நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மார்ச் 29, 2019

ஏழூர் தரிசனம் 2

2018 மே மாதம் முதல் நாள்...

சித்திரை மாதத்தின் விசாகம்..



அன்றைய தினம் சப்த ஸ்தானம்...

சப்த ஸ்தான நாளன்று -
திருச்சோற்றுத்துறையைத் தரிசனம் செய்ய வேண்டும் என்று ஆசை...


திருச்சோற்றுத்துறையை மட்டும் தரிசனம் செய்ய வேண்டும்.. மற்ற தலங்களைப் பிற்கு பார்த்துக் கொள்ளலாம் - என்று நினைத்திருந்தேன்...

இந்த சப்த ஸ்தான தலங்களுள் -
திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருநெய்த்தானம் ஆகிய தலங்களைத் தவிர - மற்ற தலங்களை முன்பே தரிசித்திருக்கிறேன்...

அதன்படி நான் - என் மகனுடன்
தஞ்சையிலிருந்து புறப்பட்டபோது உச்சிப் பொழுது...

ஸ்கூட்டி திருச்சோற்றுத் துறையை நோக்கி விரைந்தது..

ஏகப்பட்ட வாகனங்கள் திருஐயாற்றை நோக்கிச் சென்று கொண்டிருந்தன...

தஞ்சையின் வடதிசையில் திருக்கண்டியூர் திருக்கோயிலுக்கு முன்பாக
வலப்புறமாகப் பிரிந்த சாலையில் பெருந்திரளான மக்கள்...

எல்லாருடைய முகங்களிலும் -
பல்லாக்கு எப்போ வருமாம்?... என்ற வினா தான்...

கண்டியூரிலிருந்து மூன்று கி.மீ., தொலைவில் வீரமாங்குடி...
அங்கிருந்து ஒன்றரை கி.மீ., தொலைவில் திருச்சோற்றுத்துறை..

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து வீரமாங்குடி வரைக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன...

ஆனாலும் அருகிருக்கும் திருச்சோற்றுத்துறையின் மீது என்ன கோபமோ தெரியவில்லை...

இன்று வரை திருச்சோற்றுத்துறை வரைக்கும் நகரப் பேருந்து இயக்கப்படவில்லை...

ஆனால்,
கும்பகோணத்திலிருந்து ஒரு பேருந்து இந்த சாலையில் வந்து கண்டியூரைக் கடந்து திருக்காட்டுப்பள்ளி வரை செல்வதாகச் சொல்கிறார்கள்...

நாற்பதாண்டுகளுக்கு முன் தஞ்சை மாவட்டத்தில் அரசு பேருந்து இயங்கத் தொடங்கியபோது சோழன் உங்கள் தோழன் என்று சொல்லப்பட்டது..

உண்மையில் அந்த வார்த்தை -

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் விளங்கிய
தங்கத் தமிழ்ச் சோழர்களுக்கு அந்த வார்த்தைகள் பொருந்துமே அன்றி -

1970 களில் தமிழக அரசு ஆரம்பித்து வைத்த தகர டப்பா சோழர்களுக்குப் பொருந்தாது என்பது தெளிவு...

சரி.. அது போகட்டும்... நாம் திருச்சோற்றுத்துறையை நோக்கிச் செல்வோம்...

குடமுருட்டி ஆற்றின் கரையில் உள்ள வீரமாங்குடியின் பெருஞ்சிறப்பு
அங்குள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில்...

அன்னை மிகுந்த வரப்ரசாதி... ஆலயத்து வருகை தரும் பக்தர்களுக்கு உணவளிக்காமல் அனுப்பவே மாட்டாள்...

அத்தனை கருணை உடையவள்....

அவளது திருக்கோயிலை வணங்கியபடியே திருச்சோற்றுத்துறையை நோக்கி விரைந்தோம்...

பெயருக்குத் தான் விரைந்தோம் என்பதே தவிர அந்தச் சாலை முழுதும் மக்கள் வெள்ளம்....

இவர்கள் திருசோற்றுத்துறையில் தரிசனம் செய்து விட்டு திருக்கண்டியூரை நோக்கிச் செல்கிறார்கள்...

வெப்பம் மிகுந்திருந்த அந்த வேளையில் சாலை முழுதும் தண்ணீரால் நனைக்கப்பட்டு - அதுவும் சட்டென்று உலர்ந்து விடாதபடிக்கு வைக்கோல் பரப்பட்டிருந்தது...

மெதுவாக அந்தக் கூட்டத்தினுள் ஊர்ந்தது ஸ்கூட்டி..

