நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 27, 2018

அன்பின் ஆரூரர் 2

கடந்த சனிக்கிழமை (21/7) ஆடிச் சுவாதி...

ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் தமது நண்பர் ஸ்ரீ சேரமான் பெருமாளுடன்
திருக்கயிலாய மாமலைக்கு ஏகிய நாள்..

திருச்சோற்றுத்துறை
சகல சிவாலயங்களிலும் இவ்வைபவம்
இயன்றவரை சிறப்பாக கொண்டாடப்பெற்றது....

நண்பர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற
அந்த வைபவக் காட்சிகள் இன்றைய பதிவில் - தங்களுக்காக!...

படங்களை வழங்கியோர்
சிவனடியார் உழவாரத் திருக்கூட்டம்..

அவர் தமக்கு மனமார்ந்த நன்றி...

இன்றைய பதிவில்
ஸ்ரீ சுந்தரர் அருளிய திருப்பதிகப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன...

திருச்சோற்றுத்துறை 
கோல அரவுங் கொக்கின் இறகும்
மாலை மதியும் வைத்தான் இடமாம்
ஆலும் மயிலும் ஆடல் அளியுஞ்
சோலை தருநீர்ச் சோற்றுத் துறையே.. (7/94)

திரு ஐயாறு 
திருக்குடந்தை 
திருச்சிராப்பள்ளி 
செய்யார் மேனியனே திருநீல மிடற்றினனே
மையார் கண்ணிபங்கா மதயானை உரித்தவனே
கையார் சோலைகள்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
ஐயாஎம் பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே.. (7/27)

திரு மயிலை 
மதுரையம்பதி
சேரமான் பெருமாள் - மதுரை 
திரு அண்ணாமலை 
பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய் கடுஇருட் சுடரொப்பாய்
மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே..(7/29)

திருநாட்டியத்தான்குடி 
காட்சி கொடுத்த நாயகர்., திருநாட்டியத்தான்குடி..
கல்லேன் அல்லேன் நின்புகழ் அடிமை கல்லாதே பலகற்றேன்
நில்லேன் அல்லேன் நின்வழி நின்றார் தம்முடைய நீதியை நினைய
வல்லேன் அல்லேன் பொன்னடி பரவ மாட்டேன் மறுமையை நினைய
நல்லேன் அல்லேன் நான் உமக்கல்லால் நாட்டியத்தான்குடி நம்பீ..(7/15)

திரு ஆரூர் 
திரு ஆரூர்
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப் 
போகமும் திருவும் புணர்ப்பானைப்
பின்னை என்பிழையைப் பொறுப்பானைப்
பிழையெலாந் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன் என்றறி யொண்ணா
எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற் பழனத்தணி
ஆரூரனை மறக்கலுமாமே!..(7/59) 

சுந்தரர் - கொடுங்கோளூர் 
சேரமான் பெருமாள்
கொடுங்கோளூர்
திரு அஞ்சைக்களம்
ஸ்ரீ சுந்தரர் கயிலைக்குப் புறப்பட்ட திருத்தலம்..

நொடித்தான்மலை எனப்படும் திருக்கயிலாய மாமலை 
இந்திரன் மால்பிரமன் எழிலார் தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன்னை மத்தயானை அருள்புரிந்து
மந்திர மாமுனிவர் இவனாரென எம்பெருமான்
நந்தமர் ஊரனென்றான் நொடித்தான்மலை உத்தமனே..(7/100)
-: சுந்தரர் :-

சுந்தரர் திருவடிகள் போற்றி.. போற்றி..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ

25 கருத்துகள்:

  1. சுந்தரத்தமிழில் சுந்தரப் பதிகங்களை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. பதிவும் பதிவின் தமிழும்,படங்களும் அருமை ஐயா!

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஜி
    தரிசித்தேன் வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
  4. நல்ல தரிசனம், திரு அஞ்சைக் களம் உட்பட. பிறகு வருவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த.,
      தங்கள் கருத்தினை எதிர் நோக்குகின்றேன்...

