நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், பிப்ரவரி 10, 2020

தைப்பூசத் திருவிழா 1

 எங்கள் குல தெய்வம் உறைகின்ற 
உவரி ஸ்ரீசுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயிலில்
நிகழ்ந்த தைப் பூசத் திருவிழாவின் சில காட்சிகள் இன்றைய பதிவில்...

கடந்த 31/1/2020 அன்று
திருக் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது...

நாளும் சிறப்பு அலங்காரத்துடன் -
ஸ்ரீசந்த்ரசேகரரும் ஸ்ரீ மனோன்மணி அம்பிகையும்
திருவீதி எழுந்தருளினர்...


யானையின் மீது கொடிப்பட்டம் ஏந்தி வருபவர்
எங்கள் தலைக்கட்டிற்கான குருக்கள்...



 இந்திர விமான திருக்கோலம் 


அன்ன வாகனம் 
ஸ்ரீ கயிலாய திருக்காட்சி 
காமதேனு வாகனம் 

குதிரை வாகனம் 
சிவப்பு சாற்றி எழுந்தருளல் 
பச்சை சாற்றிய திருக்கோலம் 
தைப் பூசத்தன்று திருத்தேரோட்டம்....

தொடரும் பதிவினில் அவற்றைக் காணலாம்...

திருச்செந்தூரிலிருந்து 40 கி.மீ.. தொலைவிலுள்ளது உவரி..

குலசேகரன்பட்டினம், மணப்பாடு வழியாக
கன்னியாகுமரி செல்லும் கடற்கரைச் சாலையில்
கடலோரமாக அமைந்துள்ள திருத்தலம் உவரி...

ரிஷப வாகனம் 
அந்தப் பக்கம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் போது அவசியம் 
ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமியைத் தரிசனம் செய்து வாருங்கள்...


கூற்றினை உதைத்த பாதக்குழகனை மழலை வெள்ளேறு
ஏற்றனை இமையோர் ஏத்த இருஞ்சடைக் கற்றை தன்மேல்
ஆற்றனை அடியார் ஏத்தும் அமுதனை அமுதயோக
நீற்றனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்தவாறே..(4/74) 
-: திருநாவுக்கரசர் :- 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ 

18 கருத்துகள்:

  1. படங்கள் யாவும் சிறப்பு.   அதிகாலை தரிசனத்தால் மனதில் உவப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. தங்களது குலதெய்வ தரிசனம் கிடைத்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. ஸ்ரீ சுயம்புலிங்க சுவாமி தரிசனம் கிடைத்தது.
    பார்க்க ஆவல். அவர் அழைத்தால் போக வேண்டும் பார்க்க விருப்பம் தெரிவித்து விட்டேன் அவரிடம்.
    படங்கள் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      படங்கள் எல்லாம் திருக்கோயில் வழங்கியவை...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  4. அழகான தைப்பூச திருவிழா காட்சிகள். மனதுக்கு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  5. பலவிஷயங்கள் தெரிவதில்லை தலக்கட்டு என்றால் என்ன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...

      தலைக்கட்டு என்றால் எங்களது குடும்பம்.. எங்களுக்கான வழிபாடுகளை நடத்தி வைப்பவர்கள்...

      கோயிலில் குருக்கள் பலர் இருந்தாலும்
      நாங்கள் அங்கு செல்லும்போது அர்ச்சனைகளை இவரே செய்விப்பார்..

      இவர் வெளியூர் எங்கும் சென்றிருந்தால் மட்டுமே மற்றவர்கள் முன்வருவார்கள்...

      இது தாத்தா காலத்தில் இருந்தது.. சில காலம் விடுபட்டுப் போய் மீண்டும் இறையருளால் தொடர்கிறது....

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அருமையான காட்சிகள். ஒவ்வொரு வாஹனமும் சிறப்பாக இருந்தாலும் வெள்ளை ஆனை வாஹனமும், குதிரை வாஹனமும் அழகோ அழகு. சிவப்பு, பச்சை சார்த்தலும் அப்படித்தான்! எங்க ஊர் மாரியம்மன் கோயிலிலும் இப்படித் தான் பரம்பரைப் பூசாரி! அவர் ஊரில் இல்லை என்றால் தான் வேறு யாரேனும் வருவார்கள். பெரும்பாலும் முன் கூட்டியே சொல்லி விடுவோம் என்பதால் அவர் ஊரில் இருப்பார். தவிர்க்க முடியாத சமயங்களில் தான்!

    பதிலளிநீக்கு
  7. சுயம்புலிங்க சாமி கோயிலுக்குப் போகும்படி அவர் அழைக்க வேண்டும். பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  8. ஸ்ரீசந்த்ரசேகரரும் ஸ்ரீ மனோன்மணி அம்பிகையும்....அற்புத காட்சிகள்...

    அதிலும் சிவப்பு, பச்சை சாற்றியா காட்சிகள் வெகு அழகு...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..