நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மார்ச் 27, 2019

ஏழூர் தரிசனம் 1

சோழமண்டலத்தில் ஆண்டு தோறும் சிறப்புற நிகழும் திருவிழாக்களுள் மிக முக்கியமானது - திருஐயாறு சப்த ஸ்தானப் பெருவிழா..

சப்த ஸ்தானப்பெருவிழா சித்ரா பௌர்ணமியை அடுத்து வரும் விசாக நட்சத்திரத்தன்று நிகழ்வது.

பங்குனியில் திருமழபாடியில் நிகழ்ந்த ஸ்ரீ நந்தியம்பெருமான் திருமணத்தின் தொடர்ச்சியாக நிகழ்வது...

நந்தீசன் திருமணத்தைத் தரிசிக்க வந்த ஏனைய முனிவர்கள் மாப்பிள்ளையையும் பெண்ணையும் தத்தம் ஊர்களுக்கு வந்தருளுமாறு அழைத்ததாகவும் -

அதன் பொருட்டு செம்பொற்சோதியாகிய ஐயாறப்பரும் அன்னை அறம் வளர்த்த நாயகியும் - புதுமணத் தம்பதிகளைத் தாமே அழைத்து வருவதாக வாக்களித்ததாக ஐதீகம்...

ஸ்ரீ நந்தீசன் - சுயம்பிரகாஷிணி தேவி  
புதுமணத் தம்பதிகளைத் தனியே அனுப்ப மனமில்லை போலிருக்கிறது - ஐயனுக்கும் அம்பிகைக்கும்...

திருஐயாற்றில் சித்திரைத் திருவிழா முடிந்த கையோடு -
சித்திரை விசாகத்தன்று -  விடியற்காலையில் ஸ்வாமியும் அம்பிகையும் வெட்டி வேர் பல்லக்கிலும் நந்தீசனும்  சுயம்பிரகாஷிணி தேவியும் மற்றொரு பல்லக்கிலும் எழுந்தருளி திருஐயாற்றின் நான்கு வீதிகளிலும் வலம் வருவர்..

அதையடுத்து - காவிரியின் பூசப் படித்துறை மண்டபத்தில் வீற்றிருந்து
கட்டளைதாரர் மண்டகப்படி உபசாரங்களை ஏற்றுக் கொண்டு அங்கிருந்து திருப்பழனத்துக்குப் புறப்படுவர்...

திருப்பழனத்தில் ஸ்ரீ ஆபத்சகாய மூர்த்தி - ஸ்ரீ பிரஹன்நாயகி அம்பிகையுடன் ஊர்மக்கள் எதிர்கொண்டழைப்பர்...

அங்கே மாலை மரியாதைகளை ஏற்று கொண்டு அங்கிருந்து திருச்சோற்றுத் துறைக்குப் புறப்படுவர்...

ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி  
திருஐயாறு மற்றும் திருப்பழனத்துப் பல்லக்குகள் திருச்சோற்றுத்துறைக்கு எழுந்தருள மதியம் ஆகிவிடும்...

காவிரியைக் கடந்த நிலையில் திருச்சோற்றுத் துறை 
ஸ்ரீ ஓதவனேஸ்வரரும் ஸ்ரீ அன்னபூரணி அம்பிகையும் எதிர் கொண்டு அழைப்பர்..

அங்கே தான் வீட்டுக்கு வீடு கல்யாண விருந்து...

தமிழகத்தில் எந்தத் திருவிழாவிலும் காணப்படாத அற்புதம் இது..

திருச்சோற்றுத் துறையில் அவரவர் பொருளாதார நிலைக்கு அவரவர் வீடும் கல்யாணக் கோலம் பூண்டிருக்கும்...

பல்லக்குகளுடன் நடந்து வரும் பக்தர்களை -  தங்கள் இல்லத்தில் உணவு உண்பதற்கு வருமாறு அழைக்கும் பாசத்துக்கு நிகர் வேறு ஏதுமில்லை...

திருச்சோற்றுத் துறையிலிருந்து திருவேதிக்குடிக்குப் புறப்படும்போது
திருஐயாறு மற்றும் திருப்பழனத்துப் பல்லக்குகளுடன் திருச்சோற்றுத்துறை பல்லக்கும் புறப்படும்...

