உடன் வருவோர்க்கு உண்ணவும் அருந்தவும் இளைப்பாறவும் தக்க வசதிகள் செய்து தரப்பட்டிருக்கின்றது...

மகத்தான திருவிழா மக்களால் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றது...


பதிவிலுள்ள படங்களை வழங்கியோர் -
திருவையாறு சிவ சேவா சங்கம்
தஞ்சாவூர் Fb

அவர்தமக்கு மனமார்ந்த நன்றியும் மகிழ்ச்சியும்..
***

கீழுள்ள காணொளி -
பல்லக்குகளின் ஊர்வலம் முடிந்ததும் ஐயாறப்பரும் அம்பிகையும்
வசந்த மண்டபம் சேர்வதைக் காட்டுவதாகும்..


மண் பயனுற வேண்டும்...
மனித நேயம் மலர்ந்திட வேண்டும்...
திருவிழாக்களின் நோக்கம் சிறந்திட வேண்டும்..


எல்லா உலகமும் ஆனாய் நீயே
ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே
நல்லாரை நன்மை அறிவாய் நீயே
ஞானச் சுடர் விளக்காய் நின்றாய் நீயே
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே
புகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வந் தருவாய் நீயே
திருஐயாறு அகலாத செம்பொற் சோதீ!..(6/38)
-: திருநாவுக்கரசர் :-

ஐயாறர் திருவடிகள் போற்றி.. போற்றி..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

6 கருத்துகள்:

 1. பல தலங்களின் வரலாறு அறிந்தேன் ஜி புகைப்படங்கள் அருமை தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. சிறு வயதில் திருவையாற்றிற்குச் சென்று ஏழூர் திருவிழாவினைக் கண்டு களித்த நினைவலைகள் மனதில் வலம் வருகின்றனஐயா
  அருமை

  பதிலளிநீக்கு
 3. அழகான படங்களுடன் அருமையான பகிர்வு ஐயா...

  பதிலளிநீக்கு
 4. ஆண்டவனை அலங்கரிக்க நிறையவே மெனக்கெடுகிறார்கள் படங்கள் அழகு

  பதிலளிநீக்கு
 5. படங்களும் அழகு தகவல்களும் அருமை

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..