நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஆகஸ்ட் 05, 2018

வரம் தருவாய்..

இன்று ஆடிக்கிருத்திகை...

திருமுருக வழிபாடு இயற்றும் அன்பர்களுக்கும்
சிவநேசச் செல்வர்களுக்கும்
மிகுந்த சிறப்புடைய நாள்..

முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கும் 
ஆலயங்கள் எல்லாவற்றிலும் கோலாகலம்...

இந்த நாளில்
பழனியம்பதி வாழ் பாலகுமாரனைப் பணிந்திருப்போம்...


நாத விந்து கலாதீ நமோ நம
வேத மந்த்ர சொரூபா  நமோ நம
ஞானபண்டித சாமீ நமோ நம - வெகுகோடி

நாம சம்பு குமாரா நமோ நம
போக அந்தரி பாலா நமோ நம
நாக பந்த மயூரா நமோ நம - பரசூரர்


சேத தண்டவிநோதா நமோ நம
கீத கிண்கிணி பாதாநமோ நம
தீர சம்ப்ரம வீரா நமோ நம - கிரிராஜ


தீப மங்கள ஜோதீ நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம - அருள் தாராய்..


ஈதலும் பலகோலால பூஜையும்
ஓதலுங் குண ஆசார நீதியும்
ஈரமுங் குருசீர்பாத சேவையும் - மறவாத


ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை
சோழமண்டல மீதே மனோகர
ராஜகம்பீர நாடாளுநாயக - வயலூரா


ஆதரம் பயில் ஆரூரர் தோழமை
சேர்தல் கொண்டவரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதேறிமாகயி - லையில் ஏகி


ஆதியந்த உலாஆசு பாடிய
சேரர் கொங்குவைகாவூர் நன்னாடதில்
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் - பெருமாளே!...
***



முருகா சரணம்.. முதல்வா சரணம்..
முத்துக் குமரா சரணம்.. சரணம்..

சரவணபவ குக 
ஷண்முக சரணம்..
ஃஃஃ 

25 கருத்துகள்:

  1. வணக்கம்... இதோ வந்து விட்டேன்!

    பதிலளிநீக்கு
  2. முருகனைப்பற்றிய பதிவு என்றாலும் வரம் தருவாய் என்கிற தலைப்பு எனக்கு "வரம் தருவாய் என் தாயே மீனாட்சி.." என்கிற அழகான யேசுதாஸ் பாடலை நினைவு படுத்தி விட்டது. பதிவு படித்துப் பின்னூட்டமிட்ட பின்னர் சென்று அந்தப் பாடலை ஒருமுறை கேட்டு விடுவேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தாங்கள் சொல்லும் யேசுதாஸ் பாடலைக் கேட்டதில்லையே!..

      நீக்கு
  3. இந்த 'நாத விந்து கலாதி நமோ நம' டி எம் எஸ் குரலில் கேட்டிருக்கிறேன். இந்தப் படத்தில் என்று நினைவில்லை. பழனியில் அனாவசியமாக ழ மெய்யெழுத்து ஆகிவிட்டது! மெய்யன்பர்களுக்கான பதிவு என்பதாலோ!!

    பதிலளிநீக்கு
  4. முருகா... சரவணா... குமரா... செந்தில்வேலா.. கந்தா.. கதிர்வேலா..

    பதிலளிநீக்கு
  5. ஆடிக்கிருத்திகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது என்று நினைக்கிறேன். முருகன் அனைவரையும் காத்தருளட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சியும் நன்றியும்...

      நீக்கு
  6. ஆடிக் கிருத்திகை சிறப்பு பகிர்வு சிறப்பாக இருக்கிறது. நாதவிந்து பாடல் என் பெரியப்பா தினமும் கோவிலுக்குச் சென்று பாடுவார்/சொல்வார். எனக்கும் பிடித்த பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களுக்கு நல்வரவு... நன்றி..

      நீக்கு
  7. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களுக்கு நல்வரவு.. மகிழ்ச்சி..

      நீக்கு
  8. தலைப்பைப் பார்த்தவுடன் எனக்கு சீர்காழியின் குரல் 'வரம் தருவாய் முருகா' என்று மனதில் ஒலித்தது. இடுகையும் அவனைப் பற்றியதுதான்.

    அந்த முருகன் எனக்கு அருள் புரியணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த..

      சீர்காழியாரின் பாடலைக் கொண்டே தலைப்பு வைத்தேன்...

      முருகனருள் முன்னின்று காக்க..

      நீக்கு
  9. தலைப்பு அருமை ஜி அனைவரும் வேண்டுவது வரமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. நேத்து எஸ்விபிசி சானலில் ஆறுபடை வீடுகளும் காட்டினார்கள். திருத்தணி முருகனுக்குத் திருப்பதிப் பெருமாள் கிருத்திகைக்கான சீர் வரிசைகள் அனுப்பியது சிறப்புச் செய்தி. நேற்று வரை அப்படி ஒண்ணு இருக்குனு தெரியவும் தெரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின்...

      இதுவரை கேட்டறியாத செய்தியைத் தந்ததற்கு மகிழ்ச்சி...

      மருமகனுக்கு மாமன் சீர் வழங்குவது இயல்பு தானே....

      மாமன் என்ற உறவு மிகச் சிறப்பானதல்லவா...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. அருமையான் நான் அடிக்கடி பாடும் திருப்புகழ் பாடல்.

    தலைப்பு மிக அருமையான தேர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      நாத விந்து கலாதீ நமோ நம..

      இந்தத் திருப்புகழ் மந்திரக்கட்டு உடையது என்பார்கள்...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. ஆம், மந்திரக் கட்டு உடையது. ஆசாரத்துடன் சொல்லணும் என்பார்கள்.

      நீக்கு
  12. உங்களுடன் சேர்ந்து நாங்களும் பயணித்தோம்.

    பதிலளிநீக்கு
  13. http://mathysblog.blogspot.com/2018/08/blog-post_6.html

    மாடக்குள அய்யனார் கோவில் பதிவு. நீங்கள் சொன்னதை குறிபிட்டு இருக்கிறேன்.
    நேரம் இருக்கும் போது பாருங்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..