திருவேதிகுடியில் - ஸ்ரீ வேதபுரீஸ்வரரும் ஸ்ரீ மங்கையர்க்கரசி அம்பிகையும் எதிர்கொண்டழைத்து மாலை மரியாதை ஆராதனைகள் நிகழும்...

அங்கிருந்து திருக்கண்டியூருக்குப் புறப்படும்போது
திருஐயாறு திருப்பழனம் மற்றும் திருச்சோற்றுத்துறை பல்லக்குகளுடன்
திருவேதிகுடி பல்லக்கும் புறப்படும்...

திருக்கண்டியூரில் - ஸ்ரீ வீரட்டானேஸ்வரரும் ஸ்ரீ மங்களாம்பிகையும்
வரவேற்க அங்கே மகத்தான கோலாகலம்...

அங்கே மாப்பிள்ளை பெண்ணுக்கு கட்டுசோறு உபசாரம் பிரசித்தம்...

அதன் பின் அங்கிருந்து
திருஐயாறு திருப்பழனம் திருச்சோற்றுத்துறை மற்றும் திருவேதிகுடி பல்லக்குகளுடன் திருக்கண்டியூர் பல்லக்கும் புறப்படும்...

முன்னிரவுப் பொழுதில் திருப்பூந்துருத்தியை நெருங்க -
ஸ்ரீபுஷ்பவன நாதரும் ஸ்ரீ சௌந்தரநாயகி அம்பிகையும் எதிர்கொள்வர்..

இங்கே பல்லக்கில் வரும் மூர்த்திகளுக்கு புதிய மாலைகளுடன் அலங்காரம் செய்யப்படும்... ஆராதனை தரிசனத்துக்குப் பின் புறப்படும் போது -


திருஐயாறு திருப்பழனம் திருச்சோற்றுத்துறை திருவேதிகுடி மற்றும் திருக்கண்டியூர் பல்லக்குகளுடன் திருப்பூந்துருத்தி பல்லக்கும் புறப்படும்...

குடமுருட்டி ஆற்றில் பெரிய அளவில் வாணவேடிக்கை நிகழ
திருநெய்த்தானம் ஸ்ரீ நெய்யாடியப்பர் - ஸ்ரீ பாலாம்பிகை வரவேற்பு அளிப்பர்..

அங்கே சிறப்பான ஆராதனைக்குப் பிறகு புறப்படும் வேளையில்

திருஐயாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், மற்றும் திருப்பூந்துருத்தி பல்லக்குகளுடன் திருநெய்த்தானத்தின் பல்லக்கும் புறப்படும்...

ஆறு ஊர் பல்லக்குகளும் (திருவையாற்றுடன் ஏழூர்) திருஐயாற்றை நெருங்கும்போது பொழுது விடிந்திருக்கும் ...

கீழைக் கோபுர வாசலில் ஈசனுக்கும் அம்பிகைக்கும் பதுமை மாலையிட எல்லா மூர்த்திகளுக்கும் புஷ்பாஞ்சலியுடன் மகா தீப ஆராதனை நிகழும்..

அந்த வேளையில் ஐயாறப்பரின் பல்லக்கு பண்டரங்கக்கூத்து நிகழ்த்தும்..

பண்டரங்கக் கூத்து நிகழ்த்தியபடியே ஸ்வாமியின் மூலஸ்தான ப்ரவேசம்..

அத்துடன் ஏனைய திருத்தலங்களின் மூர்த்திகள் தத்தம் திருக்கோயில்களுக்கு
புறப்படுவர்....

ஸ்ரீ ஐயாறப்பரும் அம்பிகையும் 
இது தான் சப்தஸ்தானப் பெருவிழா...

ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுகின்ற ஆனந்தத் திருவிழா..

ராஜராஜ சோழ மாமன்னனின் பெருந்தேவியாகிய உலகமாதேவியார் தான்
இத்திருவிழாவினைத் தொடங்கி வைத்ததாக சொல்லப்படுகின்றது...

ஆயிரம் ஆண்டுகளாக எவ்வித தடங்கலும் இன்றி
இத்திருவிழா நடைபெறுவதே இதன் சிறப்பு...

ஆனால் - இப்போது பற்பல மாற்றங்கள்... திருப்பழனத்திலிருந்து திருசோற்றுத் துறைக்கு பல்லக்குகள் வரும்போதே மதியப் பொழுதைக் கடந்து விடுகின்றது...