      நீக்கு
  5. அருமையான தரிசனம் எங்களுக்கும் கிடைத்தது ஐயா.... நன்றி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்...
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அருமையான தரிசனம்.
    கைலை தரிசனம் மிக அருமை.
    திருஅஞ்சைகளத்திற்கு என் மாமனார் அடிக்கடி போய்வருவார்கள். சுந்தரர் குரு பூஜைக்கு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. சிறப்பான தரிசனம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. //கோல அரவுங் கொக்கின் இறகும்// - அழகிய பாம்பையும், கொக்கின் இறகையும், மாலைக் காலத்தில் தோன்றுகின்ற பிறையை யும் முடியில் வைத்துள்ளவனாகிய சோற்றுத்துறை இறைவன் - சிவன், கொக்கின் இறகைத் தலையில் சூடியிருக்கிறார் என்று கேள்விப்பட்டதில்லையே (மயிற் பீலி கண்ணனுக்கு)

    செய்யார் மேனியனே திரு நீல மிடற்றினனே - இதனைப் படித்தவுடன், 'பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக் கிசைத்து' என்ற பதிகம் நினைவுக்கு வந்தது. செய்யார் மேனியனே என்ற பாடல் திருக்கற்குடி என்ற தலத்து இறைவனைப் பற்றியது என்று அறிகிறேன். இந்தத் திருத்தலம் எங்கு இருக்கிறது?

    பண்ணிடைத் தமிழ் ஒப்பாய் - இந்தப் பாடலில், கடு இருட் சுடர் ஒப்பாய் என்ற வார்த்தைகள் மிக இனிமை. இதைக் கற்பனை செய்தால்தான் புலப்படும். காடுகளில் இரவுப் பொழுதில் நடக்கும்போது, தூர ஒரு ஒளி (வீட்டில் இருக்கும் விளக்கு) தோன்றும், அதுபோல் நள்ளிரவில் ஒளிச்சுடர். இருளான கர்ப்பக்கிரஹத்தில் இறைவனின் வடிவை நம்மைக் காணச் செய்வது ஆரத்தி அன்றோ.

    கல்லேன் அல்லேன் - பதிகத்தில்,
    பொன்னடி பரவ மாட்டேன் மறுமையை நினைய
    நல்லேன் அல்லேன் நான் உனக்கு அல்லால்

    உனது பொன் போலும் திருவடிகளைப் பரவுமிடத்து அதற்குப் பயனாக மறுமையின்பத்தை நினைக்க மாட்டேன். உன்னைத் தவிர வேறு ஒருவருக்கு நான் உறவினன் அல்லேன் - மிகுந்த பொருள் பொதிந்த வார்த்தைகள்

    பொன்னும் மெய்ப்பொருளும் பதிகத்தில், - புணர்ப்பானை பின் என் பிழையைப் பொறுப்பானை - எல்லாம் தந்தபின்பு, நான் அந்த இன்பங்களை நுகரும்போது செய்கின்ற பிழைகளைப் பொறுத்துக்கொள்பவன் என்று திரு ஆரூரானைச் சொல்கிறார். (நாடி ஜோதிடத்தில் நான் அடுத்த பிறவியில் திரு ஆரூரில் பிறப்பேன், திருமணம் ஆகாது, அது கடைசிப் பிறவி என்று எனக்குச் சொன்னது என் நினைவில் இப்போது வருகிறது..ஹா ஹா ஹா)

    திருக்கயிலை மலையை நொடித்தான் மலை என்று ஏன் சொல்கிறார்கள்? இதற்கான தமிழ் விளக்கம் என்ன? பாடலை மிகவும் ரசித்தேன். சுந்தரர், கயிலை மலைச் சிவபெருமான், தன்னை 'நண்பன், ஆரூரைச் சேர்ந்தவன்' என்று அறிமுகப்படுத்துவார் என்று பெருமிதத்தோடு சொல்லும் பதிகம் இது.

