நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
வெள்ளிக்கிழமை
படிக்கின்றிலை பழநித்திரு நாமம் படிப்பவர் தாள்
முடிக்கின்றிலை முருகா என்கிலை முசியாமல் இட்டு
மிடிக்கின்றிலை பர மாநந்த மேற்கொள விம்மி விம்மி
நடிக்கின்றிலை நெஞ்சமே தஞ்சம் ஏது நமக்கினியே... 75
கந்தரலங்காரம்
நன்றி கௌமாரம்
ஏ.. நெஞ்சே, பழநியம்பதியின் அருமை பெருமைகளைப் படித்து உணர்ந்தாயில்லை. பழநி முருகனின் திருப்பெயர்களை ஓதுகின்ற அடியார்களது திருவடிகளைப்
பணிகின்றாயில்லை.
முருகா சரணம்' என்று துதிக்கின்றாயில்லை. யாசித்து வருவோர்க்கு முகம் கோணாமல் உணவு வழங்கி -
அதனால், நீ வறுமை அடைந்தாயில்லை. பேரின்பம் மிகுதியாகி முருகனை நினைத்து விம்மி விம்மி அழுகின்றாயில்லை...
அன்பினால் முருகன் பேர் பாடி ஆடுகின்றாயில்லை..
இப்படியிருக்க நமக்கு ஏது அடைக்கலம் ?..
-: தஞ்சையம்பதி :-
முசியாமல் இட்டு மிடிக்கின்றிலை...
இந்த வரிகளினூடாக நாயன்மார்கள் பலர் நினைவுக்கு வருகின்றனர்..
-::-
முருகா சரணம்
சிவாய நம
**
கௌமார பாடலும், உங்கள் விளக்கமும் அருமை.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. கந்தரலங்கார பாடலும், உங்கள் விளக்கமும் நன்றாக உள்ளது.
/யாசித்து வருவோர்க்கு முகம் கோணாமல் உணவு வழங்கி -
அதனால், நீ வறுமை அடைந்தாயில்லை./
உண்மையான வரிகள். அதுதானே வாழ்வில் மிகப் பெரிய பேரின்பம். அதை செய்யும் திடம் நம் மனதில் உருவாக முருகன் அருள வேண்டும். பிரார்த்தனை செய்து கொள்கிறேன். முருகா சரணம். 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.