நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
வெள்ளிக்கிழமை
சுருதி வானவனாம் திருநெடு மாலாம்
சுந்தர விசும்பின் இந்திரனாம்
பருதி வானவனாம் படர்சடை முக்கட்
பகவனாம் அகஉயிர்க்கு அமுதாம்
எருது வாகனனாம் எயில்கள்மூன் றெரித்த
ஏறு சேவகனுமாம் பின்னும்
கருதுவார் கருதும் உருவமாம் கங்கை
கொண்டசோ ழேச்சரத்தானே..
-: சித்தர் கருவூரார் :-
வேதங்களை ஓதும் பிரமனாகவும் நீள்வடிவு எடுத்த திருமாலாகவும் அழகிய வானத்தின் தலைவனாகிய இந்திரனாகவும் சூரிய தேவனாகவும் விரிந்து படர்ந்த சடைமுடியுடன் மூன்று கண்களை உடையவனாகவும் உலகத்தில் உயிர்களைத் தழைப்பிக்கும் அமுதமாகவும் காளை வாகனனாகவும், மும்மதில்களையும் அழித்த
மாவீரனாகவும், இவற்றைத் தவிர வேண்டுவார்க்கு வேண்டும் வடிவத்தில் வரம் அளிப்பவனாகவும் கங்கை கொண்ட சோழேச்சரத்தில் வீற்றிருக்கின்ற ஈசனே விளங்குகின்றான்..
நன்றி
பன்னிரு திருமுறை
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
சோழீச்சர நாதனை வணங்கினோம்.
பதிலளிநீக்குஓம் சிவாய நமக.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
நீக்குமகிழ்ச்சி
நன்றியம்மா
நமசிவாய...... நல்லதே நடக்கட்டும்.....
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
நீக்குமகிழ்ச்சி
நன்றி வெங்கட்