நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி
வெள்ளிக்கிழமை
திருப்புகழ்
திருத்தணிகை
தனத்த தத்ததனத் ...
தனதான
தனத்த தத்ததனத் ... தனதான
நினைத்த தெத்தனையிற் ... றவறாமல்
நிலைத்த புத்திதனைப் ... பிரியாமற்
கனத்த தத்துவமுற் ... றழியாமற்
கதித்த நித்தியசித் ... தருள்வாயே
மனித்தர் பத்தர்தமக் ... கெளியோனே
மதித்த முத்தமிழிற் ... பெரியோனே
செனித்த புத்திரரிற் ... சிறியோனே
திருத்த ணிப்பதியிற் ... பெருமாளே...
-: அருணகிரிநாதர் :-
நன்றி முருகன் அடியார்
நன்றி கௌமாரம்
முருகா முருகா
முருகா முருகா
***

திருத்தணிகை வாழும் முருகா.. உன்னைக் காணக காண வருவேன்...என்னைக் காத்துக் காத்து அருள்வாய்...
பதிலளிநீக்குமுருகா சரணம்
நீக்குமகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்