இதோ திருச்சோற்றுத் துறை...
சப்த ஸ்தானத் திருத்தலங்களுள் மூன்றாவது திருத்தலம்...

நந்தீசனின் திருக்கல்யாணத்தின் போது கல்யாண விருந்து உபசரிப்பினை -  திருச்சோற்றுத்துறையினர் ஏற்றுக் கொண்டதாக ஐதீகம்...

எப்போதோ ஒரு காலத்தில் பெரும்பஞ்சம் வந்துற்றபோது
எளியவர் ஒருவர் மக்களுக்கு அன்னதானம் செய்ய ஆசைப்பட்டார்...

சுயநலமில்லாத அவரது ஆசை நிறைவேறும் வண்ணம்
வாழை மடுவில் ஈசன் தோன்றி அட்சய பாத்திரம் வழங்கியதாக தலப்...

ஆங்காங்கே சிறுவர்களும் பெண்களும் பெரியவர்களும் மலர்ந்த முகத்துடன் இங்க வாங்க... வண்டியை இப்படிப் போடுங்க.. - என்று அழைத்துக் கொண்டு இருந்தார்கள்....

தோட்டம் துரவுகளின் வேலிகளைப் பிய்த்துப் போட்டு விட்டு வழிச் செல்வோர் சற்று இருந்து ஓய்வு எடுக்கும்படிக்கு பந்தல்கள்...

வேறு தலங்களில் இரு சக்கர வாகனங்கள் நுழைந்தாலே மடக்கிப் பிடித்து வகை வகையான வழிகளில் வசூல் வேட்டை நடக்கும்...

ஆனால் - அப்படி ஏதும் இங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது..

நாங்கள் வீட்டிலேயே சாப்பிட்டிருந்ததால் - அன்ன தானப் பந்தல்களில் நுழைய வில்லை...

ஸ்கூட்டியை வீடொன்றின் ஓரமாக நிறுத்தி விட்டு சிவ தரிசனம் செய்திட விரைந்தோம்..

மிக அழகான திருக்கோயில்..



புதிதாகக் கொடிமரம்.. பொலிவுடன் இருந்தது...

திருவாசலைக் கடந்ததுமே முன் மண்டபத்தில் தனிச்சந்நிதியில் அழகான முருகன்...

முருகனுக்குச் சிறப்பான அலங்காரம்..

புகைப்படம் எடுக்கக் கூடாது என்று எழுதி வைத்திருக்கின்றார்கள்..

எனினும், யாரும் படம் எடுத்து விடாதபடிக்கு அரண் போல இளம் அர்ச்சகர்கள் பலர் கண்காணித்துக் கொண்டிருந்தனர்...

சந்நிதியில் எம்பெருமான் தொலையாச் செல்வராக அட்சயபுரீஸ்வராக அருள்பாலித்துக் கொண்டிருந்தார்...

என்ன சொல்வது?... எம்பெருமானின் தரிசனத்தில் மெய் மறந்திருந்தோம்...

பக்தர்கள் வருகை அதிகரிக்கவே மூங்கில் தடுப்புகளுக்குள் அவசரப்படுத்தப் பட்டோம்...





ஐயனின் தரிசனம் கண்டபின் திருச்சுற்றில் வலம் வந்து
மூலஸ்தானத்தின் தென்புறமாக தனிச்சந்நிதியாக விளங்கும்
அம்பிகையின் திருக்கோயிலை அடைந்தோம்...

ஸ்ரீ அன்னபூரணி அம்பிகை கிழக்குத் திருமுகம்... நின்ற திருக்கோலம்...

சந்தனக்காப்பு அலங்காரத்தில் பேரழகாகத் திகழ்ந்து கொண்டிருந்தாள் அம்பிகை...

அனைவருக்கும் அன்ன விசாரம் தீர்த்து அருள்வாய்.. தாயே!...
- என்று மனதார வேண்டிக் கொண்டு வலம் செய்தோம்...

திருச்சுற்றில்
ஸ்ரீ ஷோடச லிங்கம்
திருமூலஸ்தானம் 

வெயில் தகித்துக் கொண்டிருக்க - பிரகாரம் தவிர்த்த மண்டபங்கள் முழுதும் திரளாக மக்கள் நிழலுக்கு ஒதுங்கியிருந்தனர்....

மக்கள் கூட்டத்தின் இடையே பெரும்பாலும் படம் எடுப்பதில்லை..

