நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், டிசம்பர் 27, 2021

மங்கல மார்கழி 12

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்
***
-: குறளமுதம் :-
இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. (100)
*
-: அருளமுதம் :-
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை..

திருப்பாடல் - 12
 

கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றிச்
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்12
*
-: ஆழ்வார் திருமொழி :-


வாயவனை யல்லது வாழ்த்தாது கையுலகம்
தாயவனை யல்லது தாம்தொழா - பேய்முலைநஞ்சு
ஊணாக உண்டான் உருவொடு பேரல்லால்,
காணாகண் கேளா செவி.. 2092
-: ஸ்ரீ பொய்கையாழ்வார் :-

சோழ நாட்டின்
திவ்ய தேசங்களுள் 
ஒன்றாகிய
தஞ்சை 
ஸ்ரீ வீரநரசிங்கப் பெருமாள்
திருக்கோயிலில்
நேற்று மாலை
லட்சார்ச்சனையுடன்
திருக்கல்யாண வைபவம்
நடைபெற்றது..


திவ்ய தம்பதியராகிய
ஸ்ரீ தஞ்சபுரி நாயகி சமேத
ஸ்ரீமந் நாராயண முர்த்தி
சேவை சாதித்த காட்சி..
*
-: சிவ தரிசனம் :-
தேவாரத் தேனமுதம்


திருத்தலம்
திருநாகேஸ்வரம்


இறைவன்
ஸ்ரீ நாகேஸ்வரர்
ஸ்ரீ செண்பகாரண்யேஸ்வரர்

அம்பிகை
ஸ்ரீ கிரிகுஜாம்பிகை

தீர்த்தம்
சூரிய புஷ்கரணி
தலவிருட்சம் - செண்பகம்

ஐந்தலை அரவும்
சூரியனும் சந்திரனும்
வழிபட்ட திருத்தலம்

இன்றைய நாளில்
ராகு தலம் என்று
மருவிக் கிடக்கின்றது..

கீழுள்ள படத்தில்
ஸ்ரீ நாககன்னி,
ஸ்ரீ நாகவல்லி உடனாகிய
ஸ்ரீ நாகராஜர்..


இத்திருக்கோயிலின் அருகிலேயே
ஸ்ரீ ஒப்பிலியப்பன் திருக்கோயில் அமைந்துள்ளது..

அடுத்த 2 கி.மீ தொலைவில்
ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி
திருக்கோயில்
*

கல்லால் நிழல்மே யவனே கரும்பின்
வில்லான் எழில்வே வவிழித் தவனே
நல்லார் தொழுநா கேச்சுர நகரில்
செல்வா எனவல் வினைதேய்ந் தறுமே..2/24
-: ஸ்ரீ ஞானசம்பந்தப் பெருமான் :-
*
-: திருவாசகத் தெள்ளமுதம் :-

திருக்கோத்தும்பி
திருப்பாடல் எண் - 4


கண்ணப்பன் ஒப்பதோர்
அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில்
என்னையும் ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை
வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே
சென்றூதாய் கோத்தும்பீ. .
-: மாணிக்கவாசகப் பெருமான் :-
*
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

4 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரரே

  இன்றைய திருப்பாவை பாடல் அருமை. தஞ்சை ஸ்ரீ வீரநரசிங்கப் பெருமாளை, தாயாருடன் சேவித்து கொண்டேன்.

  நாகேஸ்வரம் ஸ்ரீ நாகேஸ்வரரையும், அன்னை ஸ்ரீ கிரிகுஜாம்பிகை தேவியையும் பக்தியுடன் பணிந்து வணங்கி கொண்டேன். கோவில் படங்களும், மற்ற படங்களும் அழகான தரிசனங்கள். கோவிலைப்பற்றிய விபரங்களும், அனைவருக்கும் பயனுள்ளவை. திருவாசக வரிகளும் அருமையாக உள்ளது. ஓம்நமசிவாய.. ஹரி ஓம் நமோ நாராயணாய நமஃ. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 2. அருமையான பாடல்கள் பகிர்வு. திருநாகேஸ்வரம்/ஒப்பிலியப்பன் கோயில் எத்தனை முறை போயிருப்பேன்! சொல்ல முடியாது. :) தரிசனங்கள் நன்று.

  பதிலளிநீக்கு
 3. மனத்துக்கினியான் ....ராமர் தம் உயர்ந்த குணங்களால் தங்கள் மனம் கவர்ந்தவராக,சிந்தனைக்கு இனியனாக இருப்பதை "மனத்துக்கு இனியான்" என்கிறார்கள்...அத்தகைய ராமனை நினைத்து பாடுவோம் ...

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..