நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 17, 2016

புரட்டாசி தரிசனம் 1

நவகோள்களில் ஒன்றான - புதனுக்கு அதிபதி ஸ்ரீமன்நாராயணன்!..

ஸ்ரீமஹாவிஷ்ணுவின் திருமேனி வண்ணம் - பச்சை..

பெருமானின் திருமேனி நீல நிறம் - எனக் குறிக்கப்பட்டாலும் ,
ஆழ்வார்கள் கண்டு ஆராதித்தது - பச்சை வண்ணமாகவும் .. என்பது திருக்குறிப்பு..

பச்சை மாமலைபோல் மேனி!.. - என்று ஆழ்வார் அகமகிழ்ன்றார்..

தூரத்துப் பச்சையும் நீலமும் கருப்பும் - ஒரே நிலையில் பொலிபவை.. 

புதனுக்கு உகந்த நிறமும் - பச்சை..

புதனின் வீடு - கன்னி!..

இந்த கன்னி ராசியில் சூரியன் பிரவேசிப்பது புரட்டாசி மாதத்தில்...

அதனாலேயே - புரட்டாசி மாதம் தனியானதொரு மகத்துவம் பெறுகின்றது.

புரட்டாசியின் - புதன் கிழமைகளும் சனிக் கிழமைகளும் -
ஸ்ரீமந்நாராயணனை - ஏக மூர்த்தியாகக் கொண்டு தொழுவோர்க்கு உகந்தவை..

ஸ்ரீ வேங்கடேச சரணம்.. சரணம் ப்ரபத்யே..
அத்தகைய சிறப்புடைய - புரட்டாசி எனும் புண்ய மாதம் இன்று முதல்..

பாரம்பர்யமான பழக்கவழக்கமுடையோர் -
இன்று முதல் திருவேங்கடமுடையவனை நினைந்து விரதங்களை ஏற்பர்..

அதிலும் மாதத்தின் சனிக்கிழமைகளில் விசேஷமாக இருக்கும்..

பெரும்பாலும் மூன்றாவது அல்லது கடைசி சனிக்கிழமைகளில் பக்திப் பரவசத்துடன் நாம பாராயணம் செய்து பெரிய அளவில் தளிகையிட்டு பெருமாளைச் சரணடைந்து நிற்பர்...

புரட்டாசி விரதமேற்கும் அனைவருமே -
பெரிய அளவில் இல்லாவிட்டாலும் தங்களது தகுதிக்கு ஏற்ப
தளிகையிட்டு வேங்கடேசப் பெருமாளைத் துதிப்பர்..

இந்த மாதம் முழுதுமே - இல்லார்க்கும் எளியோர்க்கும் உதவுதலே நோக்கம்...

யாரும் பசித்திருக்கப் பார்த்திருக்க மாட்டார்கள்...

அன்னமிடல் - எனும் அறச்செயலைக் கைவிடாது காப்பர்..

நாம் கைவிடாத அறச்செயலானது நம்மையும் கைவிடாது!.. - என்பது ஆன்றோர் வாக்கு..

புரட்டாசி மாதம் முழுதுமே திருவேங்கடத்தில் விசேஷம் தான்..

அதனையொட்டி - இன்றைய பதிவில்,
கருட வாகனத்தில் திருவேங்கடமுடையானின் திருக்கோலம்..



வலம்புரி ஆழியானை வரையார் திரள் தோளன்றன்னை
புலம்புரி நூலவனைப் பொழில் வேங்கட வேதியனை
சிலம்பிய லாறுடைய திருமாலி ருஞ்சோலை நின்ற
நலந்திகழ் நாரணானை நணுகுங் கொலென் நன்னுதலே.. (1836) 
-: திருமங்கையாழ்வார் :- 



உளன்கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன்கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன்கண்டாய்
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தினுள் உள்ளனென்று ஓர்.. (2180)  
-: பொய்கையாழ்வார் :-



இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்
மறையாய் மறைப்பொருளாய் வானாய் பிறைவாய்ந்த
வெள்ளத்தருவி விளங்கொலி நீர் வேங்கடத்தான்
உள்ளத்தினுள்ளே உளன்.. (2320) 
-: பேயாழ்வார் :-


மேலும், இன்றிலிருந்து மஹாளய புண்ய காலமும் ஆரம்பம்..

