நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், பிப்ரவரி 19, 2015

தஞ்சை திருவிழா

பாரம்பரிய சிறப்புகள் பலவற்றைக் கொண்டது - தஞ்சை மாவட்டம்.

அனைவரையும் ஈர்ப்பது - தஞ்சையின் கலை, கலாசாரம், ஓவியம், நடனம்.


பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், 

பல்வேறு கைவினைக் கலைஞர்களை ஊக்கப்படுத்தவும்,

பாரம்பரிய விளையாட்டுகளை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்லவும்

மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசின் அனைத்து துறைகளும் இணைந்து தஞ்சாவூர் திருவிழா நடத்த முடிவு செய்து, அதன்படி -

கடந்த ஜனவரி 24, 25, 26 நாட்களும் தஞ்சை அரண்மனை வளாகத்தில் மாபெரும் கலை விழா நடைபெற்றது.




மாவட்ட தொழில் மையம் மூலம் பல்வேறு கலைஞர்களின் கைவினை பொருட்கள் தயாரிப்பது தொடர்பான செயல் விளக்கம், கண்காட்சி மற்றும் விற்பனையும் நடைபெற்றது.

சிலம்பம், உறியடி, கிளித்தட்டு, கண்ணாமூச்சு, பல்லாங்குழி, தாயம், கில்லி, பாண்டியாட்டம் (சில்லி), பம்பரம், ஆடுபுலி - என பத்து விளையாட்டுகள் நடத்தப்பெற்றன.

மறைந்து வரும் பாரம்பரிய விளையாட்டுகளை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்லவும், அவர்களை ஊக்கப்படுத்துவதற்காகவும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்தியது. 

தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் - மாவட்டங்களைச் சேர்ந்த எழுநூறு மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப் பட்டன.

பழமையான விவசாய முறைகள் குறித்தும்செயல்முறை விளக்கம் மற்றும் கண்காட்சியும் இடம்பெற்றது.

பருவ காலத்திற்கேற்ற பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்கள் - மறைந்து வருகின்ற காலகட்டத்தில்,

பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் 
அவற்றைத் தயாரிக்கும் செயல்முறை விளக்கங்கங்கள் இடம்பெற்றன.






பெண்களுக்கு மாக்கோலம், ரங்கோலி வரைதல், பாரம்பரிய உணவு தயாரித்தல், சிகை அலங்காரம் செய்தல் - இவற்றில் போட்டிகள் நடைபெற்றன.

மாணவ, மாணவிகளுக்கு ஓவியம், புகைப்படம், சைக்கிள், நீண்ட தூர ஓட்டப் பந்தய போட்டிகள் நடத்தப்பெற்றன.   






தஞ்சை அரண்மனை வளாகத்தில், 26/1 அன்று இரவு நடைபெற்ற தஞ்சாவூர் திருவிழாவின் நிறைவு விழாவில் -

மாவட்ட ஆட்சியர் திரு. என். சுப்பையன் அவர்கள் கூறியதாவது:  
தஞ்சாவூரில் முதல் முறையாக தஞ்சாவூர் திருவிழா தொடங்கப்பட்டு, மூன்று நாள்கள் நடைபெற்றது. இந்த விழாவுக்குப் பொதுமக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமல்லாமல், இதர பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஆண்டுதோறும் நடத்தப்படவுள்ள இந்த விழா வரும் ஆண்டுகளில் தொடர்ந்து ஐந்து நாள்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவைப் பெற்று தஞ்சை மாநகரில் மட்டுமல்லாமல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விழா நடத்தப்படும்.

இது, தஞ்சாவூர் மாவட்ட மக்களின் விழா. எனவே, அனைவரும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும்!..

- என்றார் மாவட்ட ஆட்சியர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் எஸ். கோபால கிருஷ்ணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கு. தர்மராஜன், மேயர் சாவித்திரி கோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.











மூன்று நாட்களும் மாலையில் கிராமிய கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், வீணை, வயலின், வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் நடைபெற்றன. 

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி இந்திய சுற்றுலா பயணிகள் மற்றும் அடுத்த தலைமுறையினருக்கும் பாரம்பரியங்களை எடுத்துரைக்கும் வகையில் இந்த விழா அமைந்தது குறிப்பிடத்தக்கது. 

அடுத்தடுத்து நிகழ்ந்த விசேஷங்களினால் - இந்தப் பதிவு தாமதமாகி விட்டது.

ஒரு இணைப்பு!..

அன்பின் கில்லர் ஜி அவர்கள் கிளித்தட்டு விளையாட்டைப் பற்றிக் கேட்டுள்ளார்கள்.. 

தமிழர் விளையாட்டுகளில் முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டு இது. 

