நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி முதல் நாள்
ஞாயிற்றுக்கிழமை
ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் இருந்து புறப்பட்ட பல்லக்குகள்
திட்டை ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் கோயில்
குளமங்கலம்,
கூடலூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
கடகடப்பை ஸ்ரீ ராஜராஜேஸ்வரர் கோயில்
புன்னை நல்லூர் ஸ்ரீ கைலாச நாதர் கோயில்களில் தங்கி மறுநாள் காலையில் தஞ்சை கீழவாசல் ஸ்ரீ பூமாலை வைத்திய நாதர் கோயிலில் காலை சந்தி பூஜை நடந்த பின் கீழவாசல் கோட்டை வழியாக அரண்மனைக்கு எழுந்தருளி கீழ ராஜவீதி தெற்கு ராஜவீதிகளில் பவனி வந்தபின் மேல ராஜவீதி ஸ்ரீ கொங்கணேஸ்வரர் கோயிலில் உச்சி கால பூஜை கண்டருளி வடக்கு ராஜவீதியில் பவனி வந்து கரந்தைக்குள் பிரவேசம் ஆகின..
கரந்தை ராஜவீதி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பல்லக்குகளுக்கு வரவேற்பும் சாயரட்சை பூஜையும்...
வீட்டுக்கு வீடு மங்கல ஆரத்தி...
முன்னிரவுப் போதில் ஆலயப் பிரவேசம்..
இரவு ஒன்பது மணியளவில் பதுமை மாலையிட
சிவகண வாத்தியங்கள் முழங்க - மகா ஆரத்தியுடன் யதா ஸ்தானம் சேர்ந்தனர்..
ஏழூர் சென்று விட்டுத் திரும்புகின்ற பல்லக்குகளை வரவேற்பதற்கு
கடும் கூட்டம்.. மக்கள் நெரிசல்..
வீட்டில் தரிசனம் செய்து விட்டு வந்தனர்..
என்னால் கோயிலுக்குச் செல்வதற்கு இயலவில்லை...
நற்கொடிமேல் விடையுயர்த்த நம்பன் செம்பங்
குடி நல்லக்குடி நளி நாட்டியத்தான் குடி
கற்குடி தென் களக்குடி செங் காட்டங்குடி
கருந்திட்டைக்குடி கடையக்குடி காணுங்கால்
விற்குடிவேள் விக்குடி நல்வேட்டக் குடி
வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்குடி
புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி
புதுக்குடியும் போற்ற இடர் போகுமன்றே.. 6/71/3
-: திருநாவுக்கரசர் :-
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
"ஏழூர் சென்று வந்த பல்லக்குகள் காண்பதற்கு சனக்கூட்டம் " ஆவலுடன் அற்புதமான காட்சியை காண்பதற்குத்தான் அடியார்கள் கூட்டமாக வந்திருப்பார்கள். நாங்களும் படங்களில் தரிசித்தோம். நன்றி.
பதிலளிநீக்குஓம் சிவாய நமக.
தங்கள் அன்பின் வருகையும் மகிழ்வான
நீக்குகருத்தும் மகிழ்ச்சி..
நன்றி மாதேவி
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. பானங்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. விழா கண்டு திரும்பி வந்த பல்லக்குகளுக்கு, ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற வரவேற்பும், சாயரட்சை பூஜையும் சிறப்பாக நடைபெற்றதற்கு மகிழ்ச்சி.
அவ்வூர் மக்கள் பக்தியுடன் இந்த பாரம்பரியமான வைபவங்களை கொண்டாடி களித்ததும், மகிழ்ச்சியை தருகிறது. உங்கள் தயவால் நானும் கண்டு களித்தேன். இறைவன் அனைவருக்கும் நலன்களை தர வேண்டுமென மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
சிவாய நம ஓம். 🙏. ஓம் நமசிவாய. 🙏.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகையும் மகிழ்வான
பதிலளிநீக்குகருத்தும் மகிழ்ச்சி..
நன்றியம்மா