நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், அக்டோபர் 14, 2021

கலைமகள் வாழ்க

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
ஸ்ரீ சரஸ்வதி பூஜை..

நாடெங்கும் 
மடமை எனும்
இருள் நீங்கி
நல்லறிவு எனும்
பேரொளி பரவுதற்கு
அன்னை கலைவாணியின்
மலர்ப்பதங்களை
இந்நாளில்
வேண்டிக் கொள்வோம்..

அனைவருக்கும்
அன்பின் இனிய 
சரஸ்வதி பூஜை
நல்வாழ்த்துகள்..


ஸரஸ்வதி நமஸ் துப்யம்
வரதே காம ரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி
ஸித்திர் பவது மே ஸதா..
-:-
இன்றைய பதிவில்
மகாகவி பாரதியாரின்
திருப்பாடலுடன்
கலைமகள் தரிசனம்..


வெள்ளைக் கமலத்திலே 
அவள் வீற்றிருப்பாள் 
புகழ் ஏற்றிருப்பாள்..

கொள்ளைக் கனி
இசை தான் 
நன்கு கொட்டு நல் 
யாழினைக் கொண்டிருப்பாள்...

(வெள்ளைக் கமலத்திலே)

 சொற்படு நயம் அறிவார்
இசை தோய்ந்திடத்
தொகுப்பதில் சுவை அறிவார் 
விற்பனத் தமிழ்ப் புலவோர் 
அந்த மேலவர் நாவெனும் 
மலர் பதத்தாள்..

(வெள்ளைக் கமலத்திலே)

கள்ளை கடலமுதை நிகர்
கண்டதோர் பூந்தமிழ்க்
கவி சொல்லவே
பிள்ளை பருவத்திலே 
என்னைப் பேண வந்தாள்
அருள் பூண வந்தாள்..

(வெள்ளைக் கமலத்திலே)

வாணியைச் சரண் புகுந்தேன்
அருள் வாக்களிப்பாள் 
எனத் திடம் மிகுந்தேன் 
பேணிய பெரும் தவத்தாள் 
நிலம் பெயரளவும் 
பெயர் பெயராதாள்..

வெள்ளைக் கமலத்திலே
அவள் வீற்றிருப்பாள் 
புகழ் ஏற்றிருப்பாள்...
-:-


ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை - தூய
உருப் பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே
இருப்பள் இங்கு வாராது இடர்..
-: கவிச்சக்கரவர்த்தி கம்பர் :-
-:-
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
-:- -:- -:-

5 கருத்துகள்:

 1. சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.  பாரதியின் பாட்டு சூலமங்கலம் சகோதரி குரலில் மனதில் ஒலிக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு..
   மகிழ்ச்சி.. நன்றி...

   அன்பின் நல்வாழ்த்துகளுடன்..

   நீக்கு
 2. சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.
  பாடல்களும், படமும் அருமை.

  பதிலளிநீக்கு
 3. இனிய சரஸ்வதி பூஜை விஜயதசமி வாழ்த்துகள் ஜி

  பதிலளிநீக்கு