நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 26, 2014

வாழ்க பாரதம்

இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!.. 
 

பெற்றதாயும் பிறந்த பொன் நாடும் 
நற்றவ வானினும் நனி சிறந்தனவே!.. 

 
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி 
இருந்ததும் இந் நாடே  - அதன் 
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து 
முடிந்ததும் இந் நாடே  - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து 
சிறந்ததும் இந் நாடே  -இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ - இதை 
வந்தேமாதரம் வந்தேமாதரம்
என்று வணங்கேனோ!..  
  

ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா 
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
களி படைத்த மொழியினாய் வா வா வா 
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா!..

 

தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறு போல் நடையினாய் வா வா வா!.. 

 
இளைய பாரதத்தினாய் வா வா வா
எதிரிலா வலத்தினாய் வா வா வா
ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்
உதய ஞாயிறொப்பவே வா வா வா!..


களையிழந்த நாட்டிலே முன்போலே
களி சிறக்க வந்தனை வா வா வா
விளையு மாண்பு யாவையும் பார்த்தன்போலே
விழியினால் விளக்குவாய் வா வா வா!.. 


வெற்றி கொண்ட கையினாய் வா வா வா
விநயம் நின்ற நாவினாய் வா வா வா
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
முழுமை சேர்முகத்தினாய் வா வா வா!..
 

கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதிய தியற் றுவாய் வா வா வா
ஒற்று மைக்கு ளுய்யவே நாடெல் லாம் 
ஒருபெ ருஞ்செயல் செய்குவாய் வா வா வா!..
- மகாகவி சி.சுப்ரமணிய பாரதியார்.


வந்தேமாதரம்!.. வந்தேமாதரம்!..
வந்தேமாதரம்!..

14 கருத்துகள்:

 1. இனிய குடியரசு நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. அன்பின் தனபாலன்..
  குடியரசு தின நல்வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 3. குடியரசு தின வாழ்த்துக்கள். பதிவுக்குப் பாடல் வரிகள் மெருகூட்டுகின்றன,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா!..
   தங்களுடைய வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

   நீக்கு
 4. குடியரசு தின வாழ்த்துக்கள் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் நல்வாழ்த்துக்களும் கண்டு மிக்க மகிழ்ச்சி

   நீக்கு
 5. இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் நல்வாழ்த்துக்களும் கண்டு மிக்க மகிழ்ச்சி

   நீக்கு
 6. இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்.
  பாடல்கள் பகிர்வு அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தஞ்சையம்பதியைத் தொடரும் தங்களை -
   வருக வருக என்றழைத்து மகிழ்கின்றேன்.
   தங்கள் வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி..

   நீக்கு
 7. குடியரசு தின நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. அன்பின் வெங்கட்..
  தங்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 9. குடியசு தின நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகைக்கும்
   நல்வாழ்த்தினுக்கும் மிக்க நன்றி

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..