நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூன் 05, 2026

தமிழமுது

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

வைகாசி
 வெள்ளிக்கிழமை

உறவினர் இல்லத்தில் அசாதாரணமான சூழ்நிலை.. 
ஒரு வாரத்திற்கு மேல் தங்கும்படியாகி விட்டது...

இனி இயன்ற வரை பதிவுகள்..

நலம் விசாரித்த் அனைவருக்கும்
 நன்றி...
**
இனிய எளிய தேவரப் பாடல்களை
அவ்வப்போது சிந்திப்போம்..


ஞான சம்பந்தர்
தேவாரம்

தலம் 
திருஆலவாய்
(மதுரை)

மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை
  வரிவளைக் கைமட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
  பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநாயகன் நால்
  வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த
  ஆலவாய் ஆவதும் இதுவே.. 3/120/1

 சோழ மன்னனின் புதல்வியாகிய மங்கையர்க்கரசி
 வரிகளையுடைய வளையல்களை அணிந்தவர். பெண்மைக்குரிய   பண்புகள் நிறைந்த பெருமையுடையவர்.  
தாமரையில் வீற்றிருக்கும் திருமகளுக்கு ஒப்பானவர். பாண்டியனின் பட்டத்தரசி. 
நாள்தோறும்
திருத்தொண்டு செய்து  சிவபெருமானை வழிபடும் தன்மையுடையவர்.  

ஓங்கி எரியும் தணலைப் போன்று சிவந்த வண்ணமுடைய சிவபெருமான் உயிர்கட்கெல்லாம் தலைவர். நான்கு வேதங்களையும், அவற்றின் பொருள்களையும் அருளிச் செய்தவர். 

அத்தகைய பெருமான்  தேவி அங்கயற் கண்ணி உடன் வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே...

 நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் நம சிவாய
***

8 கருத்துகள்:

  1. அக்காலத்தைய பாடல்கள் பாணியில்தான் இக்காலத்து தினத்தந்தி செய்திகள் அமைகின்றன போலும்.  சும்மா இன்று படிக்கும்போது தோன்றியது.

    பதிலளிநீக்கு
  2. ஓம் நமச் சிவாய..... நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  3. வெள்ளி நாளில் தேவாரம் பாடி ஆலவாயான் திருப் பாதம் பணிகின்றோம்.

    ஓம் சிவாய நமக.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..