நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், செப்டம்பர் 09, 2019

தெய்வ தரிசனம்

சிவகாசியில் இருந்து புறப்படும் முன்
அந்நகரின் புகழ் பெற்ற மாரியம்மன் திருக்கோயிலுக்குச் சென்றோம்...

திருக்கோயிலைச் சுற்றிலும் மிகப்பிரகாசமான விளக்குகள்..

நூற்றுக்கணக்கான மக்கள் வந்து வணங்கிச் சென்ற வண்ணமாக இருக்கின்றனர்...

கோயிலின் அருகிலேயே தெப்பக்குளம்...
அதன் கரையில் பிரம்மாண்டமாக மாரியம்மனின் சுதை சிற்பம்..
அங்கேயும் தகதகக்கும் விளக்குகள்...

அழகான சிற்ப வடிவமைப்புகளுடன் கோயில் வளாகம் நேர்த்தியாக இருக்கின்றது..

ராஜகோபுரத்தைக் கடந்து கோயிலின் உள்ளே படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது..


தங்கக் கவசத்துடன் மூலஸ்தானம் 

தெப்பக்குளம் 
தெப்பக்குளக்கரைப் பிள்ளையார் 
தெற்கு கோபுர வாசல்
கீழைக் கோபுரம் 


நெடிதுயர்ந்ததாக தங்கக் கொடிமரம்..

மூலஸ்தானத்தின் இருபுறமும் கணபதி, முருகன், வைரவர், மாடசாமி, பேச்சியம்மன், சேலைக்காரி அம்மன், துர்கை, கருப்பசாமி என தனித்தனி சந்நிதிகள் விளங்குகின்றன...

தங்கத் தேரும் வடிவமைத்திருக்கின்றனர்...

மிக மிகக் கடுமையான சூழ்நிலையிலும் மனம் மாறாதிருந்த
எம் குலத்தின் சான்றோர்களால் உருவாக்கப்பட்டு - இன்றைக்கு வெகு சிறப்புடன்
இந்து நாடார் உறவின்முறை தர்மபரிபாலன அறக்கட்டளையின் நிர்வாகத்தில்
விளங்குகின்றது...

அடுத்து தரிசனம் செய்தது -
எனது மாமனாருடைய குல தெய்வக் கோயில்..


ஏழுகோயில் எனப்படும் அண்ணாமலையார் சங்கம்...

உண்மையில் இது முன்னோர்கள் வாழ்ந்த வீடாகும்..
நல்லோர் வாழ்ந்த வீடு நலந்தரும் கோயிலாக மாறியிருக்கின்றது..

நன்றி - கூகுள்..

இங்கே தீப வழிபாடுதான்..
ஒன்பது அடுக்கு தீபம் தான் மூல மூர்த்தி..

மேலேயுள்ள படத்திலுள்ளது போலத்தான் மூலஸ்தானத்தின் தீபம்..
இதனைச் சுற்றிலும் ஏழு மாடங்களில் விளக்குகள்..

அவற்றுக்கு சந்திரசேகரர் மனோன்மணி,
நாராயண மூர்த்தி மஹாலக்ஷ்மி, சுப்ரமணியன் தேவயானை
முருகப்பெருமான் வள்ளியம்மை, நடராஜர் வள்ளியம்மை
என்பதாகப் பெயர் சூட்டியிருக்கின்றார்கள்..

இந்தப் பெயர்களை ஒரு அடையாளத்துக்குத் தான் சொல்லியிருக்கின்றேன்...

சரியான பெயர்களை அடுத்த முறை தந்திட அண்ணாமலையார் அருள் புரிவாராக...

இங்குள்ள சுற்று விளக்குகளுக்கு எண்ணெய் இடுவதே முக்கிய வழிபாடு..

அண்ணாமலையார் உண்ணாமுலையாள் சந்நிதிகள் என்பன
முன்னோர் வாழ்ந்த வீட்டின் அறைகளே!...



ராஜ கோபுரத்தில் சிற்பங்கள் உள்ளன..  இவை தவிர்த்து கோயிலின் உள்ளே எந்த தெய்வ வடிவங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது..

இங்கே இந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர வேறெவர்க்கும் அனுமதியில்லை...

நான் செல்வதானால் எனது மாமனாருடைய பெயரைச் சொல்லி
எனது மனைவியுடன் தான் செல்ல முடியும்...

மஹா சிவராத்திரி மூன்று நாள் விழா..
ஆயிரக்கணக்கான உறவுமுறைகளும் ஒன்று கூடி வழிபடுகின்றனர்...

கடந்த ஜூலையில் திருக்குடமுழுக்கு நடந்திருக்கின்றது...

இங்கேயும் உள்ளே படங்கள் எடுக்கத் தடை... 

