நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஏப்ரல் 18, 2014

இறைமகன் இயேசு

இன்னும் இரண்டு நாட்களில் பஸ்கா பண்டிகை. புளிப்பில்லாத அப்பம் அந்தப் பண்டிகையில் விசேஷம். 

அந்த வேளையில் தலைமை ஆச்சாரியர்களும் வேத பாரகரும் ஒன்றாய்க் கூடி, ஏதேனும் பொய்க் குற்றம் சுமத்தி - இயேசுவை சிறைப் பிடித்து கொன்று விடத் திட்டம் தீட்டினர். 

இருப்பினும் பண்டிகை நேரத்தில் அவர் சிறைப் பிடிக்கப்படுவதை ஒரு சாரார் விரும்பவில்லை. அதனால் மக்களிடையே கோபம் உருவாகி கலகம் விளையும் என்றனர்.   


இயேசு பெத்தானியாவில் - தொழுநோயாளியான சீமோனின் வீட்டில் நடந்த விருந்தில் இருந்தார். அவருடன் உயிர்ப்பிக்கப்பட்ட லாசரும் இருந்தான். மார்த்தாள் உணவு பரிமாறினாள். அப்போது அங்கு வந்த பெண் ஒருத்தி - தான் கொண்டு வந்திருந்த விலை மதிப்புள்ள நளதம் எனும் வாசனைத் தைலத்தை இயேசுவின் பாதங்களில் ஊற்றி - அதனைத் தன் தலைமயிரால் துடைத்து அன்பு செய்தாள். வீடு முழுதும் நறுமணத் தைலத்தின் வாசனை நிறைந்தது. 

அப்போது சீமோனின் மகன் யூதாஸ் இதனைக் கவனித்து விட்டு, ''.. நறுமணத் தைலத்தை ஏன் வீணாக்கினாய்?.. இது முந்நூறு வெள்ளிக் காசுகள் பெறும். இதனை விற்று வரும் பணத்தால் - ஏழைகளுக்கு உதவி செய்யாலாமே!..'' - என்று கடிந்து கொண்டான். அவனுக்கு உண்மையில் ஏழைகளின் மீது இரக்கம் ஏதும் கிடையாது. அவன் ஒரு திருடன் ஆனபடியால் இப்படி சொன்னான். 


இறைமகனோ -  ''.. அவளை ஒன்றும் சொல்ல வேண்டாம். அவள் எனக்காக ஒரு நல்ல செயலைச் செய்தாள். ஏழைமக்கள் எப்போதும் உங்களோடு இருப்பார்கள். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் விரும்பிய உதவிகளை அவர்களுக்குச் செய்யலாம். ஆனால் நான் எப்போது உங்களுடன் இருக்க மாட்டேன். தன்னால் முடிந்ததைத் தான் அவள் எனக்காகச் செய்திருக்கின்றாள். 

நான் அடக்கம் செய்யப்படும் வேளையில் என் உடலில் தைலம் பூச முந்திக் கொண்டாள். நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகின்றேன். உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் நற்செய்தி சொல்லப்படும் வேளையில் - இந்தப் பெண் செய்ததும் சொல்லப்படும். அப்போது மக்கள் இவளை நினைவில் இருத்திக் கொள்வார்கள்!..'' - என்றார். 

சீடர்கள் இதைக் குறித்து ஏதும் அறியாதவர்களாக இருந்தனர்.

பன்னிரு சீடர்களுள் ஒருவனான யூதாஸ் காரியோத் -  இயேசுவை காட்டிக் கொடுக்க விரும்பினான். எனவே - தலைமை ஆச்சாரியர்களிடம் பேசுவதற்குச் சென்றான். இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர்கள் - அதற்குரிய தொகையைத் தருவதாக வாக்களித்தனர். யூதாஸ் தக்க தருணத்திற்காக காத்திருந்தான். 

அன்று பண்டிகையின் முதல் நாள். லாசருவை மரணத்தில்  இருந்து எழுப்பிய இயேசுவைச் சந்திக்க விரும்பி கிரேக்க நாட்டில் இருந்து பலர் வந்திருந்தனர்.

