நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், செப்டம்பர் 11, 2017

நேசம் மறக்கவில்லை


ஆசை முகம் மறந்து போச்சே - இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?..
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ!..

கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ணன் அழகு முழுதில்லை..
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்!..


ஓய்வும் ஒழிதலும் இலாமல் - அவன்
உறவை நினைத்திருக்கும் உள்ளம்
வாயும் உரைப்பதுண்டு கண்டாய் - அந்த
மாயன் புகழினை எப்போதும்!..

கண்ணன் புரிந்து விட்ட பாவம் - உயிர்க்
கண்ணனுரு மறக்கலாச்சு
பெண்களில் இனத்திலிது போல - ஒரு
பேதையை முன்பு கண்டதுண்டோ!...


தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்து விட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வைய முழுதும் இல்லை தோழி..

கண்ணன் முகமறந்து போனால் - இந்தக்
கண்களிருந்து பயனுண்டோ?..
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி!..
* * * 

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திருநாடு!..
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க..
நன்மை வந்தெய்துக.. தீதெலாம் நலிக!..
***

இன்று மகாகவியின் நினைவு நாள்..

இருள் சூழ்ந்திடும் வேளையில்
பாரதியின் வார்த்தைகளே கைவிளக்கு!..

பாரதி வாழ்க.. பாரதி வாழ்க!..

ஓம் சக்தி ஓம்!..
* * * 

9 கருத்துகள்:

 1. அன்பின் ஜி
  மகாகவியின் நினைவுநாளைக் குறித்த பகிர்வு நன்று

  வாழ்க பாரதியின் புகழ்!
  இவ்வையகம் உள்ளவரை...

  பதிலளிநீக்கு
 2. மகாகவியின் நினைவுநாளில் தங்களது பதிவு மிக மிக அருமை!

  பாரதியின் புகழ் ஓங்கட்டும்!!

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
 3. இதே பாடல் வரிகளைப் பாடும் போது வந்த பாரதியிடம் நான் உரையாடியது பற்றி எழுதி இருந்தேன் http://gmbat1649.blogspot.com/2014/09/blog-post_10.html

  பதிலளிநீக்கு
 4. மகாகவியின் நினைவு நாளில் அருமையான பாடல் பகிர்வு.

  பதிலளிநீக்கு
 5. ​பாரதியை நினைவு கூர்ந்த விதம் அருமை.

  பதிலளிநீக்கு
 6. மகாகவியின் நினைவு நாளில் சிறப்பான பாடல் பகிர்வு.

  பதிலளிநீக்கு
 7. அருமை...அருமை ...படங்களும்...பாடல்களும்....


  கவிக்கு எனது வணக்கங்களும்...

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..