நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூலை 27, 2013

கற்பது உன் நாமம்

ஆனந்தமாக இருக்கின்றது. அதே சமயம்  - 

அச்சமாகவும் இருக்கின்றது.

ஏன்?... 


நமது வலைத்தளத்தை நல்லோர் நயந்து உரைத்து முன் வைத்திருக்கின்றனர்..

அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்!..வலைச்சரம்   எனும் தளத்தில்,  அன்புக்குரிய அம்பாளடியாள் அவர்களால் - பல்சுவை விருந்தளிக்கும் முத்துக்களின் அணிவகுப்பு - என்ற தலைப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது ஆனந்தம்!.. - பகிர்ந்து கொள்வது, தங்களுடன்!..


அங்கே  - தஞ்சையம்பதிக்கு வழங்கப்பட்ட அணிந்துரை - 

தஞ்சையம்பதி இத் தளத்தினூடாக பக்தி மணம் கமழும் படைப்புகளை அள்ளி அள்ளி வழங்குகின்றார். இவரது எழுத்துக்களைப் பார்க்கும் போது தோழி இராஜராஜேஸ்வரி அவர்களுடைய வலைத் தளம் தான் நினைவிற்கு வருகின்றது. அத்தனை அழகாக எழுதுவதிலும் படங்களைப் பகிர்வதிலும் இவர் வல்லவராகத் தோன்றுகின்றார். மனம் கவர்ந்த பதிவுகள் இங்கு ஏராளம் உள்ளது. அதிலிருந்து ஒரு சிலவற்றை இங்கே பகிரலாம் என நினைக்கின்றேன் .

ஆடி வெள்ளி தொடர்

அம்மன் தரிசனம்

திருக்கடவூர் 

மேற்குறித்த அணிந்துரைக்கு - நமது வலைத்தளத்தின் அன்புக்குரிய வாசகர்களாகிய தாங்கள் தான் காரணம்!..

அதிலும், தோழி இராஜராஜேஸ்வரி அவர்களின் வலைத்தளத்தினை நினைவு கூர்ந்தது  - என் நெஞ்சில் நிற்கின்றது!..

அறிமுகத்திற்குப் பின் - அங்கே, நல்லோர் பலர் வரவேற்று வாழ்த்தியுள்ளனர்.

அனைவருக்கும்  - என்னுடைய பணிவான நன்றிகள் என்றும் உரியன!..


இனி - 

அச்சம்!.. - இது என்னுடன் மட்டும்!..

எல்லோருடைய அன்பின் துணை கொண்டு, நமது வலைத்தளத்தினை வரும் நாட்களில் சீருடனும் சிறப்புடனும் நடத்திட வேண்டும்!..

மாகவிஞன்  காளிதாசனின் வரலாறு  - மகாகவி காளிதாஸ் என -  நடிகர் திலகம் அவர்கள் நடிப்பில் திரைக் காவியமாக வெளியான போது - அதில் கவியரசர் தன் பாட்டுத் திறத்தாலே பாலித்திருப்பார்..

அவற்றில்  - இந்த சந்தர்ப்பத்திற்காக - சில வரிகள்!..

குழந்தையின் கோடுகள் ஓவியமா!..

நான்  - இன்னும் தவழ்ந்து கொண்டிருக்கும் - குழந்தை தான்!.. 

பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன்!..

இப்போதும் - கற்றுக் கொண்டிருக்கின்றேன்!..

என்னை,  நானே - புதிதாய் பெற்றுக் கொண்டிருக்கின்றேன்!..

இந்நிலையில் - வழித்துணையாய் வரும் தமிழையும் ,  

என்னை உயர்த்திய தமிழை - எனக்கு உணர்த்திய ஆசிரியர் அனைவரையும்,

தளராது எனைத் தாங்கிய என் தந்தையையும்,  

தன்னோடு எனைத் தாங்கிய என் தாயையும்,

நினைவு கூர்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்!..

இவ்வளவு தானா?

இன்னும் ஒரு தாய் இருக்கின்றனளே!.. அவளை நினைவு கூரவேண்டாமா!..


கண்ணியது உன்புகழ்  கற்பது உன்நாமம் கசிந்து பத்தி
பண்ணியது உன்னிரு பாதாம் புயத்தில் பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான்முன் செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே!..

எல்லாரையும் வழி நடத்தும் சிவம் 
என்னையும் வழி நடத்துமாக!..

6 கருத்துகள்:

 1. உங்களின் தன்னடகத்திற்கும் வாழ்த்துக்கள் ஐயா...

  தொடருங்கள் சிறப்பு பதிவுகளை...

  பதிலளிநீக்கு
 2. நன்றி சொல்ல உமக்கு .. வார்த்தை இல்லை எனக்கு!...

  பதிலளிநீக்கு
 3. நன்றி சொல்ல உமக்கு.. வார்த்தை இல்லை எனக்கு!..

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்!.. ஸ்ரீதேவி சிவமோஹி அவர்களே!.. தங்கள் வரவு நல்வரவாகுக!...

  பதிலளிநீக்கு
 5. உங்களின் வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் ஐயா !!!

  பதிலளிநீக்கு
 6. தங்களின் வருகைக்கு நன்றி!.. இதற்கு தங்களின் அன்பும் ஆதரவும் தான் காரணம்!..

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..