அவர்கள் மத்தியில் இளங்கழுதையின் மீது அமர்ந்தவராக  இயேசு வந்தார். 

''..தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவரே வருக!.. கர்த்தரின் பேரால் வருகிறவரே வருக!..''  - என்று மக்கள் ஆரவாரம் செய்தனர். 

இறைமகன் பற்பல நல்ல வார்த்தைகளைச் சொன்னார். ''..நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகின்றேன். ஒரு கோதுமை விதை தரையில் விழுந்து அழிய வேண்டும். பிறகுதான் அது வளர்ந்து ஏராளமாகக் கோதுமையைத் தரும். அது அழியா விட்டால், தனி விதையாகவே இருக்கும். இன்னும் சிறிது காலம் ஒளி உங்களுடன் இருக்கும். ஒளி இருக்கும் போதே நடந்து விடுங்கள். இருளில் போகின்றவனுக்குத் தான் எங்கே போகின்றோம் என்பது தெரியாமல் இருக்கும். ஒளி இருக்கும் போதே அதன் மீது நம்பிக்கை வையுங்கள்!..'' - என்றார்.


ஏறக்குறைய பஸ்கா பண்டிகைக்கான நேரம்.  உலகை விட்டுச் செல்வதற்கான நேரம் இது தான் - என்று இறைமகன் அறிந்திருந்தார். சீடர்களுடன் மாலை உணவு வேளையில் அமர்ந்த இயேசு - ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார். ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி - சீடர்களின் கால்களைக் கழுவி - துண்டால் துடைத்தார். 

பேதுரு மறுத்தான். இறைமகன் - ''..நான் என்ன செய்கிறேன் என்று இப்போது உனக்குத் தெரியாது. ஆனால் பிறகு புரிந்து கொள்வாய் என்றார். என்னோடு பகிர்ந்து உண்பவனே - எனக்கு எதிராகத் திரும்பி விட்டான். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். உங்களில் ஒருவனே என்னைக் காட்டிக் கொடுப்பான். 
 
நான் உங்களுக்கு புதிய கட்டளையைத் தருகிறேன். நான் உங்களை நேசித்தது போன்று நீங்களும் ஒருவரை ஒருவர் நேசியுங்கள்!.. நான் என் பிதாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து அவரது அன்பினில் நிலைத்திருக்கின்றேன். நீங்களும் எனது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து எனது அன்பினில் நிலைத்திருங்கள்!..'' -  என்றார். 

பேதுரு, ''ஆண்டவரே!.. நான் உங்களுக்காக உயிர் தரவும் தயார்!..'' என்றான்.

இறைமகன் அதற்கு - ''..நீ உண்மையிலேயே உன் உயிரையும் தருவாயா?.. நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன். நீ என்னை அறியாதவன் என்று சேவல் கூவுவதற்கு முன்னால் மூன்று முறை மறுதலிப்பாய்!..'' - என்றார்.

மேலும் பல நல்ல வார்த்தைகளை அவர்களுக்கு அறிக்கையிட்டார்.

இறைமகன் தனது பிரார்த்தனைகளை முடித்துக் கொண்டு சீடர்களுடன் - கீதரோன் பள்ளத்தாக்கிற்கு அப்பால் ஆலிவ் மரங்கள் நிறைந்திருந்த தோட்டத்துக்குச் சென்றார். அங்கே தலைமை ஆச்சாரியனால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் ஆயுதங்களுடனும் தீப்பந்தங்களுடனும் வந்தனர். 

அந்தக் கூட்டத்தில் - யூதாஸூம் இருந்தான். நடக்க இருக்கும் அனைத்தையும் அறிந்திருந்த இறைமகன் - ''..நீங்கள் யாரைத் தேடுகின்றீர்கள்?..'' - என்றார்.

வந்தவர்களோ - ''..நாசரேத்திலிருந்து வந்துள்ள இயேசுவை!..'' - என்றனர். 