நந்தாவிளக்கு
கோயில் வாசலின் இடது புறம் நந்தாவிளக்கு..

இதில் சேர்க்கும் எண்ணெய் கீழே உள்ள குடத்தில் சேகரமாகும்படி அந்தக் காலத்திலேயே வடிவமைத்திருக்கின்றார்கள்...

இந்த நந்தா விளக்கு எத்தனை காலமாக சுடர் விட்டுக் கொண்டிருக்கின்றதோ தெரியவில்லை...

விளக்கு மாடத்தின் உட்புறம் படியும் மை வண்ணம்
தீப ப்ரசாதம் ஆகின்றது...

இந்த மையை இட்டுக் கொண்டால் நோய் நொடி, துஷ்ட ஆவிகள் அணுகாது என்பது உண்மை...

அண்ணாமலையார் திருவருளால்
எனது மைத்துனர் ஒருவர் கொடிய நோயிலிருந்து தப்பிப் பிழைத்திருக்கிறார்... 

நல்லோர் வாசல்
நலந்தரும் கோயில்
நலமே சேர்க..
வளமே சேர்க!...

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

19 கருத்துகள்:

  1. கோவில் பற்றிய தகவல்கள் அதிசயமாக இருக்கிறது. படங்கள் அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்களுக்கு நல்வரவு..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அன்பு துரை , உங்கள் தஞ்சை விஜயம் எங்கள் எல்லோருக்கும்
    கோவில்கள் தரிசனமாக வந்திருக்கிறது.
    அருமையான படங்களே பிரசாதம்.
    கோவில் கோபுரங்கள் ஒளி வெள்ளத்தில்
    பிரகாசமாக இருக்கின்றன.

    நந்தா தீபம் மிக அழகு. அதே போல ஏழடுக்கு தீபமும்.
    தீப வழிபாடே எல்லா வழிப்பாட்டிலும் உயர்ந்தது.

    தீப மங்கள ஜோதி நமோ நம.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியம்மா...

      தீப மங்கள ஜோதீ நமோ.. நம.. - அருணகிரியாரின் திருவாக்கு...

      அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. சிவகாசியில் சிறு வயதில் இருந்தேன், அப்பா அங்கு பணிபுரிந்தார்கள்.
    மாரி அம்மன் கோவில் போய் இருக்கிறேன், விழாக்களில் கலந்து கொண்டு இருக்கிறோம்.
    ஏழுகோவில் எனும் அண்ணாமலை சங்கம் இப்போதுதான் கேள்வி படுகிறேன்.

    தீபம் எப்போது எரிந்து கொண்டே இருப்பது மகிழ்ச்சியான செய்தி.
    தீப வழிபாடு குலம்விளங்க வைக்கும், வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகையும் கருத்துரையும்
      வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. கோவில் பற்றிய தகவல்கள் சிறப்பு. உங்கள் மூலம் நாங்களும் தகவல் அறிந்தோம். நன்றி.

    நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  5. இதுவரை பார்த்திராத கோயிலில் உங்களால் அருமையான தரிசனம் கண்டோம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      விடுமுறையின் பத்து நாட்களும் பயணம் தான்..
      தங்களையும் JK அவர்களையும் சந்திக்க இயலாமல் போனதற்கு மிகவும் வருந்துகின்றேன்... ஏதும் மனதில் கொள்ள வேண்டாம்...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. வணக்கம்.
    இரவு நேரம் என்பதால் படங்கள் வித்தியாசமாய் இருக்கின்றன.  மாரியம்மன் கோவில்ப்ரம்மாண்டமாய் இருக்கும் என்று தெரிகிறது.  மாங்காடு செல்லும் வழியிலொரு பிரம்மாண்டமான அம்மன் கோவில் பார்த்திருக்கிறேன்.  உள்ளேசெல்லவேண்டும் என்று பலமுறை நினைத்தும் இன்னும் வாய்ப்பு வரவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. //மாமனார் பெயரைச்சொல்லி மனைவியுடன்தான் செல்ல முடியும்//
    உறவின்முறைத்திருக்கோவில் என்பதால் இல்லையா?  முன்னோர்களை மதிக்கும்/ வணங்கும் பழக்கம் பெருகட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      முன்னோர்களை மதித்து வணங்கும் வழக்கம் - அதுதானே வேண்டும்!..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அணையா விளக்காய் நந்தா விளக்கு- சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      வெகுகாலமாக அந்த விளக்கு ஒளி வீசிக் கொண்டிருக்கின்றது என்கின்றார்கள்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. தீப வழிபாடு...

    அருட் பெரும் ஜோதி ..... சரணம்... சரணம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. அரிய புகைப்படங்களும் சிறப்பான தகவல்களும் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..