நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 20, 2021

வரலக்ஷ்மி வருக...

 நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..

பகையும் பிணியும் 
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜை..


தனம், தான்யம், பசு,
அரசு, சந்தானம், தைரியம், 
வாகனம், சுற்றம்
- என்பனவாகிய
எட்டுப் பெருஞ்செல்வங்களையும்
வழங்குபவள்
ஸ்ரீ மஹாலக்ஷ்மி..


நாம் கற்ற கல்வியும்
அதனால் அடைந்த
மன வலிமையும் (தைரியம்)
செல்வங்கள் ..

நம் இல்லத்தில்
சுடர் விடும் விளக்குகளை
தீப லக்ஷ்மி என்பது மரபு..

எல்லாவற்றுக்கும் மேலாக
உண்ணும் உணவினை
அன்னலக்ஷ்மி என்பர்
ஆன்றோர்..


எந்நாளும்
ஸ்ரீ மஹாலக்ஷ்மியை வணங்கி
எல்லா நலன்களையும்
எய்துவோம்..


மலரின் மேவு திருவே - உன் மேல்
மையல் பொங்கி நின்றேன்;
நிலவு செய்யும் முகமும் - காண்பார்
நினைவ ழிக்கும் விழியும்,
கலக லென்ற மொழியும் - தெய்வக்
களிது லங்கு நகையும்,
இலகு செல்வ வடிவும் - கண்டுன்
இன்பம் வேண்டு கின்றேன்..
-: மகாகவி பாரதியார் :-


யாதேவி சர்வ பூதேஷு லக்ஷ்மி ரூபேண சம்ஸ்திதா:
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
***
ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்ம்யை நம:
ஃஃஃ

3 கருத்துகள்:

  1. இதோ..  நேற்று மாலை முதல் வீடு பிஸியோ பிஸி...  இன்றும் இதோ..  ஆரம்ப முஸ்தீபுகளுக்கு உதவி விட்டு நடுவில் வலைப்பக்கம் ஒதுங்கி இருக்கிறேன்.

    வரலக்ஷ்மி வரங்களனைத்தும் அருளட்டும்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல செய்தி வந்திருக்கிறது போலவே...

    https://www.dinamalar.com/news_detail.asp?id=2826478

    பதிலளிநீக்கு
  3. வரலட்சுமி அனைவர் இல்லங்களுக்கும் வருகை தந்து எல்லோருக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மன நிறைவு , செல்வ வளம், மனபலம் அனைத்தும் அருள வேண்டும்.

    பாடல்களை பாடி அன்னையை வேண்டிக் கொண்டேன்.
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..