எல்லாப் பல்லக்குகளும் இரவைக் கடந்து திருஐயாற்றை நெருங்கும்போது உச்சிப் பொழுதைக் கடந்து விடுகின்றது...

இதற்கெல்லாம் பற்பலக் காரணங்கள்...

இத்தகைய திருவிழாவை இந்த ஆண்டு தரிசிக்கும் பேறு கிடைத்தது...

இதனைத் தளத்தில் பகிர்ந்து கொள்ள வெகு தாமதம் ஆகி விட்டது...

இன்னும் இரு வாரங்களில் தமிழ்ப் புத்தாண்டு பிறந்து விடும்...
அடுத்த சப்தஸ்தானமும் நெருங்கி விட்டது...

இனி அடுத்தடுத்த பதிவுகளில் - சப்தஸ்தான தரிசனம் நிகழும்..


இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட்கெல்லாம் கடுநரகங்கள் வைத்தார்
பரப்பு நீர் கங்கைதன்னைப் படர் சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயன் ஐயறனாரே.. (4/38)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

29 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    மகனை கோமதி அக்கா தளத்தில் தரிசனம் செய்தேன். அம்மையையும், அப்பனையும் இங்கு தரிசனம் செய்துகொள்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      வணக்கம்..
      தங்களுக்கு நல்வரவு...

      நீக்கு
  2. திருவிழாக் காட்சிகளும், மக்களின் உபசரிப்புத் தகவல்களும் ஆச்சர்யம், சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்.
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. சப்தஸ்தானம் தரிசனம் செய்து கொண்டேன் காலையில்.
    நன்றி, வாழ்த்துக்கள்.

    ஆயிரம் ஆண்டை தாண்டியும் திருவிழா நடப்பது சிறப்புதான்.
    படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. இன்று எல்லாக் கோவில் தரிசனமும் ஆனது. ஏயப்பா எவ்வளவு ஊர்கள் சொல்லி இருக்கிறீர்கள். அனைத்து ஊரிலும் அடியார்களுக்கு உணவு படைப்பார்கள் என்பதே கேட்க அருமையாக இருக்கிறது.
    என்ன ஒரு கோலாஹலம். இத்தனையையும் விட்டு நீங்கள் அங்கே இருக்கிறீர்கள் என்பதுதான் யோசனையாக இருக்கிறது.
    உங்கள் இறைவன், இறைவி, நந்தியம் பெருமான் திருமணம் எல்லாவற்றையும் மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொள்கிறேன். அம்மையும் அப்பனும் நம் நாட்டைக் காக்க வேண்டும்.
    நன்றி துரை செல்வராஜு.வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      ஏழூர் கோயில்கள் அடுத்தடுத்த பதிவுகளில் இடம் பெறும்...

      அன்பின் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. ஆனந்தத் திருவிழா... தரிசனம் கண்டும் ஆனந்தம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி....

      நீக்கு
  6. வழக்கம்போல அழகிய தரிசனம் கண்டேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  7. இந்த ஏழூர் விழா பற்றி முன்பே பல தளங்களில் படித்த நினைவு

    பதிலளிநீக்கு
  8. இருந்தாலும் உங்கள் வரிகளில் படிப்பதும் ஒரு அனுபவமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  9. அருமை.... திருச்சோற்றுத்துறை கல்யாண விருந்து பற்றி சொல்லியிருக்கீங்க. இதுபோலவே நான் கும்பகோணம் மகாமகத்தின்போது ஆங்காங்கு வீடு எடுத்து வருகிறவர்களுக்கு உணவு சமைத்துப்போடுவதைப் பார்த்திருக்கிறேன்.

    அழகிய தரிசனம்.... இந்தக் கோவில்களுக்கு அடுத்த முறை கண்டிப்பாகச் செல்வேன், அதிலும் திருவையாறு கோவிலுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      முந்தைய மகாமக விழாவின் போது தாராளமாக அன்ன தானங்கள் நடந்தன...

      சென்ற மகாமகத்தில் ஏகப்பட்ட கெடுபிடிகள்...

      தொடரும் பதிவுகளில் நிறைய செய்திகள் காத்திருக்கின்றன..

      உங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் இயன்றவரை தருகிறேன்...

      தங்களது கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  10. குட் ஈவினிங் துரை அண்ணன்:).

    அதுக்குள் அடுத்த தொடரோ அவ்வ்வ்வ்:).

