நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
வியாழக்கிழமை
தமிழ் வாழ்வியலின் படி வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் புனிதத் தலம் கங்கை கொண்ட சோழபுரம்..
அன்பின் ஸ்ரீராம் அவர்களது கவனத்திற்கு
சிதைவுகளில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட திருமேனிகள் வடக்குப் பகுதியில் வெட்ட வெளியில் வரிசைப்படுத்தப் பட்டுள்ளன..
இந்த அளவில்
ஆலயத்தில் இனிதே தரிசனம் நிறைவுற்றது..
கங்கை கொண்ட சோழபுரத்தைப் பற்றி நன்கறிவோம்..
அதனால் தான் மேல் விவரங்கள் அதிகம் சொல்லவில்லை..
இருப்பினும்
தட்டச்சு செய்வதில் பிரச்னை.. இந்தப் பதிவிற்கே இரு வாரங்கள் ஆகி இருக்கின்றன..
அங்கைகொண்டு அமரர் மலர்மழை பொழிய
அடிச்சிலம் பலம்பவந் தொருநாள்
உங்கைகொண்டு அடியேன் சென்னிவைத்து என்னை
உய்யக்கொண்டு அருளினை மருங்கிற்
கொங்கைகொண்டு அனுங்குங் கொடியிடை காணிற்
கொடியள்என்று அவிர்சடைமுடிமேற்
கங்கைகொண்டு இருந்த கடவுளே கங்கை
கொண்ட சோழேச்சரத் தானே..
-: சித்தர் கருவூரார் :-
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
நான் 2014, 2018 ஆகிய வருடங்களில் அங்கு சென்றேன். அப்பாவும் இவை வெளியேயேதான் பாவம். இன்னும் இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை போல...!
பதிலளிநீக்குகைவிரல்கள், கண்கள் ஒத்துழைக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நீங்கள் இன்னும் கண் மருத்துவரைச் சென்று பார்க்கவில்லை போல...
பதிலளிநீக்குராஜேந்திரன் காலத்தில் இந்த கோவிலும், அதன் சுற்றுப்புறங்களும் எப்படி இருந்திருக்கும், மக்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று நினைத்துப் பார்க்கிறேன்.
பதிலளிநீக்கு