அம்பிகையின் விமானம் 
குளிரக் குளிர நீர் மோர் 
திருக்கோயிலில் ஒரு சில இடங்களில் மட்டும் படங்கள் எடுத்துக் கொண்டு கொடிமரத்தருகில் வணக்கம் செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம்...

ஸ்கூட்டி விடப்பட்ட இடத்தில் பாதுகாப்பாக இருந்தது...

வீட்டுக்குப் போகலாம் ... - என்ற எண்ணத்துடன் - ஸ்கூட்டியை நகர்த்திய போது மகன் கேட்டான்...

எல்லாக் கோயில்களுக்கும் போவோமா... அப்பா!..

மகன் வாயிலாக - எம்பெருமான் அழைக்கிறான்...

எங்களை வழி நடத்துபவன் அவனல்லவோ!...

அதன்படி அடுத்த சில விநாடிகளில் 
எங்களது ஸ்கூட்டி திருவேதிகுடியை நோக்கி விரைந்தது...


நன்றி - சிவனடியார் திருக்கூட்டம்..
கண்ணவனாய் உலகெல்லாங் காக்கின்றானே
காலங்கள் ஊழி கண்டிருக்கின்றானே
விண்ணவனாய் விண்ணவர்க்கும் அருள் செய்வானே
வேதனாய் வேதம் விரித்திட்டானே
எண்ணவனாய் எண்ணார் புரங்கள் மூன்றும்
இமையாமுன் எரி கொளுவ நோக்கி நக்க
திண்ணவனே திருசோற்றுத்துறையுளானே
திகழொளியே சிவனே உன் அபயம் நானே..(6/44)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ

25 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    இந்த ஏழூர் பல்லக்கு என்கிற பதத்தை என் அம்மா அடிக்கடி உபயோகிப்பர். நான் மெதுவாக காரியங்கள் செய்யும்போது சொல்வர்!

    பதிலளிநீக்கு
  2. அப்போது தஞ்சையில் சோழன் சேவை பற்றி நானும் அறிவேன். சோழன் பேரூந்துகளைவிட வெண்சங்கு போன்ற தனியார் பேருந்துகள் பளபளவென்றிருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...
      வணக்கம்.... தஞ்சையில் சோழன் பேருந்து சேவையைப் பற்றி தனிப் பதிவே எழுதலாம்..

      வெண்சங்கு, ராமசுப்ரமணியம், சிவா, சில்வர் ஆரோ, SMT, ரங்கநாதர், SD லிங்கம் MS மணியம் - பேருந்துகள் இன்னும் நினைவில் உள்ளன...

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  3. படங்கள் ஓகே. திருவிழா முடிந்தபிறகு இந்தக் கோவில்கள் வழக்கம்போல கூட்டமின்றி காணப்படும்! திருவிழா இல்லாத ஒரு சமயத்தில் இங்கு சென்று தரிசனம் செய்ய விருப்பம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...
      தாங்கள் சொல்வது போலத்தான்...

      ஆனாலும் திருவிழா இல்லாத சமயத்தில் சென்றாலும் மாலை மயங்குவதற்குள் சென்று விடுங்கள்.. சில கோயில்களில் சரியான மின்விளக்கு வசதிகள் இல்லை...

      நீக்கு
  4. அழகிய படங்கள், நேரில் காண்பது போன்ற வார்த்தை ஜாலம் அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. மகன் வாயிலாக எம்பெருமான் அழைக்கிறார், எங்களுக்கும் கிடைக்கும் தரிசனம்.
    நன்றி உங்கள் மகனுக்கு.
    அம்பிகையிடம் நீங்கள் வேண்டிக் கொண்டது போல் அம்பிகை படியளப்பாள் அனைவருக்கும்.

    படங்களும், விவரங்களும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      திருச்சோற்றுத்துறையை மட்டும் தரிசித்து விட்டுத் திரும்புவோம் - என ,
      நான் ஏன் நினைத்தேன் என்று எனக்கே தெரியவில்லை...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  6. திருவிழா இல்லாத சமயங்களில் இந்தக் கோயில்களில் சிலவற்றுக்குப் போயிருக்கோம். திருச்சோற்றுத்துறை போனதாக நினைவில் இல்லை. பார்க்கணும். அருமையான தரிசனம். நல்ல தெளிவான விபரங்கள். படங்கள் எல்லாமும் அருமையாக வந்திருக்கின்றன. மற்றக் கோயில் தரிசனங்களுக்கும் காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி...

      அவசியம் ஒருமுறை தரிசனம் செய்யுங்கள்...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  7. எத்துனை எத்துனை கோவில்கள் ...