பண்டைத் தமிழ் உழவர் கூட்டம் விளைபயிரை கிளிகள் வந்து கொத்தாமல் மறித்துக் கொத்தாமல் காவல் செய்வதாக ஆடும் விளையாட்டு இது.

அதைப் பற்றிய ஒரு காணொளியும் கிடைத்துள்ளது. 

கீழே உள்ள இணைப்பில் கண்டு மகிழவும்!..

www.youtube.com/watch?v=z-MIfyF8uRQ


என்ன நண்பர்களே.. 

ஓடி விளையாடியதால் -  உடலுக்கு பயிற்சியும் ஆயிற்று.. 
மனதிற்கு மகிழ்ச்சியும் ஆயிற்று!..

கிளித்தட்டு விளையாடலாமா!..

வாழ்க கலை..
வளர்க கலை!..
* * *

24 கருத்துகள்:

  1. அன்பின் ஜி வணக்கம்
    அழகான விளக்கவுரைகளுடன் அருமையான புகைப்படங்கள் அழகு எது என்ன ? நண்பரே ‘’கிளித்தட்டு’’ இதுவரை நான் கேள்விப்படாத விளையாட்டாக இருகிறது சேஷ்போர்டில் வந்தவுடன் வருகிறேன் நான்தான் முதல் நபர் என நினைக்கின்றேன் வாழ்த்துகளுடன்.
    கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      மீண்டும் - ஒரு காணொளி இணைத்துள்ளேன்.
      கிளித்தட்டு விளையாடுவது எப்படி என்று!.. கண்டு மகிழவும்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
    2. காணத்தந்த அன்பின் ஜி அவர்களுக்கு நன்றி.

      நீக்கு
  2. நெஞ்சை அள்ளும் தஞ்சை திருவிழா வெகு சிறப்பு!
    நேரடி அலை ஒலி பரப்பா?
    அல்லது
    நேரடி வலை ஒலி பரப்பா?
    தமிழர் கலாச்சார கலை விழா குறித்த சிந்தனை பதிவு!
    பாராட்டுக்குரியது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நம்பி..
      தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. தஞ்சையில் இருந்தும் காணாத விழாவினை
    தங்களால் இன்று கண்டேன்
    மகிழ்ந்தேன்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையினால் நானும் மகிழ்ந்தேன்.. வாழ்க நலம்!..

      நீக்கு
  4. Intha ponnana nerathil thanjaiyil illaiye ena varuthamaaka irukkirathu

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அழகான கோலங்கள்...

    youtube இணைப்பிற்கு மிக்க மிக்க நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. நம் பாரம்பரிய விளையாட்டுக்களுடன் நடந்த தஞ்சை விழா பற்றிய விபரங்கள் அருமை!. அழகிய படங்களுடன் கிளித்தட்டு காணொளியும் கண்டேன். ஆண்டுதோறும் தஞ்சாவூர் விழா நடக்கப் போவதறிந்து மகி்ழ்ச்சி. விழாவைப் பற்றிய அருமையான பதிவுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களை அன்புடன் வரவேற்கின்றேன்..
      தங்களின் முதல் வருகைக்கு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கு மிக்க நன்றி..

      நீக்கு
  7. உங்கள் தளத்தில் என்னால் இணைய முடியவில்லை. மன்னிக்கவும்...

    "உங்கள் கோரிக்கையை எங்களால் கையாள முடியவில்லை. மீண்டும் முயற்சி செய்க அல்லது சிறிதுநேரம் கழித்து திரும்பி வருக. என்ற செய்தி வருகிறது."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மிக்க நன்றி..

      இது இப்படித்தான் சில மாதங்களாக கோளாறு செய்து கொண்டிருக்கின்றது. அந்த நீல நிற பட்டைக்கு சற்று அருகில் சின்னஞ்சிறிய சிவப்பு கட்டங்கள் தெரிகின்றதல்லவா அதனை சொடுக்கிப் பாருங்கள்.. வாழ்க நலம்!..

      நீக்கு
  8. அழகான தொகுப்பு ஐயா...
    படங்களைப் பார்த்தே விழாவின் சிறப்பைக் காண முடிந்தது...
    அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகை மகிழ்ச்சி!..
      படங்கள் தஞ்சாவூர் Fb ல் கிடைத்தவை.
      தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி..

      நீக்கு
  9. தஞ்சையில் உள்ளவர்கள்கூட இந்த அளவு பார்த்திருக்கமாட்டோம். அந்த அளவு முயற்சி எடுத்து மிக சிறப்பாக அழகான புகைப்படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அழகிய படங்கள் நண்பர்கள் அளித்தவை.
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. அருமையான தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      இனிய வருகைக்கு மகிழ்ச்சி.. மிக்க நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..