நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, நவம்பர் 14, 2021

திருக்காட்சி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நேற்று தஞ்சை ஸ்ரீ ராஜராஜேஸ்வரத்தில் நிகழ்ந்த ஐப்பசி சதய விழாவின் திருக்காட்சிகள்..

ஸ்வாமி அம்பாள் தரிசனத்துடன்
ஸ்ரீ ராஜ ராஜ சோழர்,
லோக மாதேவி மற்றும் பழைய திருமேனி அலங்காரக் காட்சிகள் இன்றைய பதிவில்..

காட்சிகளைப் பகிர்ந்த  தஞ்சை ஞானசேகரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

உடையாளூரில்
ஸ்ரீ ராஜராஜ சோழரின்
நினைவாலயம்
எனப்படும் இடத்திலும்
வழிபாடுகள்
நடைபெற்றுள்ளன..


நம சிவாயவே ஞானமுங் 
கல்வியும்
நம சிவாயவே நானறி விச்சையும்
நம சிவாயவே நாநவின் றேத்துமே
நம சிவாயவே நன்னெறி காட்டுமே.. (5/90)
-: திருநாவுக்கரசர் :-

ஸ்ரீ ராஜராஜ சோழர்
திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
-:-

10 கருத்துகள்:

 1. அருமையான படங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி. முகநூல் வாட்சப் மூலமும் படங்கள் வந்தன. ராஜராஜசோழன் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

  பதிலளிநீக்கு
 2. நல்லவேளை.. இராஜராஜன் சம்பந்தப்பட்ட இடங்களில் சிவாலயங்கள் அமைத்தான்.

  இல்லைனா, அவனும் கிறித்துவன், வெள்ளை உடை அணிவிக்கணும் நெற்றியில் ஒன்றும் கூடாதுன்னு சொல்ல அரசியல்வாதிகளும், அடிவருடிகளும் வந்திடுவாங்க.

  படங்கள் அழகு. இன்னும் பகிர்ந்திருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. சத்ய திருவிழா படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. இறைவன் இறைவியையும், அதி அற்புத மன்னர் இராஜராஜ சோழனையும் பணிவுடன் வணங்கி கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  தற்போது தங்களுக்கு காய்ச்சல் குணமாகி உள்ளதா? தங்கள் உடல் நலம் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு காய்ச்சல் பூரணமாக குணமாகி, நீங்கள் நன்கு நலம் பெற இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

  அன்புடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 4. ஸ்ரீ இராஜராஜ சோழன் புகழ் ஓங்குக...

  பதிலளிநீக்கு
 5. மிக அருமையான படங்கள்.
  அம்மன் அலங்காரம் மிக அருமை.

  ஓம் நம சிவாய

  உடல் நலம் தேவலையா?
  உடல் நலத்தைபார்த்து கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
 6. அழகான படங்கள். 1000 ஆண்டுகளுக்கு ப் பின்னரும் ஒருவரை நினைவு கூர்கிறோம் என்பது எவ்வளவு பெரிய விஷயம்!
  தங்கள் உடல் நலனை கவனித்துக் கொள்ளவும்.

  பதிலளிநீக்கு
 7. சிறப்பான காட்சிகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு