நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், டிசம்பர் 30, 2021

மங்கல மார்கழி 15


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்
***

-: குறளமுதம் :-

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.. 114
*
-: அருளமுதம் :-

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை..

திருப்பாடல் - 15

எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்15
*
-: ஆழ்வார் திருமொழி :-


பெற்றார் தளைகழலப் போர்ந்தோர் குறளுருவாய்
செற்றார் படிகடந்த செங்கண்மால் நற்றா
மரைமலர்ச் சேவடியை வானவர்கை கூப்பி
நிரைமலர்கொண்டு ஏத்துவரால் நின்று.. 2101
-: ஸ்ரீ பொய்கையாழ்வார் :-
*
-: சிவ தரிசனம் :-
தேவாரத் தேனமுதம்

திருத்தலம் - திரு ஐயாறு


இறைவன்
ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர்
ஸ்ரீ ஐயாறப்பர்


அம்பிகை
ஸ்ரீ தர்மசம்வர்த்தனி
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி


தீர்த்தம் - காவிரி
தலவிருட்சம் - வில்வம்

எண்ணற்ற பெருமைகளை உடைய தலம்..
காசிக்கு நிகரான ஆறு திருத்தலங்களுள் இதுவும் ஒன்று..


சித்திரை விசாகத்தை அனுசரித்து நிகழும்
சப்த ஸ்தானத் திருவிழா
மிகவும் சிறப்புடையது..

அப்பர் ஸ்வாமிகள் திருக்கயிலாய திருக்காட்சி கண்டது இங்கு தான்..
*

கங்காளர் கயிலாய மலையாளர் கானப்பேராளர் மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர் விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழில் நுழைந்து கூர்வாயால் இறகு உலர்த்திக் கூதல் நீங்கிச்
செங்கால்நன் வெண்குருகு பைங்கானல் இரைதேருந் திரு ஐயாறே.. 1/130
-: ஸ்ரீ ஞானசம்பந்தப் பெருமான் :-
*

-: திருவாசகத் தெள்ளமுதம் :-

திருகோத்தும்பி
திருப்பாடல் எண் - 15


நானும்என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம்
தானுந்தன் தையலுந் தாழ்சடையோன் ஆண்டிலனேல்
வானுந் திசைகளும் மாகடலும் ஆயபிரான்
தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ...
-: மாணிக்கவாசகப் பெருமான் :-
*
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

8 கருத்துகள்:

 1. நலமே விளையட்டும். பதிவின் வழி சொன்ன விஷயங்களை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 2. திருவையாற்றின் ஈசன் சந்நிதியில் இன்னமும் அந்த விரிந்த பெருஞ்சடை நினைவில் இருக்கு. பிரகாரம் எப்போதும் போல் சுற்றாமல் சோம சூக்தப் பிரதக்ஷணமாக வரவேண்டும். இரு முறைகள் போனதில் முதல் முறை சரியாக மனதில் பதியாமல் இரண்டாம் முறை தான் நன்றாகக் கவனித்துப் பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
 3. அருமையான தரிசனத்துக்கும் பாசுரம்/பதிகம் தரிசனத்துக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 4. பதிவின் வழி தரிசனம் கிடைத்திட்டது. மிக்க நன்றி

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 5. இறைவனை துதிப்போம் நலமே நடக்கட்டும். திரு ஐயாறு படம் ரொம்ப அழகாக இருக்கிறது சென்றதில்லை

  கீதா

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..