நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், டிசம்பர் 23, 2015

மார்கழித் தென்றல் - 07

குறளமுதம்

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.. (505)
***

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 07

திவ்ய தேசம் - திருஅல்லிக்கேணிஎம்பெருமான் - ஸ்ரீ வேங்கடகிருஷ்ணன் 
தாயார் -  ஸ்ரீருக்மணி
உற்சவர் - ஸ்ரீ பார்த்தசாரதி

ஸ்ரீ ஆனந்த விமானம்
நின்ற திருக்கோலம்
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்.மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார், பேயாழ்வார்,
திருமழிசையாழ்வார்மகாபாரதப் போர்முகத்தில் நின்ற புருஷோத்தமன்..
எனவே, திருமுகத்தில் தழும்புகளுடன் பொலிகின்றனன்..

திருக்கோயிலில் - ஸ்ரீரங்கநாதன், ஸ்ரீ ராமசந்திரன், 
ஸ்ரீ வரதராஜப் பெருமாள், ஸ்ரீ நரசிம்ஹ மூர்த்தி - என, 
சந்நிதிகள் தனிக்கோயிலாகத் திகழ்கின்றன..
* * *

கீசு கீசு என்று எங்கும் ஆனைசாத்தன் கலந்து 
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே 
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து 
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் 
ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ 
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி 
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ 
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்!.

ஓம் ஹரி ஓம் 
***

சிவதரிசனம்
திருத்தலம் - திருமயிலை


இறைவன் - ஸ்ரீ கபாலீஸ்வரன்
அம்பிகை - ஸ்ரீ கற்பகவல்லி 
தீர்த்தம் - கபாலி தீர்த்தம்
தலவிருட்சம் - புன்னை

அகிலாண்ட நாயகியான அம்பிகை

மயிலுருவம் கொண்டு சிவபூஜை நிகழ்த்திய திருத்தலம்..

-: திருப்பதிகம் :-

ஞானசம்பந்தப் பெருமான்  சிவநேசஞ்செட்டியாரின் திருமகளான பூம்பாவை - 
பூவனத்தில் நாகம் தீண்டி இறந்து விட ,
அவளை. அஸ்திக் கலசத்திலிருந்து
திருஞான சம்பந்தப் பெருமான் - 
மீட்டு உயிருடன் எழுப்பிய திருத்தலம்..இங்கு நிகழும் அறுபத்து மூவர் உற்சவம்
தமிழகத்தின் பெருவிழாக்களுள் ஒன்று..

அருகிலேயே - திருவான்மியூர், திருஒற்றியூர், திருவேற்காடு 

ஆகிய திருத்தலங்கள் அமைந்துள்ளன..
***

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிச் செய்த
தேவாரம்

மனமெனும் தோணிபற்றி மதியெனும் கோலையூன்றி
சினமெனும் சரக்கையேற்றி செறிகடல் ஓடும்போது
மதனெனும் பாறைதாக்கி மறியும்போது அறியவொண்ணா
உனையெனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே!.. (4/46)
* * *ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருவாசகம்

திருப்பள்ளி எழுச்சி
ஏழாம் திருப்பாடல்

அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவன்அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளுமாறு அதுகேட்போம்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!..

திருவெம்பாவை
(13 - 14)

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் போதால்
அங்கங்கு குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவுவர் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்குமடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந்தாடேலோர் எம்பாவாய்!..

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள் ஆமாபாடிச்
சோதித் திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதித் திறம்பாடி அந்தம் ஆமாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

6 கருத்துகள்:

 1. மணமென்னும் தோணி பற்றி
  எனத் தொடங்கும் தேவாரப் பாடல்
  கண்டு மகிழ்ந்தேன் ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. வணக்கம்,

  தங்கள் பதிவுகளால் பல ஊர் கோயிலுக்குச் செல்லும் பாக்கியம் பெற்றோம். பாடல்கள் நல்ல பொருத்தமாக,
  வாழ்த்துக்கள், தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. அன்பின் ஜி மார்கழித் தென்றலின் ஏழாம் நாள் பகிர்வு கண்டேன் திருப்பள்ளி எழுச்சிப்பாடலுடன் நன்று

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..