நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மார்ச் 06, 2016

நெஞ்சார்ந்த அஞ்சலி

ஐந்து வருடங்களில் 1555 பதிவுகள்..


2011 ஜனவரி இருபத்தொன்றாம் நாளில் இருந்து
2016 ஜனவரி இருபத்தெட்டாம் நாள் வரை...

சற்றும் சளைக்காமல்,

வாசிப்பது என்பது சுவாசிப்பது..
வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள்!..

- என்ற முத்திரைச் செய்தியுடன் -

தனது தளத்தில் ஆன்மீகத் தகவல்களை வழங்கி வந்த
திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் 
இறைவனடித் தாமரையின் கீழ் ஐக்கியமாகி விட்டார்கள்..

திரு துளசிதரன் அவர்களது தளத்தின் வாயிலாக தகவல் அறிந்து -
மனம் அதிர்ந்தது..

காயத்ரி மந்திரத்துடன் தனது பதிவுலகப் பயணத்தைத் தொடங்கியவர் -
தனது மகனின் திருமணச் செய்தியுடன் பணியை நிறைவு செய்திருக்கின்றார்..

உடல் நலம் குன்றியிருக்கின்றார் - என்று அறிந்திருந்த போதிலும்
நலம் பெற்று வந்து மீண்டும் நல்ல செய்திகளைப் பதிவு செய்வார் - என்றே நம்பியிருந்தோம்..

திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் -
9/2/2016 அன்று வைகுந்த பிராப்தி அடைந்தார் - என,
அவரது தளத்தில் - அவரது மகளும் மகன்களும் பதிவு செய்துள்ளனர்..

திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள்
ஆன்மீக விஷயங்களை அழகு தமிழில் தருவதில் வல்லவர்.. 
அவருக்கு நிகர் அவரே..

திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் ஆத்மா
இறைநிழலில் சாந்தியடையட்டும்.

திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு 
நெஞ்சார்ந்த அஞ்சலி..

திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுடைய பிரிவினைத் தாங்கிக் கொள்ளும் வல்லமையை -

அவர் தம் குடும்பத்தினருக்கு - இறைவன் அருளட்டும்..

எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்..

நல்ல செய்திகளை பிறருக்குச் சொல்வதும் - 
முப்பத்திரண்டு அறங்களுள் ஒன்று..

திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் 
என்றென்றும் நம் நினைவில் இருப்பார்..

ஓம் சாந்தி.. சாந்தி.. சாந்தி!..
* * *

14 கருத்துகள்:

 1. எனது அஞ்சலியும்....

  அவருடைய ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகளும்.

  பதிலளிநீக்கு
 2. வைக்கோ சார் தளத்தில் அம்மையார் குறித்து நிறைய வாசித்துள்ளேன். ஆழ்ந்த அஞ்சலி.

  பதிலளிநீக்கு
 3. ஆன்மீகப் பதிவர் திருமதி இராஜ ராஜேஸ்வரி அவர்களது ஆன்மா அமைதி அடையட்டும். உங்களோடு நானும் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 4. திருமதி. ராஜராஜேஸ்வரி அம்மாவுக்கு எமது அஞ்சலிகளும்.... அவரது குடும்பத்தினருக்கு இரங்கல்களும்....

  பதிலளிநீக்கு
 5. ராஜராஜேஸ்வரி அம்மா அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும். குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  பதிலளிநீக்கு
 6. எனது வலைபதிவுகளுக்கு தவறாமல் வருகை தருவார் எல்லார் வலைபக்கமும் அவரது தாமரை மலர் ப்ரொபைல் தவறாது இடம்பெறும் ..அக்கா அவர்களின் ஆன்ம சாந்திக்கு பிரார்த்திப்போம்

  பதிலளிநீக்கு
 7. எங்கள் மௌன அஞ்சலிகள்! அருமையான அன்பான சகோதரி அவர்களின் மறைவு நம்ம் எல்லோருக்குமே இழப்புதான். இதமாக வருடல் போன்ற பதிவுகள். ஆன்மீகப்பதிவுகள்! அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் நம் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  பதிலளிநீக்கு
 8. நல்ல எழுத்துக்கு சொந்தக்காரர். உங்களோடு நானும் இணைகிறேன். ஆழ்ந்த இரங்ல்கள்.

  பதிலளிநீக்கு
 9. ஐந்து வருடங்களில் இத்தனை பதிவுகள் தந்து எல்லார் மனங்களிலும் இடம் பிடித்த அம்மையாரின் மறைவு வேதனையளிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 10. இறைவா தமிழ பதிவுலகத்தை கலங்க வைத்தாயோ...

  பதிலளிநீக்கு
 11. என் ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் சமர்ப்பிக்கிறேன். அன்னார் ஆன்மா சாந்தியடைவதாக.

  பதிலளிநீக்கு