நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, அக்டோபர் 02, 2016

என்றும் நினைவில்..

வாழ்க நீ எம்மான்!..


இன்று காந்தி ஜயந்தி..

மகாத்மாவின் பொன் மொழிகளுள்
ஒரு சில நமது பதிவில் இடம் பெறுகின்றன.


தன்னம்பிக்கையும் அடக்கமும் ஒருவனிடம் 
இருக்குமானால் அவன் வாழ்வு தித்திக்கும் .


அன்பு எங்கே இருக்கின்றதோ - அங்கே கடவுள் இருக்கின்றார்.
அன்பு எப்போதும் எதையும் கேட்காது. கொடுக்கத்தான் செய்யும். 
அன்பு எப்போதும் வன்மம் கொள்ளாது பழி வாங்காது.


நான் பெறுவதற்கு விரும்பும் ஒரே நல்லொழுக்கம் 
உண்மையும் அஹிம்சையும் தான்.
அன்பு எப்போதும் கேட்காது, கொடுக்கத்தான் செய்யும். அன்பு எப்போதும் பாதிப்படைவது, எப்போதும் வன்மம் கொள்ளாது, பழிவாங்காது.
         அன்பு எங்கிருக்கிறதோ அங்கே கடவுள் இருக்கிறார். - See more at: http://gandhiworld.in/tamil/quotessan.html#sthash.Us4mFTgr.dpuf
அன்பு எப்போதும் கேட்காது, கொடுக்கத்தான் செய்யும். அன்பு எப்போதும் பாதிப்படைவது, எப்போதும் வன்மம் கொள்ளாது, பழிவாங்காது.
         அன்பு எங்கிருக்கிறதோ அங்கே கடவுள் இருக்கிறார். - See more at: http://gandhiworld.in/tamil/quotessan.html#sthash.Us4mFTgr.dpuf
அன்பு எப்போதும் கேட்காது, கொடுக்கத்தான் செய்யும். அன்பு எப்போதும் பாதிப்படைவது, எப்போதும் வன்மம் கொள்ளாது, பழிவாங்காது.
         அன்பு எங்கிருக்கிறதோ அங்கே கடவுள் இருக்கிறார். - See more at: http://gandhiworld.in/tamil/quotessan.html#sthash.Us4mFTgr.dpuf

காந்திஜி - நேதாஜி - வல்லபபாய் படேல்
எளிமையான வாழ்க்கை என்பதிலிருந்து
மாறுகின்ற மனிதனுக்கு
தேவைகள் அதிகரித்து விடும்..


நல்ல மனிதன் என்பவன் 
வாழும் அனைத்திற்கும் நண்பன் ஆவான்..


இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் 
மனநிலைதான் மகிழ்ச்சியை அளிக்கும்..
***

மாமனிதர் 
லால்பகதூர் சாஸ்திரி அவர்களின்
பிறந்த நாள் - இன்று..

(02.10.1904 - 11.01.1966)
மிகவும் ஏழ்மைப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர்..
சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர்..

ஓடக்காரனுக்குக் கொடுக்க காசில்லாததால் 
கங்கையை நீந்திக் கடக்கும் அளவுக்கு 
வாழ்வில் வறுமையைச் சந்தித்தவர்..

தாய் மாமன் அளித்த ஆதரவினால்
காசி வித்யாசாலாவில் கல்வி கற்று
சாஸ்திரி எனும் பட்டம் பெற்றவர்..

மகாத்மாவின் உரைகளினால் கவரப்பட்டு
சுதந்திர வேள்வியில் தன்னை இணைத்துக் கொண்டவர்..

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 
ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில்
1951ல் இரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.. 

1956 நவம்பர் 23 
அரியலூருக்கு அருகில் நிகழ்ந்த 

ரயில் விபத்துக்குத் தார்மீக பொறுப்பேற்று 
பதவியை விட்டு விலகிய வீரமகன்!..

படிக்காத மேதையும் பண்பின் சிகரமும்
நேருவின் மறைவுக்குப் பின் -
லால்பகதூர் சாஸ்திரி அவர்களை
நாட்டின் பிரதமராக
அடையாளம் காட்டியவர்
ஏழைப்பங்காளன் காமராஜர்..

பசுமைப் புரட்சியின் மூலம் இந்தியாவில் 
உணவு உற்பத்திக்கு வித்திட்டவர்.


கட்ச் தீபகற்பத்தில் உரிமை கோரி, 
ஆகஸ்ட் - 1965ல் பாகிஸ்தான் 
அப்பகுதியில்  படைகளுடன் ஊடுருவியது..

1965 செப்டம்பரில் இந்தியா - பாகிஸ்தான் போர் மூண்டது..

பாகிஸ்தானின் லாகூர் நகரை
நமது வீரர்கள் கைப்பற்றினர்.. 

அந்த நேரத்தில் -  
இந்தியா - தனது பகுதியில் நிறுத்தியுள்ள படைகளை 
விலக்கிக் கொள்ளாவிட்டால் தனது சீற்றத்திற்கு ஆளாக நேரிடும்!.. 
- என்று, சீனா வக்ரத்துடன் கொக்கரித்தது. 