அதற்கு அவர், ''நானே இயேசு!..'' - என்றபோது அதிர்ச்சியுடன் அவர்கள் பின் வாங்கித் தரையில் விழுந்தார்கள். பின் எழுந்தார்கள். மீண்டும் கேட்டார்கள்.

இறைமகன் மீண்டும் பதிலளிக்கவே - அவரைப் பிடித்துக் கட்டினர். அந்த ஆண்டின் தலைமை ஆச்சாரியனான காய்பா என்பவனின் மருமகன் அன்னா என்பவனிடம் கொண்டு வந்தனர். 

அவன் தலைமை ஆச்சாரியனான காய்பாவிடம் அனுப்பி வைத்தான். அவன் விசாரித்தான். காய்பாவின் வேலைக்காரன் இறைமகனின் கன்னத்தில் அறைந்தான். காய்பா - ரோம ஆளுநரான பிலாத்துவிடம் அனுப்பினான்.

இயேசுவைக் கொல்லத் தீர்மானித்ததை அறிந்து மனம் வருந்திய யூதாஸ் தான் வாங்கிய முப்பது வெள்ளிக் காசுகளை தேவாலயத்தில் விட்டெறிந்தான். வெளியில் வந்து தூக்கில் தொங்கி மாண்டு போனான்.
 
பொழுது விடியும் நேரம் அது. பிலாத்து வெளியே வந்தான். இந்த மனிதனின் மீது என்ன குற்றம் சாட்டுகிறீர்கள் என்றான். அதற்கு யூதர்கள், ''..கெட்ட மனிதன் என்பதால் இவனை - உம்மிடம் அழைத்து வந்தோம்!..'' - என்றார்கள்.

பிலாத்து இயேசுவை அழைத்து விசாரித்தான். முடிவில் - ''நான் இவனுக்கு எதிராகக் குற்றம் சாட முடியவில்லை. எனவே பண்டிகை நாள் என்பதற்காக இவனை விடுதலை செய்யலாமா?..'' எனக்கேட்டான். அதற்கு அவர்கள் துர்நடத்தை உடைய திருடனான பரபாஸ் என்பவனின் விடுதலையைக் கேட்டார்கள். 


பிலாத்துவின் ஆணைப்படி இறைமகன் சவுக்கால் அடிக்கப்பட்டார். பலமுறை முகத்தில் அறைந்தனர். அவர் மீது உமிழ்ந்தனர். அவமதித்தனர். சேவகர்கள் கூரிய முட்களால் வளையம் ஒன்றைப் பின்னி அதனை இயேசுவின் தலையில் பொருத்தினர்.  பிலாத்து மீண்டும் வெளியே வந்து - ''.. நான் இவனிடம் ஒரு குற்றத்தையும் காண முடியவில்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும்!..'' - என்றான்..

கூடி நின்ற கொடியவர்கள், ''..அவனை சிலுவையில் அறையுங்கள்!..'' - எனக் கூச்சலிட்டனர். பிலாத்து அதை ''..நீங்களே செய்யுங்கள்!..'' என்றான். மீண்டும் உள்ளே சென்ற பிலாத்து, ''..என்னிடம் நீ பேச மறுக்கிறாய். உன்னைச் சிலுவையில் அறைந்து கொல்வதற்கு எனக்குஅதிகாரம் உள்ளது!..''- என்றான்.

எனினும் அவரை விடுவிக்க முயன்றான். யூதர்களோ கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். 

அப்போது பகல் ஒன்பது மணி. கபத்தா எனும் மேடையில் அமர்ந்து - பிலாத்து, இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்லும்படி ஒப்படைத்தான். அனைவரும் காணும்படிக்கு தன் கைகளைத் தண்ணீரால் கழுவிக் கொண்டான்.

சேவகர்கள் இயேசுவை இழுத்துச் சென்றனர். பெண்கள் பலரும் மார்பில் அறைந்து கொண்டு  கதறி அழுதனர். 

