நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, டிசம்பர் 19, 2015

மார்கழித் தென்றல் - 03

குறளமுதம்

வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்று உணரற்பாற்று..
***

 சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 03 


திவ்ய தேசம் - ஸ்ரீ வைகுண்டம்

எம்பெருமான் - ஸ்ரீ வைகுந்த நாதன், 
தாயார் - ஸ்ரீவைகுந்தவல்லி, பூதேவி
உற்சவர் - கள்ளர்பிரான்.

ஸ்ரீ சந்த்ர விமானம் 
நின்ற திருக்கோலம்
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்.

மங்களாசாசனம்
நம்மாழ்வார்.

நவதிருப்பதிகளுள் ஒன்றான திருத்தலம்..
- - -

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்குபெரும் செந்நெல் ஊடுகயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்!..
***

சிவ தரிசனம்

திருத்தலம் - உவரி


இறைவன் -  ஸ்ரீ சுயம்புலிங்கம்
அம்பிகை - ஸ்ரீ பிரம்ம சக்தி
தீர்த்தம் - அக்னி தீர்த்தம் - கடல்
தலவிருட்சம் - கடம்பக்கொடி

பரிவார மூர்த்திகள்
ஸ்ரீ மாடசாமி, ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ இசக்கியம்மன்
ஸ்ரீ சிவனணைந்த பெருமாள், ஸ்ரீ முன்னோடியார்

ஸ்ரீபூர்ணகலா ஸ்ரீ புஷ்கலா சமேத
ஸ்ரீவன்னியடி சாஸ்தா..


மார்கழி மாதம் முழுவதும் சந்நிதியில்
சூரியபூஜை நிகழும் திருக்கோயில்..
***

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிச்செய்த 
தேவாரம்
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமசிவாயவே!..(4/11)



ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச்செய்த 
திருவாசகம்

திருப்பள்ளி எழுச்சி
மூன்றாம் திருப்பாடல்

கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளிஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணைக் காட்டாய்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!..

திருவெம்பாவை
(05 - 06)

மாலறியா நான்முகனுங் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேஎன்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்!..

மானேநீ நென்னலை நாளைவந்து உங்களை

நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்!..
* * *

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்!..
* * *

6 கருத்துகள்:

  1. திருப்பாவை, திருவெம்பாவை கேட்டேன். தொடர்ந்து கேட்பேன்.

    பதிலளிநீக்கு
  2. மாழ்கழித்திங்களின் 3ஆம் நாள் பகிர்வு நன்று தொடர்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு
  3. ஏலோர் எம்பாவாய் ஏலோர் என்பதன் பொருள் புரியவில்லை. வெகுநாட்பட்ட சந்தேகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தொடர்ந்த பதிவுகளில் பொருள் கூறியுள்ளேன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. தங்கள் தளத்தின் பாடலாக, இல்லக விளக்கது,,,
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..