நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூலை 09, 2025

நலம் வாழ்க

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 25
புதன்கிழமை


திங்கள் பதிவு..
வந்ததுக்கு நாலு இட்லி  மட்டும் தான்!

இன்றைய பதிவில் ஆரோக்கிய குறிப்புகள் சில..

தக்கதொரு பாரம்பரிய மருத்துவரைக் கலந்து கொள்வது நல்லது..

பார்வை தெளிவாக இருக்க, சில உணவுப் பழக்க வழக்கங்கள்..

வைட்டமின் A ,C,  மற்றும் E நிறைந்த உணவுகளைச் சாப்பிடுதல்..

பாதாம், வெண்ணெய், பூசணி விதைகள் ஆரஞ்சு ,, கேரட் கீரைகள், கொட்டைகள், விதைகள் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்வது..

கண்களை அடிக்கடி சிமிட்டுதல், போதுமான தூக்கம், கண் பயிற்சி..

மூட்டு வலி நீங்க, ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள், மஞ்சள், மற்றும் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

மஞ்சளில் உள்ள குர்குமின் மூட்டு வலியைப் போக்கும்..

முருங்கை விதை , சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றது..

முருங்கை விதையில் துத்தநாகம், வைட்டமின் A , இரும்புச் சத்து, கால்சியம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் உள்ளன..

சிறுநீரகத்தில் நச்சு சேராமல்  முருங்கை விதை தடுக்கின்றது..

முருங்கை விதையை எப்படிப் பயன்படுத்துவது!?..

தினமும் ஐந்து முருங்கை விதைகளை எடுத்து நெய்யில் வறுத்து பொடியாக அரைத்து சுடு சோற்றில் பிசைந்து சாப்பிடலாம்.. அல்லது பாலுடன் சேர்த்துக் காய்ச்சி அருந்தலாம். 

முருங்கை - ஊட்டச் சத்து மிக்க 
விதைகளுள் ஒன்று..

நமது நலம்
நமது கையில்

ஓம் சிவாய நம ஓம்
**

4 கருத்துகள்:

  1. பெரும்பாலும் ஓரளவுக்கு எல்லாம் ​தினசரி சேர்த்துக் கொள்ளும் உணவுதான்.  திட்டமிட்டு சாப்பிட்டால் நன்மை பெறலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்...

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. முருங்கை விதை இதுவரை பார்த்ததே இல்லை என்று நினைக்கிறேன்! அதை அப்படியே சாப்பிட வேறு சாப்பிடலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முற்றிய காய்களைப் பார்த்ததில்லை என்பது ஆச்சர்யம் தான்..

      இங்கே நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கின்றது..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..