நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், பிப்ரவரி 04, 2020

குடமுழுக்கு வைபவம் 4

தஞ்சை பெரிய கோயிலின் திருக்குடமுழுக்கு விழாவின் 
யாகசாலை பூஜைகள் கடந்த சனிக்கிழமை (1/2) அன்று துவங்கி
வெகு சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.. 

நாளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து
தரிசித்த வண்ணம் இருக்கின்றனர்.....

கடந்த ஐந்து நாட்களில் இரண்டு லட்சம் பேருக்கு மேல் தரிசனம் செய்துள்ளனர்..

இன்றைய பதிவில்
மேலும் சில அழகான திருக்காட்சிகளுடன் ஒரு காணொளி..

வலையேற்றிய அன்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...
















திருக்கோயில் வளாகத்தில் தமிழ்நாடு அரசு தீயணப்புத் துறை
தனது அதி நவீன மீட்பு வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளது..





தமிழகம் முழுதிருந்தும் திரண்டு வரும் பக்தர்கள்...








நிகழ்வுகளை அழகாக வலையேற்றி வைத்திருக்கும்
அன்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...

கொடி மர பூஜை... பக்திமயமான காணொளி...


இருபத்திரண்டாயிரம் சதுர அடி பரப்பளவையுடைய யாகசாலை...

ஸ்வாமி, அம்பாள் பரிவார மூர்த்திகள் - என
தனித்தனியாக யாக சாலை குண்டங்கள்...

யாக வேள்விக்கு என - நவதானியங்களுடன்
140 வகையான மூலிகை மற்றும் பழவகைகள்...

இப்படியாக 110 குண்டங்கள்.. 22 வேதிகைகள்...
முன்னூறுக்கும் மேற்பட்ட சிவாச்சார்யார்கள்..
எண்பது ஓதுவார் மூர்த்திகள்...

நாளை காலையில் 
தட்சிண மேருவாகிய ஸ்ரீ ராஜராஜேஸ்வரத்திற்குத்
திருக்குடமுழுக்கு நிகழ இருக்கின்றது...

ஸ்ரீ பிரஹன்நாயகியுடன் உடனாகிய ஸ்ரீ பிரகதீஸ்வர ஸ்வாமியின்
நல்லருள் வேண்டி சிந்தித்திருப்போம்..


ஸ்ரீ கருவூரார் 
மாமன்னன் ஸ்ரீ ராஜராஜ சோழன் - பட்டத்தரசி லோக மாதேவியார்  
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது
நாதன் நாமம் நம சிவாயவே..
-: திருஞான சம்பந்தர் :-

ஓம் நம சிவாய நம ஓம்
ஃஃஃ 

7 கருத்துகள்:

  1. அனைத்து படங்களும் அருமை. காணொளியில் ஓதுவார் தேவாரம் பாடுவதும் கேட்டு மகிழ்ந்தேன்.
    நன்றி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. படங்கள் அனைத்தும் அருமை. காணொளி மத்தியானம் பார்க்கிறேன். அருமையானதொரு பகிர்வு. நாளைக்கு இநேரம் கும்பாபிஷேஹம் நடந்து முடிந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. அற்புதமான படங்கள்.  அருமையான தரிசனம்.

    பதிலளிநீக்கு
  4. அழகான காட்சிகள். நேற்று இங்கே வந்து பதிவினை ரசிக்க இயலவில்லை. இன்று தான் வர முடிந்தது - இன்றைக்கு குடமுழுக்கும் நடந்தேறியது. இன்றைய குடமுழக்கு காட்சிகளையும் உங்கள் பதிவு வழி தான் பார்க்க வேண்டும்.

    தொடரட்டும் காட்சிகள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..