நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, பிப்ரவரி 22, 2020

சிவதரிசனம்

ஸ்ரீ மஹாசிவராத்திரியன்று
தஞ்சை மாகரில் விளங்கும் சிவாலயங்கள் பலவற்றிலும்
சிறப்பான அபிஷேக ஆராதனைகள் நிகழ்ந்துள்ளன..

அவற்றுள் - இன்றைய பதிவில்
ஸ்ரீ சங்கர நாராயணர் திருக்கோயில், மற்றும் ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமி கோயிலின் ஸ்ரீ சிவேந்திரர் சந்நிதி தரிசனம்...

ஸ்ரீ சங்கரநாராயண ஸ்வாமி
ஸ்ரீ பாலாம்பிகை 
ஸ்ரீ சங்கர நாராயணப்பெருமாள் 
வடக்கு ராஜவீதி ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி திருக்கோயிலின்
ஸ்ரீ சிவேந்திரர் சந்நிதி தரிசனம்..

ஸ்ரீ சிவேந்திரர் கோயிலில் அக்னி கேசம் நெற்றிக் கண் விளங்க
ஸ்ரீ சக்கரத்தில் ஈசன் எழுந்தருளியுள்ளார்...

இருபுறமும் தேவியர் விளங்குவதால் நாராயண அம்சம் என்கின்றனர்...
ஸ்வாமிக்கு முன்பாக ரிஷபம், குதிரை, யானை - என வாகனங்கள் விளங்குகின்றன..

இவ்வாறாக சிறிதும் பெரிதுமான சக்கரங்கள் பத்திற்கும் மேல் விளங்குகின்றன...

இக்கோயில் ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி திருக்கோயில் எனப்பட்டாலும்
மூலவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ஸுதர்சனப்பெருமாள்...


ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோயிலின் மற்றொரு சிறப்பு இங்குள்ள பிரம்மாண்டமான அஷ்டபுஜ துர்கையும் ஸ்ரீ காளியும்...


ஸ்ரீ பகளாமுகி அம்மன் 

ஸ்ரீ பகளாமுகி அம்மன் 
இங்குள்ள காளி - ஸ்ரீ பகளாமுகி எனப்படுகின்றாள்...

ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் இக் கோயிலில் படங்கள் எடுத்திருக்கின்றேன்..
ஆனால் அவை எனது கோப்பில் எங்கே இருக்கின்றன என்று தெரியவில்லை..

படங்களை Fb ல் வழங்கியவர் திரு. தஞ்சை ஞானசேகரன் அவர்கள்..
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..

பெரிய கோயிலில் நிகழ்ந்த அபிஷேக அலங்கார தரிசன காணொளி..
Youtube ல் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்டது..

ஸ்டூடியோவினருக்கும் நெஞ்சார்ந்த நன்றி...

நம்புவார் அவர் நாவில் நவிற்றினால்
வம்பு நாண்மலர் வார்மது ஒப்பது
செம்பொனார் திலகம் உலகுக் கெலாம்
நம்பன் நாமம் நம சிவாயவே..(3/49)
-: திருஞான சம்பந்தர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்  
ஃஃஃ 

24 கருத்துகள்:

 1. முற்றிலும் புதிய பார்க்காத கோயில் படங்கள். சங்கரன் கோயில் சங்கரநாராயணரைத் தான் அடிக்கடி தரிசித்திருக்கிறேன். இந்த இருகோயில் பற்றியும் இன்றே அறிந்தேன். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா...

   நீக்கு
 2. சிறப்பான தரிசனம்.

  உங்கள் மூலம் நாங்களும் கண்டு களித்தோம். நன்றி.

  பதிலளிநீக்கு
 3. 'வந்து அருள்பெறவில்லையா?' என்று ஆண்டவனே கேட்பதுபோல இருந்தது.   எப்படியோ மிஸ் செய்திருக்கிறேன்.  சிவதரிசனம்.  சுகதரிசனம்.