    தங்கள் வழியாக நாங்களும் தரிசித்துக் கொள்கிறோம் ....மிக அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  8. படங்கள் அதிலும் குறிப்பாக கொடுமரம் மிக அருமையாக வந்துள்ளது.

    இந்தப் படம் எடுக்கும் விஷயம் எனக்குப் புரிவதில்லை. கோவில் கர்ப்பக்க்ரஹங்களின் போட்டோ, அபிஷேகத்தின் காணொளி போன்றவை வாட்சப்பில் எப்படி வருகிறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி....

      இதெல்லாம் உள்ளடி வேலைகள்..
      சென்ற வருடம் திருச்சிக்கு அருகிலுள்ள நெடுங்களம் என்ற கோயிலில் வெளியில் இருந்த பிரகார நந்தியை படம் எடுத்தபோது
      கோயிலின் உள்ளிருந்து இளம் வயது அர்ச்சகர் சத்தம் போட்டுக் கொண்டே ஓடி வந்தார்... ஆனால் தினமலர் முதலான பல ஊடகங்கள் எடுத்த அதே கோயிலின் படங்களை அங்கேயே பெரிது செய்து மாட்டியிருக்கிறார்கள்....

      இதை கேட்க முற்பட்ட போது என் மனைவியால் தடுக்கப்பட்டேன்...

      வாழ்க நலம்...

      நீக்கு
    2. நெல்லை அண்ட் துரை அண்ணா எனக்கும் இது போன்ற கேள்விகள் வரும். எனக்கும் சமீபத்தில் ஒரு கோயிலில் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாததால் நான் இத்தனைக்கும் வெளிப்புறத்தைத்தான் படம் எடுத்தேன். கர்ப்பகிரஹம் கூட இல்லை. உடனே அங்கிருந்தவர் எடுக்கக் கூடாது என்று சொல்லவும் கேமராவை உள்ளே வைத்துவிட்டேன். வேறு என்ன செய்ய?

      கீதா

      நீக்கு
    3. இது போல ஒரு சில கோயில்களில் கெடுபிடிகள் அதிகமாகத்தான் செய்கிறார்கள்...

      ஊடகங்கள் என்றால் புன்னகையுடன் பேட்டி கொடுக்கிறார்கள்...

      நாம் என்ன செய்வது... சென்ற இடத்தில் பிரச்னை எதற்கு என்று பேசாமல் வர வேண்டியது தான்....

      நீக்கு
  9. படங்கள் கோயில்கள் பற்றிய விவரணம் எல்லாம் அருமை தங்கள் மூலம் தரிசனமும்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசி...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  10. சாலையில் தண்ணீர் தெளித்து காயாமல் இருக்க வைக்கோல் அட! சூப்பர். வைக்கோல் கம்பளம்!!

    ஏதோ ஒரு கோயிலில் பிராகாரத்தில் இப்படி சாக்கு போட்டு அதில் தண்ணீர் தெளிப்பது பார்த்திருக்கிறேன் டக்கென்று எந்தக் கோயில் என்று நினைவு வரலை..

    இன்னும் திருச்சோற்றுத்துறைக்குப் பேருந்து இல்லாதது வேதனைதான்.

    உங்கள் மகன் மூலம் எல்லாக் கோயிலும் சென்றிருக்கிறீர்கள் என்பது மகிழ்வான விஷயம்.

    திருமூலஸ்தானம் கோபுரம் அம்பிகை விமானம் செமையா இருக்கு படம்..

    நல்ல விவரணம் அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெயில் நேரத்தில் ஈரமான வைக்கோலில் நடப்பது கால்களுக்கு இதமாக இருக்கும்...

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  11. திருச்சோற்றுத்துறை.. அழகிய அழவான கோயில்.. பெயருக்கு காரணம் இருக்குமே...

    இங்கிருக்கும் ஐயனார்தான் சாந்தமாக இருக்கிறார்.. நான் பார்த்தவற்றுள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அதிரா...
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி....

      திருச்சோற்றுத்துறை பெயர்க் காரணம் பதிவில் சொல்லியிருக்கிறேன்....

      அன்னதானம் செய்ய ஆசைப்பட்ட ஏழை ஒருவருக்கு இறைவன் அமுத சுரபி அளித்ததாக தலவரலாறு...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  12. சோழன் உங்கள் தோழன்.... நல்ல வாசகம்.

    ஒரே நாளில் ஏழு கோவில்களும்! மகிழ்ச்சி. எல்லாம் அவன் அருள்...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..