நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, அக்டோபர் 29, 2016

நன்மை எங்கும் சூழ்க..

அன்பின் இனிய 
தீபாவளி நல்வாழ்த்துகள்!..
*** 


மகிழ்ச்சி.. மட்டற்ற மகிழ்ச்சி..

அந்த ஒன்றினை நாடியே அனைவரது பயணமும்..

பண்டிகை நாட்களில் - இருப்போரும் இல்லாதோரும்
எய்த நினைப்பது மகிழ்ச்சி ஒன்றினையே...

அப்போதெல்லாம் ஐப்பசி கார்த்திகை என்றாலே அடைமழைக் காலம் தான்!..

நாள் கணக்கில் சற்றும் இடைவிடாது மழை பெய்து கொண்டிருக்கும்...

இப்போது போல உடனடி தயாரிப்புகள் ஏதும் கிடையாது என்பதால் தீபாவளிக்கு பதினைந்து நாட்களுக்கு முன்னாலேயே பலகாரங்கள் செய்யத் தொடங்கி விடுவர்..

அக்கம்பக்கத்தில் ஒருவருக்கொருவர் ஒத்தாசை செய்வதும் உண்டு...

இருப்பினும் - அந்த நாட்களை இப்போது நினைக்கையில் மலைப்பாக இருக்கின்றது...

எத்தனை சிரமங்களுக்கிடையில் எங்களை - எங்கள் பெற்றோர்கள் மகிழ்வித்திருக்கின்றனர் - என்பதை நினைக்கும்போது -

நெஞ்சம் துடிக்கின்றது -
அவர்தமக்கு என்ன கைமாறு செய்யப்போகின்றோம்?.. என்று..

இந்த நாட்களில் - அந்த நாட்களைப் போலக் கூடியிருக்க முடியவில்லையே!.. - என்று எண்ணும்போது மனது தவிக்கின்றது..

எங்கள் பெற்றோர் - எங்களுக்கு எந்த குறையும் வைத்ததில்லை..

அவ்வண்ணமே - இந்த அளவில்,
நாங்களும் எங்கள் பிள்ளைகளுக்கு குறை ஏதும் வைக்கவில்லை..

அதுதான் மகிழ்ச்சி.. நிம்மதி!..

அந்த மகிழ்ச்சியும் நிம்மதியும் அனைவருக்கும் ஆகட்டும் என்று
நல்லநாள் தனில் வேண்டிக் கொள்கின்றேன்..


வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் 
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு 
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு!..
-: ஔவையார் :-


அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழின்மை பூண்டு
நங்குரு மரபிற் கெல்லாம் முதற்குரு நாதன் ஆகி
பங்கயந் துளவம் நாறும் வேத்திரப் படை பொறுத்த
செங்கை எம்பெருமான் நந்தி சீரடிக் கமலம் போற்றி!..
-: காஞ்சி புராணம் :-


அங்கையுள் அனலும் வைத்தார் அறுவகைச் சமயம் வைத்தார்
தங்கையில் வீணை வைத்தார் தம்மடி பரவ வைத்தார்
திங்களைக் கங்கையோடு திகழ்தரு சடையுள் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் மாமறைக் காடனாரே!..(4/33)  
-: அப்பர் பெருமான் :-


தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே!..  
-: அபிராமி பட்டர் :-


விழிக்குத் துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!.. 
-: அருணகிரியார் :-



மாரில் திருவன் வலனேந்து சக்கரத்தன்
பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி
காரில் திகழ்காயா வண்ணன் கதிர்முடிமேல்
தாரில் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோத்தும்பீ!.. (1683)
-: திருமங்கையாழ்வார் :- 


வேதமுதல்வன் விளங்கு புரிநூலன்
பாதம் பரவிப் பலரும் பணிந்தேத்தி
காதன்மை செய்யும் கண்ணபுரத்து எம்பெருமான்
தாது நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோத்தும்பீ!.. (1680)
-: திருமங்கையாழ்வார் :- 


நீரார்க் கடலும் நிலனும் முழுதுண்டு
ஏராலம் இளந்தளிர் மீதுதுயில் எழுந்தாய்
சீரார் திருவேங்கட மாமலை மேய
ஆரா அமுதே அடியேற்கு அருளாயே!.. (1040)
-: திருமங்கையாழ்வார் :- 
***

தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை 
என்று கூறும் வானிலை ஆய்வு மையத்தினர் - அடுத்த சில நாட்களுக்குள் வடகிழக்குப் பருவ மழை பெய்யக் கூடும் என்று அறிவித்துள்ளனர்..

