நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
திங்கட்கிழமை
எதிர்பாராத விதமாக கடந்த ஞாயிறன்று ஸ்ரீ கங்கை கொண்ட சோழபுரம் திருக்கோயிலுக்குப் பயணம்..
பாரதப் பிரதமர் அவர்களின் வருகைக்குப் பிறகு அதிகப்படியான சுற்றுலா பயணிகள்..
தஞ்சைப் பெரிய கோயிலில் இல்லாத புதுமையாய் மூலஸ்தானத்திற்கு அருகில் தனித்து விளங்குகின்ற சோமாஸ்கந்த மண்டபம்..
தஞ்சை கோயிலுக்கு
இணையாக திரு மூலத்தான மண்டபத்தில் சிற்பத் தொகுப்புகள்.. ஆனால் கண்டு மகிழ்வதற்கு போதுமான வெளிச்சமில்லை..
திருக் கோட்டத்திலும் சிற்பத் தொகுப்புகள்...
விடுமுறை நாளானதால் அன்றைக்கு பெருந்திரளான மக்கள்..
சிற்பங்களின் அழகினைக் காண்பதற்கு ஏதுவான சூழ்நிலை அமையாதது நமது துரதிர்ஷ்டம்..
சரஸ்வதி, சண்டேச அனுக்கிரக மூர்த்தி திருமேனிகளைப் படமெடுக்கத் தவறி விட்டேன்..
மேலுள்ள இரு படங்களையும் தந்த இணையத்திற்கு நன்றி
கொள்ளிடத்தில் கீழணை (அணைக்கரை) கட்டுவதற்காக அன்றைய ஆட்சியாளர்களால்
இக்கோயில் திருமாளிகைத் திருச்சுற்றின் கற்கள் பயன்படுத்தப்பட்டதாக பள்ளியில் படித்திருக்கின்றேன்..
சிதைவுகள் கண் முன்னே கிடக்கின்றன..
இயன்ற வரை படம் எடுத்துள்ளேன்..
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. அழகான படங்கள். முதல் படம் (கோவிலின் முகப்பு) மிக அழகாக இருக்கிறது. கங்கை கொண்ட சோழ புரம் கோவிலின் கோபுர தரிசனங்கள் கிடைக்கப் பெற்றேன். ஆவணி ஞாயிறன்று இறைவனின் தரிசனமும் கிடைத்தது மிக மகிழ்வாக உள்ளது. இக்கோவில் இது வரையில் வந்ததில்லை. அதற்கும் "அவன்" அழைக்க வேண்டும். ஆனால், உங்கள் பதிவின் மூலம் இன்று கோவில் தரிசனம் கிடைத்ததே பெரும் பாக்கியமாக உணர்கிறேன். அடுத்தப் பகிர்வுக்கும், படங்களுக்கும் காத்திருக்கிறேன். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இந்த இடத்தில் எடுக்க எடுக்க தாகம் தீராமல் இன்னும் இன்னும் படங்கள் எடுத்துக் கொண்டே இருக்கத்தோன்றும் கலை அழகு. நான் சென்றபோது சில சிற்பங்கள் வெளியே வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அவை இன்னும் அப்படியே வெளியில்தான் நிற்கின்றனவா, இடம் ஒதுக்கி விட்டார்களா?
பதிலளிநீக்குநான் சென்றபோது மதியம் பனிரெண்டு மணி சுமார் என்பதால் வெளி அழகை மட்டும்தான் ரசிக்க முடிந்தது. ஸ்வாமியை தரிசிக்க முடியவில்லை.
பதிலளிநீக்குஇந்தக் கோவிலை தஞ்சைப் பெரிய கோவிலுக்கு இணையாக அல்லது அதற்கும் கொஞ்சம் அதிகமாக கட்ட வேண்டும் என்று நினைத்த ராஜேந்திரனின் எண்ணத்துக்கு குந்தவை தடை போட்டார் என்று படித்ததாக ஞாபகம்!
பதிலளிநீக்கு