நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மார்ச் 10, 2016

மழையோ மழை

வளைகுடாவின் பாலை நிலத்தில் ஆச்சர்யமான நிகழ்வு..

என்றுமே இல்லாத அளவுக்கு -
நேற்று மதியம் பல பகுதிகளிலும் முதல் கடும் மழை பெய்கின்றது..


ஆங்காங்கே மழை நீர் சாலைகளில் வழிந்தோடுகின்றது..

மழையினால் சற்றே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது..

பலத்த காற்றுடன் (130 கி.மீ., ) - பெய்த மழையின் அளவு 110 மி.மீ.,

இன்றும் கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் மழையினால் பாதிக்கப்பட்டு உள்ளது...

சில பகுதியில் மழை நீர் வெள்ளமாக ஓடுவதாக சொல்கின்றனர்..

நாட்டிலுள்ள கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..

அத்துடன், காரோட்டிகள் கவனமாக இயங்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது..



பாலைவனம் எப்போதுமே மழை மறைவுப் பிரதேசம் தான்..

எனினும் - மிகவும் குறைவான அளவில் மழை பெய்வது வழக்கம்..

மூன்றாண்டுகளுக்கு முன்னர் இங்கேயும் இப்படித்தான் சில நாட்களுக்கு கடும் மழை பெய்து ஓய்ந்தது..

இந்த மழையினால் - இந்நாட்டிற்கு பெரிதாக பயன் ஏதும் விளையப் போவதில்லை..

ஆனாலும், பாலை வெளியில் உள்ள நீர்த் தடாகங்கள் ஓரளவுக்கு நிறையக் கூடும்..

நல்லவேளை..

அங்கே - செம்பரம்பாக்கம் போல் ஏரிகள் எவையும் கிடையாது..

அத்துடன் - கழிவுகள் அடைத்துக் கொண்ட சாக்கடைகளும் கிடையாது..

அந்த வகையில் இந்த நாடு கொடுத்து வைத்திருக்கின்றது..

ஆங்குள்ள நிர்வாகம் - திறமையான வேலையாட்களுடன் சிக்கலான நிலைமையை சீரமைத்துக் கொண்டிருக்கின்றனர்..

திறமையான வேலையாட்களுள் பாதிக்கு மேற்பட்டோர் - நம்மவர்கள்..

அதிலும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது..


இத்துடன் -
மேலதிக செய்திகளை -

கரும்புத் தோட்டத்தில் கவியரங்கம் நடத்தும்
பாலைவனப் புயல் கில்லர் ஜி அவர்கள்

 வழங்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்..

பாலை நிலமும் குளிரட்டும்..
பல்வகை வளமும் நிறையட்டும்..

வாழ்க நலம்  
***

22 கருத்துகள்:

  1. ஹாஹாஹா எழுதிக் கொண்டே...... இருக்கின்றேன் ஜி

    நம்மூர் ரமணன் சொன்னதைப் போல் இங்கு அபுதாபி ரகுமான் சொன்னது நடக்கவில்லை அபுதாபியில் இன்று வெயில்தான் பயப்பட வேண்டாம் நான் எழுதிய பதிவு சீரியசாக இல்லை சிரிப்பாகத்தான் இருககின்றது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி.
      நல்லது. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      நீக்கு
  2. நாங்கள் 2008-ல் துபாய் சென்றிருந்த போது மழை பெய்து பார்த்திருக்கிறேன் நாங்கள் இருந்த இடத்தில் மழை விட்டும் பல மணி நேரம் நீர் தேங்கி இருந்ததாக நினைவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      அரபிகளுக்கு மழை பெய்வது பிடிக்காது..
      மழை நீர் மேலாண்மையும் அவ்வளவாக இல்லை..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. குவைத்தில் ஒரு சென்னையோ
    கவனமாக இருங்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  4. சென்னை காத்து அல்ல அல்ல மழை அங்கே வந்துடுத்து போல...

    பதிலளிநீக்கு
  5. // செம்பரம்பாக்கம் போல் ஏரிகள் எவையும் கிடையாது // ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்புடையீர்..

      பாலை சோலை ஆனாலும் இப்போதைக்கு பலன் ஏதும் இல்லை..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பதில்கள்
    1. அன்பின் அண்ணா..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  8. குவைத்தில் மழை பெய்யும் காட்சியை அழகாக படமெடுத்து விளக்கமும் அருமையாக சொல்லி இருக்கீங்க சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      இந்த மழை அபுதாபியில்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  9. ஆம் நான் தொலைக்காட்சியில் பார்த்தவுடன் நினைத்தேன்,, ,,
    அது சரி நாங்களும் எப்ப தான் தண்ணீர் பார்ப்பது,, நான் தண்ணீயத் தான் சொன்னேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  10. மழை, காற்று, மரங்கள் வேரோடு சாய்தல், சன்னல் கண்ணாடிகள் விழுந்து உடைதல் என வித்தியாசமான மழை அனுபவம்...

    நேற்றும் மழை தொடரும் என வானிலை எச்சரிக்கை (ரமணின் சகோதரர் போல) வெயில் பிண்ணி எடுத்துருச்சு...

    இன்று அதிகாலை பக்கத்து கட்டிடம் தெரியாத அளவுக்கு பனி மூட்டம்.... இப்ப மண்டையைப் பிளக்கும் வெயில்...

    நாளை வரை மழை இருக்காம்... :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கும் மேலதிக செய்திகளுக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. இது எல்னினோ வின் பாதிப்பாக இருக்குமோ..

    பாலைவனச் சோலை என்பது பாலைவனப் புயல் சோலையாகியது போலும்....அதிசயமாக இருந்தது. பார்க்கவும் தங்கள் தகவல்களைப் படிக்கவும்.

    தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா. காணொளியும் கண்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தாங்கள் கூறுவது போலவும் இருக்கலாம்..
      ஆனாலும் அரபிகளுக்கு சற்று அதிர்ச்சியே..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  12. புவி வெப்பமயமாவதின் பிரச்சினையால் பாலையிலும் கடும் மழை பெய்கின்றது. பருவகாலமும் மாறுகின்றது. இன்னும் என்னென்ன பிரச்சினைகள் வருமோ? கொட்டிய மழையில் நீங்கள் எடுத்துப்பகிர்ந்துள்ள படங்களை வெகுவாக ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..