நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், நவம்பர் 25, 2015

கார்த்திகைத் திருநாள்

அண்ணாமலை..

திருஅண்ணாமலை..

அக்னித் தலம்..

ஆதி அந்தம் அறிய ஒண்ணாத அற்புதத் தலம்..

நான்முகனுடனும் ஹரிபரந்தாமனுடனும் -
ஈசன் திருவிளையாடல் கொண்டு இலங்கும் திருத்தலம்..

அம்பிகைக்குத் தன் மேனியில் சரிபாதியினை - இறைவன் அருளிய திருத்தலம்..


எண்ணரும் சிறப்புகளை உடைய இத்திருத்தலத்தில் வெகுசிறப்புடன் நிகழ்வது திருக்கார்த்திகைத் திருவிழா..

தீபத் திருவிழாவிற்கு எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகின்றன..

எப்படியிருப்பினும், தீபம் ஏற்றப்படுவது - ஒளியின் பொருட்டு!..

அதன்மூலம் வழியின் பொருட்டு!..

தீப ஒளியினால் - புற இருள் அகல்கின்றது..

அவ்வண்ணமாக - அகத்தில் ஒளி பெருக வேண்டும்..

இதுவே திருக்கார்த்திகை தீபம் ஏற்றுதலின் சிறப்பு..


கடந்த 16/11 அன்று, தங்கக் கொடிமரத்தில் திருக்கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது..

நாளும் பஞ்ச மூர்த்திகள் திருக்கோலங்கொண்டு எழுந்தளினர்..





சிறப்பு நிகழ்வாக -
21/11 அன்று வெள்ளித் தேரோட்டமும் 22/11 அன்று மகாரதங்களின் பவனியும் நடைபெற்றது..

நேற்று அதிகாலை மூலவர் சந்நிதியில் மகாபரணி தீபம் ஏற்றப்பட்டது..

இன்று மாலை ஆறுமணியளவில் ஆண்டுக்கொருமுறை நிகழும் அற்புதமாக ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கொடிமண்டபத்திற்கு எழுந்தருள்கின்றார்..

அவ்வேளையில், ஏக காலத்தில் -
கொடி மரத்தின் முன்னுள்ள அகண்டத்திலும் அண்ணாமலையின் சிகரத்திலும் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுகின்றது..

இதையடுத்து, தங்க ரிஷப வாகனத்தில் -
ஸ்ரீ உண்ணாமுலை நாயகியும் ஸ்ரீ அண்ணாமலையாரும் எழுந்தருள்கின்றனர்..


வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மருகில்
துளக்கில் கபாலீச்சரத்தான் தொல்கார்த்திகை நாள்
தளத்தேந்து இளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு!..

- காண வருவாய் பூம்பாவாய்!.. - என, திருமயிலையில் அருளுகின்றார் திருஞான சம்பந்தப்பெருமான்..

தீபமேற்றுதலும் அது கொண்டு ஈசனை வழிபடுதலும் பாரம்பர்ய நிகழ்வு..

அதன் பயன் - மனம் ஒன்றுபடுதல். ஒடுங்குதல்..

அதன் மூலம் அன்பு கொண்டு  அகிலத்தின் சகல உயிர்களுக்கும் ஆதரவளித்தல்..

அதுவே பிறவிப் பயன்!..

அதனை எய்துதற்கே - ஆன்றோர்கள் வழிகாட்டுகின்றனர்..


வையம் தளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே என்று!.. (2082)
- பொய்கையாழ்வார் -

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்!.. (2182)
- பூதத்தாழ்வார் -

இல்லக விளக்கது இருள் கிடப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே!..
- திருநாவுக்கரசர் -

இல்லத்திலும் உள்ளத்திலும் 
விளக்கேற்றுவோம்!..

திருக்கார்த்திகைத் திருநாள் நல்வாழ்த்துகள்!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *

14 கருத்துகள்:

  1. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் திருக்கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள் !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. வாழ்த்துக்கள் முதலில்.
    ஆஹா திருவண்ணாமலையா? நடக்கட்டும் நடக்கட்டும்,,,,,,,
    விளக்கமும், படமும் அழகு, அருமை,
    தொடருங்கள், அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. பொய்கையாழ்வார், பூத்தாழ்வார் பாடல்களை ரொம்ப நாட்களுக்குப்பிறகு படிக்க நேர்ந்ததில் மகிழ்வாக இருந்தது. பகிர்விற்கு அன்பு நன்றி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      ஆன்றோர் திருவாக்கு அமிர்தமாக இருக்கின்றது..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. இதைப் படிக்கும் போது தொலைக்காட்சியில் நேரடி ஒளி பரப்பும் நிகழ்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அன்பின் ஜி வணக்கம்
    திருவண்ணாமலை தீபத்திருநாளைப் பற்றிய விளக்கவுரையும் அழகிய படங்களும் நன்று தங்களுக்கு கார்த்திகை திருநாள் வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. நேரடியாக திருவண்ணாமலை தரிசனம் கிடைக்கவில்லை ஆனால் தங்களின் பதிவின் மூலம் அதுவும் கிடைத்துவிட்டது ஐயா. அருமை. அதுவும் இறுதியாகப் பாடலுடன் பதிவு ....தரிசித்தோம். கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
      வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  7. முக்தி அளிக்கும் பக்தி பதிவு
    திருக் கார்த்திகை தீபத் திருநாள்
    நல்வாழ்த்துகள் அய்யா

    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..