சீனாவின் கூச்சலுக்கு 
அஞ்சாமல் போரை நடத்தினார்.

அப்போது அவர் எழுப்பிய முழக்கமே 
''ஜெய் ஜவான்!.. ஜெய் கிசான்!..''

23 செப்டம்பர் 1965 அன்று
ஐ.நா.வின் தலையீட்டினால்
போர் நிறுத்தப்பட்டது..

1966 ஜனவரி இரண்டாம் நாள்
அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட என்று 
ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகருக்குப் பயணமானார்..

பல சுற்று பேச்சு வார்த்தைகளுக்குப் பின்
1966 ஜனவரி 10 அன்று
இந்தியாவிற்கும் - பாகிஸ்தானிற்கும்
அமைதி உடன்படிக்கை கையெழுத்தானது

அன்ற் முன்னிரவில் நடந்த விருந்து உபசரிப்பில்
கலந்து கொண்டார்..

நள்ளிரவில் ஏற்பட்ட மூச்சுத் திணறலால்
நாட்டை நன்முறையில் வழிநடத்திய வீரமகன்
மண்ணுலகை விட்டுப் பிரிந்தார்.. 


நாட்டின் பிரதமராகப் பதவி வகித்து ரஷ்யாவில் 
அகால மரணம் அடைந்த லால்பகதூர் சாஸ்திரி அவர்களுக்கு 
ஒரு வீடு கூட  சொந்தமாகக் கிடையாது. 


காலம் முழுதும் வாடகை வீட்டிலேயே
வாழ்ந்து முடித்தவர்..

தன் வாரிசுகளுக்கு விட்டுச் சென்றதெல்லாம்
தவணை முறையில் வாங்கிய கார் ஒன்றின்  
கடன் தொகை மட்டுமே!..
***

தியாக தீபம்
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின்
நினைவு நாள் இன்று.. 

15 ஜூலை1903 .. 02 அக்டோபர் 1975

சுதந்திரம் என்றால் பயமில்லாமல் வாழ்வதுதான்..
பயமில்லாமல் வாழ்வதற்கு
நியாயமாக நடந்து கொள்ளவேண்டும்..நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாப்பதும்
அதற்காகப் பாடுபடுவதும் தான்
நமது தலையாய கடமை..அறியாமையும் வறுமையும் போனாலன்றி
நாடு முன்னேறியதாகச் சொல்லமுடியாது..


தமிழகத்தை முன்னேற்றிய சிறப்புறு முதல்வர்..
கல்விக்கண் கொடுத்த கர்மவீரர்..

ஏழையாய்ப் பிறந்து ஏழையாய் வாழ்ந்து
ஏழையாகவே போய்ச்சேர்ந்தவர்..
* * * 

ஏழையாய்ப் பிறந்து ஏழையாய் வாழ்ந்து - வளர்ந்து
நாட்டின் மிகப் பெரிய பொறுப்புகளில் அமர்ந்து
அரும்பணியாற்றி - இறுதி வரைக்கும் எளியவராகவே
வாழ்ந்து புகழுடம்பு எய்திய புண்ணியர்கள்!..


பன்னிரண்டாண்டில் ஒருமுறை மலரும் 
குறிஞ்சி மலர்களைப் போலே
தன்னலமில்லா தலைவர்கள் 
பிறப்பார் ஆயிரத்தில் ஒருநாளே!..
-: கவியரசர் :-

தாய்நாட்டிற்காகவே வாழ்ந்து முடிந்த
தூயவர்களால் பெருமையுற்றது - இந்நாடு.  

இத்தகைய உத்தமர்களால் மீண்டும் 
பெருமையுற வேண்டும் - தாய்நாடு!..

ஜய் ஹிந்த்!..
***
அனைவரும் செயலாற்ற வேண்டும். எதிர்காலத்தை அறிவது நம் நோக்கமல்ல. நிகழ்காலத்தில் நாம் எப்படிச் செயலாற்றுகிறோம் என்பதுதான் முக்கியம். - See more at: http://gandhiworld.in/tamil/action_ta.php#sthash.J8IAM8Dc.dpuf

11 கருத்துகள்:

 1. அன்பின் ஜி அறிய பல விடயங்களுடன் மூன்று அரும் பெருந்தலைவரகளைப் பற்றிய தகவல் களஞ்சியம் தந்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 2. மூன்று பெரும் தலைவர்களைப் பற்றிய முத்தான தகவல்களுடன்,காந்திஜியின் பொன்மொழிகளுடன் தங்களின் பதிவு அருமை!!!

  பதிலளிநீக்கு
 3. மூன்று தலைவர்கள் பற்றிய சிறப்பான தகவல்கள், புகழ்பெற்ற புகைப்படங்கள் எனச் சிறப்பான பகிர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 4. மூன்று தலைவர்களைப் பற்றித் தெரிந்த மற்றும் தெரியாத தகவல்கள். பொன்மொழிகளுடன் தேர்ந்தெடுத்த படங்களும் பதிவுக்குச் சிறப்பு சேர்க்கின்றன. நன்றி துரை சார்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. அரும்பெரும் தலைவர்களைப் பற்றிய பதிவிற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 6. மூன்று தலைவர்களைப் பற்றி நல்லதொரு பகிர்வு ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..