நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், நவம்பர் 04, 2021

நலங்கள் வாழ்க


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்
***
இன்று
தீபாவளித் திருநாள்..

நாடெங்கும்
நன்மை ஒளிர்ந்து
தீமை அழிந்த நாள்..

அனைவருக்கும்
அன்பின் இணைய
தீபாவளி
நல்வாழ்த்துகள்..


அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ
துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் துநீ
இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.. (6/95/1)

தீமைகள் தேய்ந்து
அகன்றிடவே
தீப ஒளி எங்கும்
பரவட்டும்
நன்மைகள் நாளும்
திகழ்ந்திடவே
நாயகன் நல்லருள்
பொழியட்டும்..

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
-:- -:- -:-

15 கருத்துகள்:

 1. அம்மையப்பனையும், மாமா மாமியையும் துதித்து, குபேரனின் அருள் பெற்று, தீமைகளை வீரத்துடன் எதிர்த்துப் போரிட்டு அழித்து, நன்மைகளை எல்லாம் திருமகளிடமிருந்து பெறுவோம்.  இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்.  எப்போது இந்தியப்பயணம்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   இனிய தீபாவளி நல்வாழ்த்துகளுடன் -
   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   இனிய தீபாவளி நல்வாழ்த்துகளுடன் -
   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   இனிய தீபாவளி நல்வாழ்த்துகளுடன் -
   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. எமது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   இனிய தீபாவளி நல்வாழ்த்துகளுடன் -
   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. இனிய தீபாவளி வாழ்த்துகள். உடல் நலமாக இருக்கிறீர்கள் அல்லவா? சொந்தங்கள் அருகில் இல்லாமல் பண்டிகை மனதுக்கு நிறைவாய் இருக்காது! :( விரைவில் உங்கள் தொல்லை எல்லாம் தீரப் பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் அக்கா..
   இனிய தீபாவளி நல்வாழ்த்துகளுடன் -
   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. தீபாவளி நல் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்
  பாடலும் , படங்களும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எதிர் வரும் நாட்கள்
   இனிமையாக அமையட்டும்..

   அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளுடன் -
   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. தங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். தாமதமாக கூறுகிறேன் என தவறாக நினைக்க வேண்டாம். அன்பு சுற்றங்களின் வருகையால் அன்றைய வந்து பதிவுகளை படிக்க இயலாமல் போனது. தெய்வீக படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தட்டச்சில் பிழை... அன்றைய தினம் வந்து எனப் படிக்கவும். நன்றி.

   நீக்கு
  2. தங்களது அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   வாழ்க நலம் எங்கெங்கும்..

   நீக்கு