    சப்தஸ்தானம்... புதுப்பெயராக இருக்கு.. அடுத்த தொடரில் தெரிஞ்சிடும் எனக்கு தொடருங்கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      சப்த ஸ்தானம் என்பது ஏழு ஊர்களைக் குறிப்பது..

      ஏழு ஊர்களையும் இணைக்கும் திருவிழா...

      ஆதிராவின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  11. சிறப்பான விழா பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  12. சிறு வயதில் பார்த்த நினைவுகள் நெஞ்சில் வலம் வருகின்றன

    பதிலளிநீக்கு
  13. இரு முறை சென்றுள்ளேன். மிகவும் சிறப்பாக விழா நடைபெறுவது பார்ப்பதற்கு மிகவும் நிறைவாக இருக்கும். கடந்த வாரம் சக்கராப்பள்ளி சப்தஸ்தானத் திருவிழா நிறைவுற்றது.

    பதிலளிநீக்கு
  14. அருமையான விவரங்கள் துரை. இந்த விழா பற்றிக் கேள்விப் பட்டாலும் கலந்து கொள்ளும் அளவுக்கு உடல் தெம்பு இல்லை. மனக்கண்ணால் பார்க்க வேண்டியது தான்! அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். இப்போதைய தாமதத்துக்குக் காரணம் என்னவோ?

    பதிலளிநீக்கு
  15. குடமுருட்டியில் "திருநெய்த்தானம்" நெய்யாடியப்பர்-பாலாம்பிகை என வர வேண்டியது திருச்சோற்றுத் துறை எனத் தவறாக வந்திருக்கு. பண்டரங்கக் கூத்துப் பார்க்க மிகவும் ஆசை தான்! திருவையாறு ஐயாறப்பரின் இந்தக் கூத்து மிகப் பிரபலமான ஒன்று என்பதை அறிந்திருக்கிறேன். உங்கள் அடுத்தடுத்த பதிவுகளுக்குக் காத்திருக்கேன். தாமதமான வருகைக்கு மன்னிக்கவும். :(

    பதிலளிநீக்கு
  16. துரை அண்ணா தாமதம்..நேற்று வர இயலவில்லை இன்று எபியில் கொஞ்சம் கும்மி...ஹா ஹா

    நந்திஎம்பெருமான் திருமணவைபவம் இப்போது ஊர் ஊராகச் செல்வது விவரங்கள் அருமை. திருச்சோற்றுத்துறையில் அட மக்கள் விருந்து வைத்து எல்லோரையும் அழைத்து விருந்து படைப்பது என்ன அழ்கான விஷயம் இல்லையா...

    இப்படி ஒவ்வொரு ஊர் செல்லும் போதும் கூடவே மக்களும் செல்வார்களோ?!!

    கீதா

    பதிலளிநீக்கு
  17. ஒரே கோலாகலமாகத்தான் இருக்கும் போல!

    7 ஊர்களையும் இணைத்து ஒரு திருவிழா...1000 ஆண்டுககளாக நடப்பது ஆச்சரியமல்லவா?!!

    இப்போதைய மாற்றங்களுக்குக் காரணம் போக்குவரத்து, ஊர்கள் மாறியது என்றும் சொல்லலாம் தானே அண்ணா...

    அதனால் தாமதம் ஏற்படலாம் இல்லையா..ராஜ ராஜ சோழனின் பெருந்தேவி உலகமாகா தேவி தொடங்கிவைத்தது என்பதும் அறிய முடிகிறது. அருமை அண்ணா உங்கள் விவரணங்கள். ஒரு முறையேனும் இதை நேரில் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.

    ஒவ்வொரு ஊர் வரும் போதும் அந்த ஊர் பல்லக்கு சேர்ந்து கொள்ளுமோ? அப்படியாக 6 பல்லக்குகள் திருவையாறை (7) அடைகின்றன இல்லையா..பண்டரங்கக் கூத்து என்றால் என்ன என்று பார்க்கவேண்டும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  18. சப்தஸ்தானங்கள் குறித்தும் விழா பற்றியும் நந்திஎம்பெருமான் திருமணம் மற்றும் அதன்பின்னான இந்தத் திருவிழா குறித்தும் பல விவரங்களை அறிகிறோம். படங்கள் எல்லாமே நன்றாக இருக்கின்றன. தரிசம் கிடைக்கப் பெற்றோம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..