நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஏப்ரல் 25, 2015

சித்திரைத் திருவிழா - 2

மதுரையம்பதியில் நிகழ்வுறும் -
சித்திரைத் திருநாளின் மூன்றாம் திருநாள் மற்றும் நான்காம் திருநாளின் படங்களை - இன்றைய பதிவில் வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன்..


மாமதுரைத் திருக்கோயிலின் சிறப்புகளுள் சில..

ஆதியான திருத்தலங்களுள் மாமதுரையும் ஒன்று..

கடம்ப வனம் என்று புகழப்படும் - இத்திருத்தலத்தில் கடம்ப மரத்தின் கீழ் - இந்திரனின் வழிபாட்டிற்கென - ஈசன் சுயம்புவாக எழுந்தனன்.

அதனால் மகிழ்வுற்ற தேவேந்திரன் - விண்ணுலகில் இருந்து விமானம் கொண்ர்ந்து -  சமர்ப்பித்தான்.

இந்திர விமானத்தை - 8 யானைகளும் 32 சிங்கங்களும் 64 பூதகணங்களும் தாங்குகின்றன.


மனிதரும் தேவரும் மாயாமுனிவரும் வந்து சென்னிக் 
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றைவார் சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே!.. (4)
-: அபிராமி அந்தாதி :-

14 திருக்கோபுரங்களுடனும் 5 திருவாசல்களுடனும் திகழ்கின்ற திருக்கோயில் பல்வேறு காலகட்டங்களில் புனரமைக்கப்பட்டிருக்கின்றது. .

ஒன்பது நிலை கோபுரங்கள் - நான்கு.
ஏழு நிலைக் கோபுரம் ஒன்று. இதுவே சித்திரைக் கோபுரம் என்பது.
ஐந்து நிலைக் கோபுரங்கள் ஐந்து. மூன்று நிலைக் கோபுரங்கள் இரண்டு.

இவற்றுடன் - ஸ்வாமி அம்பாள் மூலஸ்தான - தங்க விமானங்கள்

ராஜ கோபுரங்களுள் - தெற்கு வாசல் திருக்கோபுரமே உயரமானது.
160 அடி உயரமுடைய தெற்குக் கோபுரத்தில் - 1511 சுதை சிற்பங்கள் உள்ளன.

வெகு காலமாக பூர்த்தியடையாமல் இருந்ததால் - திருக்கோயிலின் வடக்கு கோபுரத்தை மொட்டைக் கோபுரம் என்று சொல்வர்.

மிக அதிக அளவிலான சுதை சிற்பங்களை உடையது - இத்திருக்கோயில்.

இன்றைய பதிவின் படங்களை வழங்கியோர் :- 
திரு. குணா அமுதன், திரு. ஸ்டாலின், திரு அருண்.,
அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி..
* * *

மூன்றாம் திருநாள் (23/4) வைபவம் 
மாசி வீதிகளில் நிகழ்ந்த திருவீதி உலா!..

காலை - தங்கச் சப்பரம்.

-: இரவு :- 
ஸ்ரீசொக்கநாதப் பெருமான் கயிலாய பர்வதத்திலும் -
அன்னை அங்கயற்கண்ணி காமதேனு வாகனத்திலும் எழுந்தருளினர்.




காமதேனு வாகனத்தில் - அம்பாளின் சடையழகு!..



நான்காம் திருநாள் (24/4) வைபவம் 
சித்திரை வீதிகளில் நிகழ்ந்த திருவீதி உலா!..

காலை - தங்கப் பல்லக்கு.





-: இரவு :-
வில்லாபுரம் பாவக்காய் மண்டபத்திற்கு 
ஸ்ரீ சுந்தரேசப் பெருமானும் இளங்கிளி மீனாளும் 
தங்கப் பல்லக்கில் எழுந்தருளினர்.










முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி
முதிருஞ் சடைமேல் முகிழ்வெண் திங்கள்
வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும் 
வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத்
துளைத்தானை சுடுசரத்தாற் துவள நீறாத்
தூமுத்த வெண்முறுவல் உமையோடாடித்
திளைத்தானைத் தென்கூடற் திருஆலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே!.. (6/19)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்  
* * *

16 கருத்துகள்:

  1. அருமையானபுகைப் படங்களைக் கொடுத்துதவும் உங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள்.புகைப்படப் பதிவுக்குப் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      பாராட்டப்பட வேண்டிய படங்கள் அவை!..
      தங்கள் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. வழக்கமான தங்களது வர்ணனை அருமை இதில் 4 வது படம் மிகவும் அருமை நண்பரே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. தங்கள் நடையில் சித்திரைவிழா 2 ஆம் பதிவு அருமை. புகைப்படங்கள் அத்துனையும் அழகு. நன்றி,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. புகைப்படங்கள் அருமை! உங்கல் விவரணமும் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் இனிய வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. படங்கள் ஒவ்வொன்றும் மிகவும் சிறப்பு ஐயா... நன்றிகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. மதுரைப் பயணம் தொடர்வது அறிந்து மகிழ்ச்சி. எங்களையும் அழைத்துச்செல்வது எங்களுக்கு பெருமகிழ்ச்சி. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி..
      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  7. அலங்கரிப்பட்ட மாடும், யானையும் கம்பீரமாக நடந்துவரும் படம் வெகு ஜோராக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. படங்கள் அனைத்துமே அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..