நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூலை 21, 2018

அன்பின் ஆரூரர் 1

இன்று ஆடிச் சுவாதி...

வன் தொண்டர் என்று புகழப்பெற்ற
நம்பி ஆரூரர் வெள்ளை ஆனையில் ஆரோகணித்து திருக்கயிலாய மாமலைக்கு ஏகிய திருநாள்...

சுந்தரருடன் அவரது நண்பராகிய
சேரமான் பெருமாளும் திருக்கயிலாய மாமலையில் சிவகதி எய்தினார் என்பது திருக்குறிப்பு...

நேற்று மதியத்திலிருந்து
சுவாதி நட்சத்திரம் பயின்று வருகின்றது..

இதை அனுசரித்து நேற்றும் இன்றுமாக
ஆரூரர் குருபூசை நிகழ்கின்றது...

திரு ஆரூரிலும் திருநாவலூரிலும் நிகழ்வுறும் பெருவிழாவின் சில காட்சிகள்
இன்றைய பதிவில்...

நிகழ்வுகளை வழங்கியோர்
சிவனடியார் உழவாரத்திருக்கூட்டம்..

அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...

சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் பரவை நாச்சியார் திருக்கல்யாண வைபவம் திரு ஆரூரில்...ஸ்ரீ சுந்தரர் ஸ்ரீ பரவை நாச்சியார் திருக்கல்யாணம்திருநாவலூர் வைபவங்கள் 

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தை சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திரு ஆரூரில் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதும் திருமேனி தீண்டுவார்க் கதியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிசார்ந்த அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே..
- சுந்தரர் -

ஆரூரர் திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

12 கருத்துகள்:

 1. குட்மார்னிங். வந்து இறங்கியாச்...

  பதிலளிநீக்கு
 2. சுந்தரத் தேவாரத்துடன் பதிவையும் படங்களை ரசித்துத் தரிசித்தேன்.

  பதிலளிநீக்கு
 3. அருமையான படங்களுடன் கூடிய தகவல் பெட்டகத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. அழகான படங்கள்.
  மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கயிலாய காட்சி, சுந்தரர், சேரமான் பெருமாளுக்கு கொடுக்கும் காட்சி வைத்து இருப்பார்கள். போன வருடம் போய் பார்த்தேன் படங்கள் எடுத்தேன்.
  இந்த முறை போகவில்லை. போனாலும் போட்டோ எடுக்க முடியாது. செல்போன் ,காமிரா அனுமதி இல்லை.
  உங்கள் தளத்தில் தரிசனம் செய்து கொண்டேன்.
  நன்றி. வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 5. உங்கள் இடுகையில் தரிசித்தேன். பிறகு வருகிறேன்

  பதிலளிநீக்கு
 6. அன்பின் ஜி
  உங்களால் நானும் தரிசித்தேன் வாழ்க நலம்.

  பதிலளிநீக்கு
 7. எங்களுக்கும் தரிசனம் கிடைத்தது... நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 8. காலை வணக்கம்.

  ஆரூர் தரிசனம் - இனிய தகவலுடன் சிறப்பான படங்களும்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 9. பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் - திருத்தொண்டர் தொகைதான் பெரியபுராணம் எழுதுவதற்குத் தூண்டுகோலாக இருந்தது என்றும் படித்தேன் (உங்கள் இந்த இடுகைக்குப் பின்புதான்).

  இதைப்பற்றி நீங்கள் ஒரு இடுகை தக்க சமயத்தில் எழுதணும்.

  சிவனடியார் உழவாரத் திருக்கூட்டம் - இவர்களைப் போன்றவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நம் முன்னோர் பெரிய பெரிய கோவில்களைச் சமைத்து வைத்திருக்கின்றனர். அவைகள் இடைக்காலத்தில் அழிவுபடுத்தவும் பட்டன. இன்றைய தலைமுறைக்கு அத்தகைய பெரிய கோவில்களை நிர்மாணம் செய்யும் யோக்கியதை குறைவு. ஆனால் அவைகளைப் பாதுகாக்கலாமே. பெரிய பெரிய கோவில்கள் இருந்த இடங்களை விட்டு பலர் புலம் பெயர்ந்ததால், கோவில் பராமரிப்புகள், போஷகர்கள் மிகவும் குறைந்துவிட்டனர். கோவில் பராமரிப்பு சிஸ்டமே பாழாகிவிட்டது. இதனை முடிந்த மட்டும் மீண்டெடுக்கவேண்டும் என்று பாடுபடும் அடியார்கள், மிக மிக உயர்ந்தவர்கள். அவர்களைப் போற்றுவோம். அந்த அடியார்கள் இல்லையேல், தினமும் அந்த அந்த ஊர் கோவிலுக்குச் சென்று கடமையாற்றும் பத்தர்கள் இல்லையேல், நம் கலாச்சாரம் அடுத்த தலைமுறைக்குக் கடத்த இயலாது. சமயத்தின் தூண்களான நாயனார்களும் ஆழ்வார்களும் பாடிப் பரவிய பழமையான கோவில்கள் தலைமுறை தலைமுறையாகப் பேணப்படவேண்டும்.

  பதிலளிநீக்கு
 10. ஆடிச் சுவாதியையும் கொண்டாடுவதுண்டோ? நாங்கள் ஆடிப்பிறப்பைத்தான் மெயினாக கொண்டாடுவோம், பின்பு ஆடி அமாவாசை.

  பதிலளிநீக்கு
 11. மிக அழகிய படங்கள்...

  பதிலளிநீக்கு
 12. ஆடி ஸ்வாதி கூடக் கொண்டாடப் படுகிறது என்பது புதிய தகவல். தேவாரம் படங்கள் எல்லாம் கூடிய பதிவு அருமை...

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு