நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, அக்டோபர் 17, 2021

எங்கெங்கு காணினும்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
கடந்த
வெள்ளிக்கிழமை
விஜய தசமி நாளன்று
வெளியிடுவதற்காக
வைக்கப்பட்டிருந்த
பதிவு இது..

எங்கள் பிளாக்கில்
எழுப்பப்பட்ட கேள்வி
ஒன்றினால்
சற்றே தாமதம்..


பாவேந்தர்
பாரதிதாசன் அவர்கள்
மகாகவியின்
முன்பாக இயற்றிய பாடல்
என்பது மேலதிகச் செய்தி..எங்கெங்கு காணினும் சக்தியடா - தம்பி
ஏழு கடல் அவள் வண்ணமடா!..


அங்கு தங்கும் வெளியினிற் கோடியண்டம் - அந்தத் தாயின்
கைப்பந்தென ஓடுமடா
கங்குலில் ஏழு முகிலினமும்  வந்து கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ? - எனில்
மங்கை நகைத்த ஒலியெனலாம் - அவள்
மந்த நகையங்கு மின்னுதடா!..


எங்கெங்கு காணினும் சக்தியடா!..

காளை ஒருவன் கவிச் சுவையைக் - கரை
காண நினைத்த முழு நினைப்பில் - அன்னை
தோளசைத் தங்கு நடம்புரிவாள் - அவன் தொல்லறிவாளர் திறம் பெறுவான் - ஒரு
வாளைச் சுழற்றும் விசையினிலே - இந்த
வைய முழுவதும் துண்டு செய்வேன் – என
நீள இடையின்றி நீ நினைந்தால் அம்மை நேர்படுவாள் உன்றன் தோளினிலே!..


எங்கெங்கு காணினும்
சக்தியடா!..
-:-
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
-:--:--:-

8 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. சக்தி பரமேஸ்வரி அன்னையை தரிசித்துக் கொண்டேன். படங்கள் அனைத்தும் அழகாக உள்ளது. படங்களும், அதற்கு பொருத்தமான பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் சக்தி தரும் கவிதை பாடல் வரிகளும் அருமை. ஓம் சக்தி. ஓம் சக்தி. ஆதிபராசக்தி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 2. நம்ம வீட்டு தெய்வம் படத்தில் குன்னக்குடி விஸ்வநாதன் இசையில் டி எம் எஸ் இந்தப் பாடலைப் பாடி இருக்கிறார்.

  https://www.youtube.com/watch?v=UJjp-TLCMVQ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருத்தம்!  - நம்ம வீட்டு தெய்வம் படத்தில் குன்னக்குடி வைத்தியநாதன்  இசையில் டி எம் எஸ் இந்தப் பாடலைப் பாடி இருக்கிறார்.

   https://www.youtube.com/watch?v=UJjp-TLCMVQ

   நீக்கு
 3. அழகான படங்களுடன் அருமையான பாடல் பகிர்வுக்கு நன்றி. இது பாரதிதாசன் கவிதை என்பதே இப்போத் தான் அறிந்தேன். :) பாரதியாருடையது என்றே நினைத்திருந்தேன். பாரதிதாசனை அதிகம் படிக்காததால் தெரியவில்லை. :)

  பதிலளிநீக்கு
 4. அருமையான பாடல்.

  பாரதிதாசன் என்பதற்குப் பொருத்தமாக இருக்கிறதோ பாடல்! பாரதியின் வரிகள் போலவே...பாரதிதாசன் பாடல் என்பதும் இப்போதுதான் அறிகிறேன் அண்ணா.

  கீதா

  பதிலளிநீக்கு
 5. அருமையான பாடல். படங்களும் அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. பாடல் வரிகளை படிக்கும் போது டி.எம்.எஸ் அவகள் குரல் ஒலிக்கிறது.
  மிக அருமையான பாடல் இது.

  படங்கள் எல்லாம் நல்ல தேர்வு.

  ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.

  பதிலளிநீக்கு