நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மார்ச் 26, 2021

ஆழித் தேரோட்டம்

              

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

நேற்று
ஆரூர்ப் பெரும்பதியில்
நிகழ்ந்த
ஆழித் தேரோட்டத்தின்
சில காட்சிகள்...

திருத்தலம் - திரு ஆரூர்
பஞ்ச பூதத் திருத்தலங்களுள்
மண்ணின் பகுப்பு

இறைவன் சுயம்புமூர்த்தி
புற்று மண்..


இறைவன்
ஸ்ரீவன்மீகநாதர்
(புற்றிடங்கொண்டார்)
ஸ்ரீதியாகராஜ மூர்த்தி
(விடங்கப் பெருமான்)


அம்பிகை
ஸ்ரீ அல்லியங்கோதை
ஸ்ரீகமலாம்பிகை

தீர்த்தம் - கமலாலயத் திருக்குளம்
தல விருட்சம் - பாதிரி

நால்வர் பாடல் பெற்ற
திருத்தலம்..

திருமூலட்டானம் என்பதும்
ஆழித்திருத்தேர் என்பதும் சிறப்பு..

திருத்தேரோட்டத்தின்
காணொளிகளை
வலை தலத்தில்
பகிர்ந்தவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
 

வல்லியந் தோலுடையான் வளர்திங்கட்
கண்ணியினான் வாய்த்த
நல்லிய நான்முகத்தோன்
தலையின் நறவேற்றான்
அல்லியங்கோதை தன்னை ஆகத்
தமர்ந்தருளி ஆரூர்ப்
புல்லிய புண்ணியனைத் தொழுவாரும் புண்ணியரே.. (1/108)
-: திருஞானசம்பந்தர் :-


மட்டுவார் குழலாளொடு மால்விடை
இட்டமா உகந்தேறும் இறைவனார்
கட்டுவாங்கங் கனல்மழு மான் தனோடு
அட்டமாம் புயமாகும் ஆரூரரே.. (5/6)
-: திருநாவுக்கரசர் :-


முன்னெறி வானவர் கூடித் தொழுதேத்து முழுமுதலை
அந்நெறியை அமரர் தொழும்
நாயகனை அடியார்கள்
செந்நெறியைத் தேவர்குலக்
கொழுந்தை மறந்திங்ஙனம் நான்
என்னறிவான் பிரிந்திருக்கேன்
என் ஆரூர் இறைவனையே.. (7/51)
-: சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-


பூங்கமலத்தயனொடு மால் அறியாத நெறியானே
கோங்கலர்சேர் குவிமுலையாள் கூறாவெண் ணீறாடீ
ஓங்கெயில்சூழ் திரு ஆரூர்
உடையானே அடியேன் நின்
பூங்கழல்கள் அவையல்லாது
எவையாதும் புகழேனே!..
-: மாணிக்கவாசகர் :-

 ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

7 கருத்துகள்:

  1. ப்ரம்மாண்ட தேர் பவனி... கண்ளையும் மனதையும் மயக்குகிறது. தியாகேசா...

    பதிலளிநீக்கு
  2. நேற்று எங்கள் குடும்ப க்ரூப்பிலும் இவை பகிரப்பட்டன.  கூடும் கூட்டம் ஒரு பக்கம் சிலிர்ப்பாய் இருந்தாலும் இன்னொரு பக்கம் பயமாகவும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. வீடியோக்கள் கிடைத்தன. தொலைக்காட்சியிலும் பார்த்தேன். நல்ல கூட்டம். பயமாயும் இருந்தது. யாருக்கும் கொரோனா அச்சமே இல்லை.

    பதிலளிநீக்கு
  4. எனக்கும் காணொளிகள் வந்தன பார்த்தேன்.
    திருவாரூர் தேர் பார்க்க திருவெண்காட்டில் இருக்கும் போது அழைத்து சென்றார்கள். பார்த்து இருக்கிறேன். ஒவ்வொருவர் வீடும் விழா கோலம் கொண்டு இருக்கும். உறவினர்கள் குழுமி இருப்பார்கள்.
    எல்லோரும் உடல் நலத்தோடு இருக்க தியாகராஜர் அருள்புரியவேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான காணொளிகள். கண்டு ரசித்தேன் - மீண்டும்!

    நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    அருமையான பதிவு. காணொளிகள் கண்டேன். திருவாரூர் தேரின் பிரமாண்ட அழகு மனதை ஈர்த்தது. ஓடும் தேரை தரிசிப்பது சிறப்பு. தங்கள் புண்ணியத்தில் இன்று ஓடுகிற தேரோட்டத்தை கண் குளிர கண்டு கொண்டேன். தியாகராஜரையும் மனப்பூர்வமாக தரிசித்துக் கொண்டேன். இங்கும் எவ்வளவு கூட்டம்... பக்திப் பெருக்கில் கூடியிருக்கும் மக்களை இறைவன் காக்க வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..