நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, நவம்பர் 13, 2021

சதயத் திருநாள்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி சதய நட்சத்திரம்..


ஸ்ரீ ராஜ ராஜ சோழ
மா மன்னரின்
பிறந்த நாள்..


வழக்கமான கோலாகலங்கள் இல்லாமல்
திருக்கோயிலுக்குள்ளேயே
திருவீதி எழுந்தருளல்
நிகழ்கின்றது..


முற்பகலில் 
ஸ்ரீ பெருவுடையார், ஸ்ரீ பெரியநாயகி அம்மன் சந்நிதிகளில் பேரபிஷேகமும் திரு அலங்காரமும்
மதியப் பொழுதில் பெருந்தீப வழிபாடும் நிகழ்கின்றன..
மாலையில் பஞ்சமூர்த்தி எழுந்தருளல்..



இவ்வேளையில்
நாமும் நமது வணக்கத்தையும் மரியாதையையும் மாமன்னருக்குத் தெரிவித்துக் கொள்வோம்..


நீர் மற்றும் நில மேலாண்மைகளில் தலை சிறந்து விளங்கியது ராஜ ராஜ சோழரின் மும்முடிச் சோழ மண்டலம் என்பது சரித்திரம் காட்டுகின்ற உண்மை..


இன்று நான்காக விளங்குகின்ற
சோழ மண்டல
நெற்களஞ்சியத்தின்
நீர் ஆதாரங்களின் அடிப்படை கட்டமைப்புக்கு சோழ மன்னர்களே காரணம்..

அவர்கள் அனைவரையும் ஒருசேர வணங்கிக் கொள்வோம்..


எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு..


ஸ்ரீ ராஜ ராஜ சோழர் திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

7 கருத்துகள்:

  1. நீர் மேலாண்மை முதல் பல்வேறு சிறப்புகளுக்கும் காரணமாயிருந்த ராஜராஜசோழ மாமன்னரை கட்டாயம் நினைவில் கொள்ளவேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. ராஜராஜ சோழனைப் போன்ற ஒரு மன்னன் இனி பிறப்பதே அரிதிலும் அரிது. மன்னனைப் போற்றி வணங்குவோம்.

    பதிலளிநீக்கு
  3. ராஜராஜ சோழனின் புகழ் வாழ்க!
    வணங்கி வாழ்த்துவோம்.
    இன்று என் மகனுக்கும் பிறந்த நாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மகனுக்கு எங்கள் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள். வாழ்க பல்லாண்டு!

      நீக்கு
    2. உங்கள் மகனுக்கும் எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவியுங்கள்.

      நீக்கு
  4. ராஜ ராஜ சோழன் ஒரு யுக புருஷன். நீர் மேலாண்மை... இன்றைய நிலையை நினைத்தால் பெருமூச்சுதான் வருகிறது.

    பதிலளிநீக்கு
  5. தகவல்களும் படங்களும் நன்று. தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..