இறைமகன் தனக்கான சிலுவையைச்  சுமந்து கொண்டு - வெயிற் பொழுதில் மிகுந்த வேதனையுடன்  - கல்வாரி மலையில் - கொல்கதா எனும் இடத்துக்கு நடந்தார். இறைமகனை சிலுவையில் வைத்து கூரிய ஆணிகளால் அறைந்தனர். அவருடைய ஆடைகளை சீட்டு போட்டு பகிர்ந்து கொண்டனர். இயேசுவின் இருபுறமும் இரு கொள்ளையர்களும் சிலுவையில் அறையப்பட்டனர். 


நன்றி கெட்ட மக்கள் அவர் அருகில் சென்று திட்டினார்கள். ''..நீ தேவனின் குமாரன் என்பது உண்மையானால் சிலுவையிலிருந்து இறங்கி வா..'' - என்று ஏளனம் செய்தனர். 

நடுப்பகல் நேரம்.  திடீரென வானம் இருண்டது. அந்த இருள் மூன்று மணி நேரத்துக்கு நீடித்தது. பிற்பகல் மூன்று மணிக்கு -  

இயேசு உரத்த  குரலில், ''..என் தேவனே!.. என் தேவனே!.. ஏன் என்னைக் கை விட்டீர்?..'' - என்று கதறினார்.  

ஒருவன் ஓடிச்சென்று காடியில் நனைக்கப்பட்ட காளானை ஈட்டியில் செருகி அவரது வாயருகே நீட்டினான். 

இயேசு மீண்டும் ஒருமுறை   சத்தமிட்டுக் கதறினார். அவரது ஆவி பிரிந்தது. 

தேவாலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழாகக் கிழிந்து தொங்கியது. நிலம் நடுங்கியது. பாறைகள் அதிர்ந்து நொறுங்கின. கல்லறைகள் அனைத்தும் பிளந்தன.  அங்கே காவலிருந்த படைத் தலைவனும் படையாட்களும் பயந்து நடுங்கினர்.

''.. இவர் உண்மையிலேயே தேவகுமாரன் தான்!..'' - என்றனர். 

கலிலேயாவில் இருந்து இயேசுவைத் தொடர்ந்து வந்த பெண்கள் சிலுவைக்கு சற்று தொலைவில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் மகதலேனா , மரியாள். யாக்கோபு, யோவான் ஆகியோரின் தாயும் இருந்தனர். 


பின்னர் பிலாத்துவின் ஆணைப்படி - இயேசுவின் சரீரத்தைப் பெற்ற யோசேப்பு - புதிய மென்மையான துணியில் சரீரத்தைச் சுற்றி புதியதான கல்லறையில் அடக்கம் செய்து பெரிய கல்லைக் கொண்டு கல்லறையை மூடினான். 

மகதலேனா மரியாளும் மரியாள் எனப்பெயர் கொண்ட வெறொரு பெண்ணும் கல்லறையின் அருகில் அமர்ந்திருந்தனர்.

அடிவானில் ஆதவன் அழுது சிவந்த முகத்துடன் மறைந்தான்.

18 கருத்துகள்:

  1. இன்றைய தினத்திற்கேற்ப பகிர்வுக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  2. புனித வெள்ளியைப் போற்றும் அற்புதப் பதிவு
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  3. புனிதவெள்ளியைக் குறித்த இயேசுவின் வாழ்க்கையில் நடந்த சில அம்சங்களை தெளிவாகச் சொன்னதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  4. புனித வெள்ளியன்று சிறப்பான பகிர்வுகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  5. இயேசுவின் கடைசி காலத்தை கண்முன் நிறுத்தினீர். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      லூக்கா, யோவான் - சுவிசேஷங்களை வாசித்து தகவல்களைத் தொகுத்த பதிவு - இது.
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  6. பாவம் சுமந்தோர்க்காய் பாவியாக்கப் பட்டவரின்
    ஆவிக்கும் உண்டே அருள் !

    அருமை
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சீராளன் அவர்களுக்கு நல்வரவு..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  7. பதில்கள்
    1. அன்பின் குமார்.
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  8. பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  9. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..