மழை முகம் நோக்கிக் கிடக்கின்றாள் மண்மகள்..
மழையில்லையேல் வளமில்லை 
என்பது ஆன்றோர் வாக்கு..

வருகின்ற வடகிழக்குப் பருவ மழையினால் 
வளங்கள் நிறையட்டும்..


ஏர் பிடிக்கின்ற உழவர் முதற்கொண்டு
எல்லை காக்கின்ற வீரர் வரைக்கும்
எல்லாரும் எல்லா நலன்களையும்
பெற்று வாழ்ந்திட வாழ்த்துவோம்!.. 

நாடு வாழ வேண்டும்.. நன்மை எல்லாம் சூழ வேண்டும்..
தேசம் திகழ வேண்டும்.. தீமையெல்லாம் அகல வேண்டும்..


மங்கலகரமான இவ்வேளையில்
உடல் நலக்குறைவுற்றிருக்கும்
தமிழக முதல்வர் அவர்களும்



முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும்
பூரண நலம் பெற்று பல்லாண்டு பல்லாண்டு
வாழ்ந்திட இறையருள் வேண்டுவோம்....
***

மத்தாப்புகளும் வெடிகளும் தீபாவளியின் ஒரு அங்கமாகி விட்டன..

ஊடகங்களில் பலரும் பலவிதமாக கருத்துகளை உபதேசம் செய்து கொண்டிருக்கின்றனர்...

ஜல்லிக் கட்டுக்குத் தடை வாங்கியதைப் போல
தீபாவளி வெடிகளுக்கும் ஒட்டு மொத்தமாக தடை விதிக்க வேண்டும் என்றெல்லாம் எழுதிக் கொண்டிருக்கின்றனர்..

இயன்றவரைக்கும் நாமும் பாதுகாப்புடன் 
சுற்றுச்சூழலைக் காத்து - 
தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம்.. 

நாமும் மகிழ்வோம்..
பிறரையும் மகிழ்விப்போம்!..
***

கீழே உள்ள காணொளி
வெளிநாட்டில் நிகழ்ந்த வாணவேடிக்கை 


இனிய பாடலுடன்
தீபாவளிக் கொண்டாட்டம்..

திரைப்படம் -  மூன்று தெய்வங்கள்
பாடல் - கவியரசர்
இசை - மெல்லிசை மன்னர் 


தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்
வைரங்கள் போலே ஒளி விடட்டும்
சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்..
எல்லோரும் வாழும் நிலை வரட்டும்!..
-: கவியரசர் கண்ணதாசன் :-


அனைவருக்கும் 
அன்பின் இனிய 
தீபாவளி நல்வாழ்த்துகள்!..

வாழ்க நலம்..  
* * *  

12 கருத்துகள்:

  1. இனியதோர் பகிர்வு....

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களுக்கும் அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அன்பின் ஜி
    தீபாவளியைக் குறித்த நிறைவான விடயங்கள் நன்று
    காணொளி ஸூப்பர்
    தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. தங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களுக்கும் தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்..

      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அனைத்தும் அருமை.
    பாட்டுக்கள்,படங்கள் அதன் கீழ் நீங்கள் குறிப்பிட்டவை அனைத்தும் அருமை.
    தீபதிருநாளுக்கு நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களுக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. விழாநாட்களிலும் பண்டிகை நாட்களிலும் குடும்பத்தினர் கூடுவது இன்னும் சிறக்க வைக்கிறது தீபாவளி நல் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      உண்மைதான்.. உற்றர் உறவினர் முகங்கண்டால் மகிழ்ச்சி தான்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..