    நல்ல பதிகங்களைக் கோர்த்துள்ளீர்கள். கயிலைமலை - நான் பார்க்காத வண்ணத்தில் இருக்கிறது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த. அவர்களுக்கு

      தங்களுடைய கருத்துரையைத் தொடர்வதாக தனியே ஒரு பதிவே தரலாம்...

      சில கோயில்களில் விளங்கும் நடராஜர் திருமுடியினில் கொக்கின் இறகைக் காணலாம்...

      கற்குடி திருச்சியில் இருந்து வயலூர் செல்லும் வழியில் உள்ளது.. இன்றைக்கு உய்யக்கொண்டான் என்று பெயர்...

      திருக்கயிலாய மாமலையை இராவணன் பெயர்த்த போது இறைவன் தன் கால் விரலால் அழுத்த மலைக்கு அடியில் மாட்டிக் கொண்டு நசுங்கிப் போனான்...

      இதனால் நொடித்தான் மலை எனவும் சொல்லப்படுகின்றது...

      விவரம் பிறகு தருகிறேன்...

      நிறைவான கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. நெல்லை அண்ட் துரை அண்ணா திருக்கயிலாய மலையை நொடித்தான்மலை என்று சொல்வது பற்றி நான் பாண்டிச்சேரியில் இருந்த போது என் தோழியின் தந்தை பன்னிருதிருமுறை கற்றுக் கொண்டிருந்தார். கயிலாயம் பற்றி பேச்சு வந்த போது சொன்னது. நொடித்தல் என்றால் அழித்தல் எனும் பொருள். அழிக்கும் கடவுள் என்று சிவனை சொல்வதால் அவ்விறைவனின் மலை என்று நொடித்தான் மலை என்று வருவதாகச் சொன்னார்.

      கீதா

      நீக்கு
  9. சுந்தரர், யானையின் மீதமர்ந்து, கயிலை மலைக்கு ஏகுவதாக உள்ள படமும் மிகச் சிறப்பு (எதிரே தேவர்கள், பிரமன் போன்றோரையும் ஓவியர் சேர்த்திருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும்).

    அதற்கு ஏற்ற பதிகத்தைக் கீழே கொடுத்திருக்கிறிர்கள்.
    'எழிலார் மிகு தேவரெல்லாம், வந்து எதிர் கொள்ள என்னை, மத்த யானை அருள் புரிந்து'

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த..

      ஓவியர் ராஜம் அவர்களால் தீட்டப்பட்டது...

      வேறு எதுவும் உள்ளதா எனத் தேடுகின்றேன்...

      அன்பின் நன்றி...

      நீக்கு
  10. அழகான தமிழில் அருமையான பாடல்களுடன் நல்ல தரிசனம் ஐயா/அண்ணா. அதுவும் கைலாய மலை தரிசனம் அருமை. (துளசி: அங்கெல்லாம் செல்ல முடியுமா என்று தெரியவில்லை. இங்கு கண்டு தரிசனம் பெற்றேன்.)

    பதிலளிநீக்கு
  11. படங்கள் அனைத்தும் அருமை. உங்கள் மூலம் நாங்களும் தரிசனம் காணப் பெற்றோம். நன்றி.

    பதிலளிநீக்கு
  12. திருஅஞ்சைக்களம் உள்ளிட்ட அனைத்துத் தலங்களுக்கும் சென்றுள்ளேன். கொடுங்கொளூர் என்று நீங்கள் சொல்வது கேரளாவில் பகவதி அம்மன் கோயில் உள்ள கொடுங்களூர்தானே? பகவதி அம்மன் கோயில் சென்றுள்ளேன். இக்கோயில் சென்றதில்லை. நீங்கள் கூறுவது பாடல் பெற்ற தலமா என்று அறியவேண்டுகிறேன். (கைலாச தரிசனம் உங்களின் தயவால் கிடைத்தது)

    பதிலளிநீக்கு
  13. கயிலை தரிசனம் கிடைக்கப் பெற்றேன். அருமையான பதிக விரிவுரைகளோடு விளக்கமான கருத்துகளும் அடங்கிய பதிவு. மீண்டும் மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..