நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், செப்டம்பர் 08, 2016

விநாயக தரிசனம்

ஸ்ரீ விநாயக சதுர்த்திப் பெருவிழாவினை முன்னிட்டு
சகல சிவாலயங்களிலும் விநாயகர் திருக்கோயில்களிலும் வெகு சிறப்பாக வழிபாடுகளும் திருவிழாக்களும் நிகழ்ந்ததை அனைவரும் அறிவோம்..

இருப்பினும்,

சிறப்பு மிகும் தலங்களான கணபதி அக்ரஹாரத்திலும் பிள்ளையார் பட்டியிலும் நிகழ்ந்த வைபவங்களை இன்றைய பதிவில் வழங்குவதில் மகிழ்ச்சி..

ஸ்ரீ விநாயகர் - கணபதி அக்ரஹாரம்
கணபதி அக்ரஹாரம்..

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருவையாறு வழியாக 18 கி.மீ தொலைவில் உள்ள சிற்றூர்..

கும்பகோணத்திலிருந்து திருவையாறு வழித்தடத்தில் 30 கி.மீ தொலைவு..

காவிரியின் வடகரையில் அமைந்துள்ள அழகான கிராமம்..

கிழக்கு நோக்கிய அழகான திருக்கோயில்..

சாலையின் வடக்காக சற்று தூரத்தில் அமைந்துள்ளது..

விநாயக சதுர்த்தியன்று இங்குள்ள மக்கள் அனைவரும் பிள்ளையார் கோயிலில் ஒன்று கூடி விழாவினைக் கொண்டாடுகின்றனர்..

கணபதி அக்ரஹாரம் திருக்கோயிலில் அகத்திய மகாமுனிவர் வழிபட்டதாக ஐதீகம்..

சதுர்த்தியை முன்னிட்டு பத்து நாட்கள் திருவிழா நிகழ்ந்தது..
திருக்கோயிலில் நிகழ்ந்த வைபவங்கள் FB வழியே கிடைத்தவை..
வலையேற்றிய நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி..

கணபதி - துவஜ ஸ்தம்பம்
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலுங்கலந்துணக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா..
-: ஔவையார் :- 

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு 
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு..
-: ஔவையார் :-கணபதி என்றிட கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிட கருமம் ஆதலால்
கணபதி என்றிட கவலை தீருமே.. 
-: திருமந்திரம் :-
***

பிள்ளையார்பட்டி..

தொன்மையான குடைவரைக்கோயில்..

வடக்கு நோக்கிய பிரம்மாண்டமான திருமேனி..

வலம்புரி விநாயகர்.. இரண்டு திருக்கரங்கள் பொலியும் திருக்கோலம்..

மருதவனேசர் திருக்கோயில் பின்னாளில் எழுப்பப்பட்டதாகும்..

காரைக்குடியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள சிற்றூர்..


திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமு கத்தானைக் 
காதலால் கூப்புவர் தம்கை.. 
-: கபிலதேவர் :-மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணியப் பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப்
பண்ணவன் மரடி பணிந்து போற்றுவாம்..
-: கச்சியப்ப சிவாச்சார்யார் :-
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்துப் போற்றுகின்றேன்.. 
-: திருமந்திரம் :-பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் பத்து நாட்கள் திருவிழா நடைபெற்றது..

விநாயகப் பெருமான் நாளும் திருக்கோலங்கொண்டு திருவீதி எழுந்தருளினார்..

திருத்தேரோட்டத்துடன் பஞ்ச மூர்த்தி எழுந்தருளலும் கோலாகலமாக நிகழ்ந்தது..

திருக்கோயிலில் நிகழ்ந்த வைபவங்கள் FB வழியே கிடைத்தவை..
வலையேற்றிய நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி..திங்களங் கொழுந்து வேய்ந்த செஞ்சடைக் கொழுந்தே போற்றி
மங்கை வல்லபைக்கு வாய்த்த மகிழ்ந நின் மலர்த்தாள் போற்றி
ஐங்கர நால்வாய் முக்கண் அருட்சிவ களிறே போற்றி
கங்கையாய் மகிழும் செல்வக் கணேச நின் கழல்கள் போற்றி.. 
-: வள்ளலார் :-


அற்புதக் கீர்த்தி வேண்டின் ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதன் வேண்டின் நலமெலாம் பெருக வேண்டின்
கற்பக மூர்த்தி தெய்வக் களஞ்சியத் திருக்கை சென்று
பொற்பதம் பணிந்து பாரீர் பொய்யில்லை கண்ட உண்மை..  
-: கவியரசர் கண்ணதாசன் :-

ஓம் கம் கணபதயே நம:

வாழ்க நலம்.. 
***

12 கருத்துகள்:

 1. விநாயகர் தரிசனம் செய்தேன்.
  அழகான படங்கள் தந்த அனைவருக்கும், உங்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 2. அருமையான படங்கள். பிள்ளையார்பட்டி இரண்டு மூன்று முறை சென்றதுண்டு. மற்ற இடத்திற்குச் சென்றதில்லை. செல்லத் தூண்டுகிறது உங்கள் பகிர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 3. தாங்கள் கூறியுள்ள கோயில்களுக்குச் சென்றுள்ளேன். இப்பொழுது உங்களது பதிவு வழியாக மறுபடியும் செல்லும் காணும் வாய்ப்பு. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. கணபதி அக்கிரகாரம் நம் வலைப் பதிவர் திரு ஜீவியின் ஊர் என்று தெரிகிறது பிள்ளையார் பட்டிக்குச் சென்றிருக்கிறோம் பகிர்வுக்கு நன்றி சார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. பிள்ளையார்பட்டி நமக்குப் பக்கம் என்பதால் அடிக்கடி செல்லும் கோவில்...
  பழனி நடை பயணத்தின் போது முதல் நாள் இரவு தங்கல் அங்குதான்...
  மற்ற கோவில்கள் சென்றதில்லை.. அறியத்தந்தீர்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..

   பிள்ளையார்பட்டி திருக்கோயில் உள்ளும் புறமும் மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்படுவது சிறப்பான விஷயம்..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. பல தகவல்களுடன் வினை தீர்க்கும் விநாயக தரிசனம்! நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இடங்கள் சென்றதில்லை. குறித்துக் கொண்டோம் ஐயா. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் துளசிதரன்..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு