நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, அக்டோபர் 09, 2021

கோவிந்த தரிசனம் 4

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி மாதத்தின் நான்காவது
சனிக்கிழமையாகிய இன்று 
ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வார்
அருளிச் செய்த திருமாலை
திருப்பாசுரங்களுடன்
ஸ்ரீ ரங்கநாதப் பெருமான்
திவ்ய தரிசனம்..


ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வார்
அருளிச் செய்த திருமாலை


பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே
ஆயர்தம் கொழுந்தே. என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகரு ளானே.. 873

விரும்பிநின் றேத்த மாட்டேன்
விதியிலேன் மதியொன் றில்லை
இரும்புபோல் வலிய நெஞ்சம்
இறையிறை யுருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த
அரங்கமா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டேன்
கண்ணிணை களிக்கு மாறே..888


இனிதிரைத் திவலை மோத
எறியும்தண் பரவை மீதே
தனிகிடந் தரசு செய்யும்
தாமரைக் கண்ண னெம்மான்
கனியிருந் தனைய செவ்வாய்க்
கண்ணணைக் கண்ட கண்கள்
பனியரும் புதிரு மாலோ
எஞ்செய்கேன் பாவி யேனே.. 889

குடதிசை முடியை வைத்துக்
குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித்
தென்திசை யிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவு ளெந்தை
அரவணைத் துயிலு மாகண்டு
உடலெனக் குருகு மாலோ
எஞ்செய்கே னுலகத் தீரே.. 890


பாயுநீ ரரங்கந் தன்னுள்
பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திருநன் மார்பும்
மரகத வுருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும்
துவரிதழ் பவள வாயும்
ஆயசீர் முடியும் தேசும்
அடியரோர்க் ககல லாமே?.. 891

பணிவினால் மனம தொன்றிப்
பவளவா யரங்க னார்க்கு
துணிவினால் வாழ மாட்டாத்
தொல்லைநெஞ் சே நீ சொல்லாய்
அணியனார் செம்பொ னாய
அருவரை யனைய கோயில்
மணியனார் கிடந்த வாற்றை
மனத்தினால் நினைக்க லாமே?.. 892

பேசிற்றே பேச லல்லால்
பெருமையொன் றுணர லாகாது
ஆசற்றார் தங்கட் கல்லால்
அறியலா வானு மல்லன்
மாசற்றார் மனத்து ளானை
வணங்கிநா மிருப்ப தல்லால்
பேசத்தா னாவ துண்டோ
பேதைநெஞ் சே நீ சொல்லாய்.. 893


கங்கையிற்புனித மாய
காவிரி நடுவு பாட்டு
பொங்குநீர் பரந்து பாயும்
பூம்பொழி லரங்கந் தன்னுள்
எங்கள்மா லிறைவ னீசன்
கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன்
ஏழையே னேழை யேனே.. 894

வெள்ளநீர் பரந்து பாயும்
விரிபொழி லரங்கந் தன்னுள்
கள்ளனார் கிடந்த வாறும்
கமலநன் முகமும் கண்டு
உள்ளமே வலியை போலும்
ஒருவனென் றுணர மாட்டாய்
கள்ளமே காதல் செய்துன்
கள்ளத்தே கழிக்கின் றாயே.. 895

குளித்துமூன் றனலை யோம்பும்
குறிகொளந் தணமை தன்னை
ஒளித்திட்டே னென்க ணில்லை
நின்கணும் பத்த னல்லேன்
களிப்பதென் கொண்டு நம்பீ
கடல்வண்ணா கதறு கின்றேன்
அளித்தெனக் கருள்செய் கண்டாய்
அரங்கமா நகரு ளானே.. 896


போதெல்லாம் போது கொண்டுன்
பொன்னடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டுன்
திருக்குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்ச மன்பு
கலந்திலே னதுதன் னாலே
ஏதிலே னரங்கர்க்கு எல்லே
எஞ்செய்வான் தோன்றி னேனே.. 897

குரங்குகள் மலையை தூக்கக்
குளித்துத்தாம் புரண்டிட்டோ டி
தரங்கநீ ரடைக்க லுற்ற
சலமிலா அணிலம் போலேன்
மரங்கள்போல் வலிய நெஞ்சம்
வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்க் காட்செய் யாதே
அளியத்தே னயர்க்கின் றேனே.. 898


உம்பரா லறிய லாகா
ஒளியுளார் ஆனைக் காகி
செம்புலா லுண்டு வாழும்
முதலைமேல் சீறி வந்தார்
நம்பர மாய துண்டே
நாய்களோம் சிறுமை யோரா
எம்பிராற் காட்செய் யாதே
எஞ்செய்வான் தோன்றினேனே.. 899

ஊரிலேன் காணி யில்லை
உறவுமற் றொருவ ரில்லை
பாரில்நின் பாத மூலம்
பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ண னே என்
கண்ணனே கதறு கின்றேன்
ஆருளர்க் களைக் ணம்மா
அரங்கமா நகரு ளானே..900

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
ஃஃஃ

15 கருத்துகள்:

 1. திருமாலைப் பாடி திருமாலைத் துதிப்போம்.  நான்காவது புரட்டாசி சனிக்கிழமையைக் கொண்டாடுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களது வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. இரண்டு வருடங்களாக அரங்கனை இவ்விதம் தான் தரிசித்து வருகிறோம். கோயில்களில் திங்கள் முதல் வியாழன் வரை கூட்டம் அதிகம் இருப்பதால் போக முடியவில்லை. என்னால் இப்போதிருக்கும் நிலையில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. என்று கிடைக்குமோ அரங்கன் தரிசனம்! இங்கே கண்ணார, மனமாரப் பார்த்துக் கொண்டேன். ரங்க ரங்க ரங்கா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோயில்களில் தரிசனம் தடை பட்டிருக்கின்றது.. இந்நிலைமை மாறுவதற்கு வேண்டிக் கொள்வோம்..

   தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
 3. பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்களது வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. அருமையான பதிவு

  அரங்கன் புகழ் பாடி தரிசனம் செய்து கொண்டேன்.
  அரங்கன் அனைவரையும் நலமாக வைத்து இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   வாழ்க வையகம்..

   நீக்கு
 6. நல்ல பதிவு. மனதிற்கு இதம்.

  மிக்க நன்றி

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் துளசிதரன்..
   தங்களது வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. அ ண்ணா தாமதமாகிவிட்டது!

  பச்சைமா மலைபோல் மேனி...

  குடதிசை முடியை வைத்து, ஊரிலேன் காணி இல்லை பாடல்கள் மனனம் செய்திருக்கிறேன் முன்பு ...இப்போது மீண்டும் வாசித்த போது நினைவில் வந்தது. பச்சைமா மலை போல் மேனி ராகத்துடன் விருத்தம் கற்றதுண்டு...

  மிக்க நன்றி அண்ணா. நல்ல தரிசனம்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் கீதா..
   தங்களது வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   வாழ்க வளமுடன்..

   நீக்கு
 8. ரங்கநாயகித் தாயாரையும், பெருமாளையும் தரிசித்துக் கொண்டதில் ரொம்ப சந்தோஷம். நவராத்திரி வெள்ளியன்று மட்டுமே தாயாரின் திருவடி தரிசனம் கிடைக்கும்.

  பதிலளிநீக்கு