நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், நவம்பர் 09, 2021

கந்தா சரணம் 3

 

நாடும் வீடும்
நலம் பெநாடும் ற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
ஸ்ரீ கந்த சஷ்டி..


கன்ம மாயா ஆணவம்
ஆகிய அசுர குணங்கள்
ஞானம் எனும் வேலினால்
வீழ்த்தப்பட்ட நாள்..

காம, குரோத,
லோப, மோக, மத,
மாச்சர்யம் எனப்படும்
இவையே மனிதன்
வீழ்வதற்கான
காரணிகள்..

இவற்றிலிருந்து
விடுபடுதலே பிறவியின்
வெற்றியாகும்..

இந்த வெற்றிக்கு
உறுதுணையாய் இருப்பதுவே
இறை வழிபாடு..
இதனை உணர்த்துவது
ஸ்ரீ கந்த புராணம்..

கெடுதலான குணங்களே
ஆன்மாவிற்கு எதிரிகள்..
இவற்றை வெற்றி கொண்டு
செல்வதே நமது
வாழ்வின் நோக்கம்..


அத்தகைய பயணத்தில்
உறுதுணையாய்
வழித்துணையாய்
வருவதே வேல்..

" பயந்த தனி வழிக்குத் துணை வடிவேல்!.. "
என்பது அருணகிரியார்
திருவாக்கு..


நாத விந்துக லாதீ நமோநம
     வேத மந்த்ரசொ ரூபா நமோ நம
          ஞான பண்டித ஸாமீ நமோ நம .. வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோ நம
     போக அந்தரி பாலா நமோ நம
          நாக பந்தம யூரா நமோநம .. பரசூரர்

சேத தண்டவி நோதா நமோ நம
     கீத கிண்கிணி பாதா நமோ நம
          தீர சம்ப்ரம வீரா நமோ நம .. கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம
     தூய அம்பல லீலா நமோ நம
          தேவ குஞ்சரி பாகா நமோ நம .. அருள்தாராய்

ஈத லும்பல கோலா லபூஜையும்
     ஓத லுங்குண ஆசா ரநீதியும்
          ஈர முங்குரு சீர்பா தசேவையு .. மறவாத

ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
     சோழ மண்டல மீதே மநோகர
          ராஜ கெம்பிர நாடா ளுநாயக .. வயலூரா

ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
     சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
          ஆடல் வெம்பரி மீதே றிமாகயி .. லையிலேகி

ஆதி யந்தவு லாவா சுபாடிய
     சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
          ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் .. பெருமாளே!..
-: அருணகிரிநாதர் :-


வே
லுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை..

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..
***

14 கருத்துகள்:

  1. உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
    மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
    கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
    குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

    முருகா சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்....
      தங்களது வருகைக்கு மகிழ்ச்சி..

      முருகன் திருவடி முன்னின்று காக்க...

      நன்றி..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இனிய பதிவு.

    /"பயந்த தனி வழிக்குத் துணை வடிவேல்!..
    என்பது அருணகிரியார்
    திருவாக்கு../

    முருகனின் அருள் பார்வை நாளெல்லாம் நம்மோடு துணை வர வேண்டும். அவன் துணை கொண்டு நம் வாழ்வின் வினையகற்றி சிறப்பாக இருக்க வேண்டும். வேலுண்டு வினையில்லை
    மயிலுண்டு பயமில்லை..
    முருகா சரணம். கந்தா சரணம். மால் மருகா சரணம். கடம்பா சரணம். கார்த்திகேயா சரணம்.கதிர்வேலா சரணம். 🙏🙏🙏🙏🙏🙏. பக்தி பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      முருகன் திருவருள் அனைவரது வாழ்வையும் செம்மையாக்கட்டும்..

      முருகன் திருவடி முன்னின்று காக்க...

      நன்றி..

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்பின் ஜி....
      தங்களது வருகைக்கு மகிழ்ச்சி..

      முருகன் திருவருள் முன்னின்று காக்க...

      நன்றி..

      நீக்கு
  4. முருகா சரணம் ..

    வேல் வேல்!
    சக்தி வேல் வேல்!
    வெற்றி வேல் வேல்!
    ஞான வேல் வேல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபிரேம் தங்களது அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      முருகன் திருவருள் முன்னின்று காக்க...

      நன்றி..

      நீக்கு
  5. கந்தனின் வேல் உண்டு
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
    திருப்புகழ் பாடல் பாடி தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      முருகன் திருவருள் முன்னின்று காக்க...

      நன்றி..

      நீக்கு
  6. முருகா.. முருகா..

    அன்பின் தனபாலன்..
    தங்களது வருகைக்கு மகிழ்ச்சி..

    முருகன் திருவடி முன்னின்று காக்க...

    நன்றி..

    பதிலளிநீக்கு
  7. அருணகிரிநாதரின் திருப்புகழ் சொல்லிக் கொண்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோ..
      தங்களது வருகைக்கு மகிழ்ச்சி..

      முருகன் திருவருள் முன்னின்று காக்க...

      நன்றி..

      நீக்கு
  8. முருகன் அருள் முன்னிற்கும். கந்த சஷ்டி அன்று எதிர்பாராவிதமாக முருகனைச் சந்தனக்காப்பு அலங்காரத்தில் தரிசிக்கும் பேறு கிடைத்தது.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..