  பதிலளிநீக்கு
 4. மிக அருமையான தரிசனம். படங்களும், காணொளியும் மிக அருமை.
  காளி தரிசனம் கண்டேன்.

  பதிலளிநீக்கு
 5. ஸ்ரீ பாலாம்பிகை, ஸ்ரீ சங்கர நாராயணம் படம் அழகு.

  பதிலளிநீக்கு
 6. கோவில் தரிசனம் அற்புதம். பகுளாமுகிக்கு கேரளாவில் வழிபாடும்,கோவில்களும் உண்டு என்று நினைக்கிறேன். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   தாங்கள் சொல்வது போல் இருக்கலாம்..
   நான் கேள்விப்பட்டதில்லை...

   தசமஹா வித்யையில் தாரா, சின்மஸ்தா,காளி, பகளாமுகி,தூமாவதி என வழிபாடுகளும் உபாசனைகளும் சிறப்பானவை....

   நான் நமது தமிழகத்தில் தஞ்சையில் மட்டுமே பகளாமுகி சந்நிதி என்று குறிப்பிட்டுள்ளேன்...

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
   நன்றி...

   நீக்கு
  2. பஹளாமுகி தசமஹாவித்யாவில் எட்டாவது தேவியாக வருபவள். தன் கையிலுள்ள தண்டத்தால் அடியவர்களின் எதிரிகளை அடக்கி ஒடுக்குவாள். பஹளம் என்றால் கடிவாளம் என்னும் பொருள். எதிரிகளுக்குக் கடிவாளம் இட்டு அடக்குவாள் என்னும் பொருளில் வரும். மத்தியப்பிரதேசத்தில் உஜ்ஜயின் அருகே பஹுளாமுகி கோயில் மிகவும் பிரசித்தியானது. விக்கிரமாதித்தன் வழிபட்ட கோயில் என்பார்கள்.

   நீக்கு
  3. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
   தங்கள் கருத்தினைத் தனியே பதிவில் தரலாம் என்றிருந்தேன்...

   இப்போது இயலவில்லை... கூடுதல் செய்திகள் அருமை...

   மகிழ்ச்சி... நன்றியக்கா...

   நீக்கு
 7. தஞ்சையில் நிசும்பசூதனியும், வாராஹியும் தான் கேள்விப் பட்டிருக்கேன். பஹளாமுகியும் குடி இருப்பது இந்தப் பதிவின் மூலமே தெரியும். கேரளத்து பகவதிகள் அனைவருமே நம்ம ஊர் அம்பிகை மாதிரினு நினைக்கிறேன். ஏனெனில் அநேகமாக பகவதி சந்நிதிக்கு எதிரே அங்கெல்லாம் சிவன் சந்நிதி காணப்படும். சிவனும் தமிழ்நாட்டு, கர்நாடக, ஆந்திர, மற்றும் உள்ள மற்ற மாநிலங்களில் போல் இல்லாமல் வேறுபட்டுக் காணப்படுவார். முழு அலங்காரத்துடன். பகவதி அம்மனைத் தான் பானுமதி பஹளாமுகி என்கிறாரோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   மேலும் அதிகமாக அரிய செய்திகள்...

   மகிழ்ச்சி... நன்றியக்கா...

   நீக்கு
 8. ஐயா, என்னுடைய தளத்தில் where can we get wisdom? என்ற தலைப்பில் விநாயகர், அம்மையையும், அப்பனையும் வளம் வந்து ஞானப் பழத்தை பெற்ற கதையைப் பற்றி நான் புரிந்து கொண்ட வகையில் விளக்கியிருக்கிறேன். கேட்டு விட்டு தங்கள் கருத்தை கூறுங்கள். உங்கள் அபிப்ராயத்தை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். நன்றி. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

   மேலோர் பலர் இருக்க எனது கருத்தையும் அறிய விழைந்ததது கண்டு நெகிழ்ச்சி...

   இணைய சேவை சற்றே வேகம் குறைந்திருக்கிறது..

   அவசியம் வருகிறேன்... அழைப்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு