நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, டிசம்பர் 11, 2021

மகாகவி வாழ்க

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மகாகவியின் பிறந்த நாள்..


மகாகவியின் தீர்க்க தரிசன வரிகளுக்கு  இன்றைய நாட்களில் மிகச் சரியான உதாரணம் -
மக்களின் வரிப்பணத்தில்
இருந்து
ஆயிரக்கணக்கில் ஊதியமாகப் பெற்றுக் கொண்டு
மழை நீர் வடிவதற்கு வழி இல்லாமல் செய்து  தேங்கிய கழிவு நீருக்குள்  மக்களைத் தவிக்கும்படிக்குச் செய்த அரசு ஊழியர்கள்..
*


நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி

உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டு சேலை என்றும்
செப்பித் திரிவாரடி கிளியே
செய்வத றியாரடி கிளியே..

நெஞ்சில் உரம் இன்றி
நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி..

அச்சமும் பேடிமையும்
அடிமைச் சிறுமதியும்
உச்சத்தில் கொண்டாரடி கிளியே
ஊமை ஜனங்களடி கிளியே..

நெஞ்சில் உரம் இன்றி
நேர்மை திறம் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி..சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இறங்காரடி கிளியே
செம்மை மறந்தாரடி கிளியே..

நெஞ்சில் உரம் இன்றி
நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி..
*

பாதகம் செய்பவரைக் கண்டால் நீ
பயங்கொள்ளல் ஆகாது பாப்பா..
மோதி மிதித்து விடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா!..
*
மாகவியின் புகழ் என்றென்றும் வாழ்க..
***

10 கருத்துகள்:

 1. கஷ்டம் வரும்போது எல்லோருமே அரசு உட்பட ஆக்கிரமிப்புக்களைக் களைவோம் என்கிறார்கள். ஆனால் இது எல்லாம் முடிஞ்சப்புறமா, "பழைய குருடி, கதவைத் திறடி!" தான். ஒட்டுமொத்தமாக அடிப்படையிலேயே மாற்றம் ஏற்பட வேண்டும். இப்போதுள்ள ஆக்கிரமிப்புக்களை நீக்கினால் அங்கே வீடு கட்டிக் கொண்டு வருஷங்களாகக் குடி இருந்தவர்களுக்கான மாற்று ஏற்பாடு என்ன என்பதை முதலில் யோசிக்க வேண்டாமோ! :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அக்கா அவர்களுக்கு நல்வரவு..
   ஏதேதோ காரணங்களால் மூன்று வாரங்களாகப் பதிவிட முடிய வில்லை..

   தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
  2. ஆமாம் அதே தான் கீதாக்கா

   கீதா

   நீக்கு
 2. மக்கள் வீடு கட்ட அனுமதிக்கு விண்ணப்பிக்கும்போதே இடம் எங்கேனு பத்திரப்பதிவு அலுவலர்கள் அறியாமல் இருக்க முடியாதே! ஏரி உள்ள இடத்தை எப்படித் துண்டு போட்டு யார் வாங்கி விற்கின்றனர்? இவர்களுக்கு பெரிய இடத்து அனுசரணை இல்லாமல் இப்படிச் செய்ய முடியுமா? என்னவோ போங்க! :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதாக்கா இதே கருத்தை எனது அடுத்த பதிவில் சொல்லியிருக்கிறேன், படங்களுடன்!!!

   கீதா

   நீக்கு
 3. கலிகாலம் பற்றியும், கண்ராவி அரசியல்வாதிகள் பற்றியும் சரியாகத்தான் பாடி இருக்கிறார்.  பாரதி புகழ் வாழ்க.

  பதிலளிநீக்கு
 4. மக்களின் மன நிலை மாறாத வரை எதையும் மாற்ற முடியாது.

  பதிலளிநீக்கு
 5. துரை அண்ணா மகாகவி சரியாகப் பாடியிருக்கிறார் ஆனால் அப்போதே அப்படி பாடியிருக்கிறார் என்றால் இப்போதோ? நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்! மீண்டும் அவர் வரிகள்! தீர்க்கதரிசி! வாழ்க

  கீதா

  பதிலளிநீக்கு
 6. பாரதியாரின் அருமையான வரிகளை மேற்கோள் காட்டி இன்றைய நிலவரத்தையும் சொல்லிய விதம் சிறப்பு. மிகவும் சரியாக இருக்கிறது! ஆனால் வேதனையும் எழுகிறது.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..