புரட்டாசி மாத அமாவாசை வரையிலும் இயன்ற அளவுக்கு தான தர்மங்கள் செய்வது ஏழேழு தலைமுறைகளைக் காக்கும் என்பது ஐதீகம்...

நாம் செய்யும் தான தர்மங்கள் ஏழேழு தலைமுறைகளைக் காக்கும் என்பது ஒருபுறம் இருந்தாலும் -

வாழும் நாளிலேயே -
நோய்நொடியின்றி நல்லபடியாக வாழ்வதை - நாம் உணரமுடியும்..

இன்றைய கால கட்டத்தில்
நோய்நொடியின்றி வாழ்வதே மிகப்பெரிய வரம்..

உண்ணும் போது ஒரு கைப்பிடி!.. - என்றார் திருமூலர்...

அற்றார் அழிபசி காண்பான் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி.. (0226)

ஒரு உயிரின் பசியைத் தீர்ப்பவன் - 
நிலையில்லாத செல்வத்தை நிலையானதொரு இருப்பில் 
நிலை நிறுத்துகின்றான் என்பது திருக்குறிப்பு..

வாய்ப்பும் வசதியும் இருப்பின்
அற்றார் அழிபசி தீர்த்தல் நல்லது..

வளமும் நலமும் நம்மைத் தேடி வரும்..

வாழ்க வளம் வளர்க நலம்!..
***

13 கருத்துகள்:

  1. பெருமாளின் பெருமை உணர்ந்தேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அழகான படங்கள், அருமையான செய்திகள். பகிர்வுக்கு நன்றி.
    எல்லோரும் நோய் நொடி இல்லாமல் வாழ கோவிந்தன் அருளவேண்டும்.
    வாழக வளமுடன்.

    முன் பின் தெரியதவர்களுக்கும், ஏழைகளுக்கும் புரட்டாசி சனிக்கிழமை அன்னம் அளிப்பார்கள். இப்போது உறவினர்களை அழைத்து அன்னம் அளிக்கிறார்கள்.
    மயிலாடுதுறையில் சனிக்கிழமை குழந்தைகள், பெரியவர்கள் என்று ஏழைகள் ஒரு சொம்பும், பையும் எடுத்துக் கொண்டு கோவிந்தா கோவிந்தா என்று கூப்பிட்டுக் கொண்டு வருவார்கள். காசும், அரிசியும் வாங்கி செல்வார்கள். மதுரையில் அந்த ஓலியை கேட்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தஞ்சையில் இருந்த போது புரட்டாசி மாதங்களில் வெங்கட் ராமா.. கோவிந்தா.. எனும் கோஷங்களுடன் சிறுவர்கள் வருவார்கள்.. காசு அல்லது அரிசி அளிப்போம்.. அவர்களின் முகங்களில் மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டுமே.. சமயங்களில் வயதான பெரியவர்களும் வருவதுண்டு..

      சிலர் நேர்ந்து கொண்டு வருவதாக சொல்வார்கள்..

      தானமளிக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியே தனி..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. புதன் புரட்டாசி பெருமாள் என்று ஒன்றுக்கொன்று பிணை ப்போடு எழுதியது பாராட்டுக்குரியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் பாராட்டுரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. நேற்று வாசித்தேன்.. கருத்திடவில்லை...
    மிகவும் அருமையான பகிர்வு அழகான படங்களுடன்....
    அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அழகிய படங்கள். புரட்டாசி மாதத்தின் சிறப்பு சொன்ன பகிர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. வெகு அழகுப் படங்களுடன் இம்மாதத்தின் சிறப்பு மிக்க தகவல்கள். பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..